Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விசேட சந்திப்பு


​மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர அவர்களை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மிக முக்கியமானதும் விரிவானதுமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.


​இந்த விசேட சந்திப்பின் போது, மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாவட்டத்தின் நீண்டகாலத் தேவைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். 


அத்துடன் சில உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு மிக்க பதவியில் உள்ள உயர் அதிகாரிகளும் அரச சட்டத்தை தவிர்த்து அரசியல் சார்பு ராஜ விசுவாசத்தை பின்பற்றுவதாவும் மக்கள் குற்றம் சுமத்தி நிற்பது பெரும் கவலை அளிப்பதாகவும் இங்கு குறிப்பிட்டார்,


மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே தமது பிரதான இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் இந்த சந்திப்ப்பின் பிரதான நோக்கம் தொடர்பில் தெரிவித்தார் .


கிழக்கு மாகாண ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விசேட சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.