Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கைக்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்த கடற்படை விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதற்கான விருது வழங்கள்

2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களைப் பாராட்டி பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 05) இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 13 வது ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சாதாரண கடற்படை வீராங்கனை கே.எஸ்.எம். பெரேரா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4X400M அஞ்சலோட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 4X400M கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400M தனிநபர் போட்டியில் மூன்றாம் இடத்தையும், 4X400M அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 4X400M கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கடற்படைக்குப் பெருமை சேர்த்த தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சாதாரண கடற்படை வீராங்கனை பி.எஸ்.எல். மெண்டிஸ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல் நிகழ்வில் மூன்றாம் இடத்தைப் பெற்ற கடற்படை வீராங்கனை (பெண்) சந்திரசேகர பாராட்டப்பட்டார். 2025 ஆம் ஆண்டு மாலைதீவில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கடற்கரை ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தேசிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், அவ்வணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரன் பி.சி சந்திரதாச, கடற்படை வீரன் டபிள்யூ.எச்.பி. டி சில்வா, கடற்படை வீரன் கே.எம்.ஆர்.எஸ் பண்டார, கடற்படை வீரன் எச்.ஏ.டி ஹெட்டிகொட மற்றும் கடற்படை வீரன் எச்.எம்.டி.எஸ் ரத்நாயக்க ஆகிய கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 6 ஆவது ஆசிய கடற்கரை கபடி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை (பெண்) ஏ.பி.எம் ஹன்சமாலி மற்றும் திறமைமிகு கடற்படை வீராங்கனை (பெண்) ஆர் பிரியவர்ணா ஆகிய கடற்படை வீராங்கனைகளும் இதன்போது பாராட்டப்பட்டனர்.

பரிசு பெற்றவர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கிய பின்னர் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, இலங்கைகக்கும் கடற்படைக்கும் பெருமையையும் புகழையும் சேர்க்கும் வகையில் தமது விளையாட்டுத் திறமைகளை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தியமைக்காக தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் இந்திக குணவர்தன, விளையாட்டுத்துறை பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க, விளையாட்டுத் துறைத் தலைவர்கள், விளையாட்டுத் துறைகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் இலங்கைக்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்த கடற்படை விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதற்கான விருது வழங்கள் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.