(සිංහල පරිවර්තනය සමඟ) NPP அரசாங்கம் அறிமுகப்படுத்தும்! கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" NPP ආයතනය හඳුන්වා දෙයි! ගමේ එකමුතුවේ ජීව නාඩි "අත්තම"
சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதே 'அத்தம' வின் இலக்காகும்.
"க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகக் தத்துவமாகும்.
இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் "அத்தம" என்பது இலாப நோக்கற்ற, கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிக்கிறது. கிராமப்புறங்களில், குறிப்பாக விவசாய சமூகங்களிடையே நிலவும் உன்னத வழக்கத்தின் படி பணப் பரிமாற்றம் இல்லாமல் ஒருவருக்கொருவர் உடல் உழைப்பைத் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்வது முக்கிமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் திட்ட வரைபிற்கு உயிரூட்டியாகவும், அதை மக்களின் அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான மிக உன்னதமான இயங்கு சக்தியாக இந்த 'அத்தம' தத்துவம் விளங்குகிறது. மறையும் கிராமியக் கூட்டுறவு வழக்கமாகவும், விவசாய வாழ்வியலின் ஆகச்சிறந்த அடையாளமாகவும் விளங்குகின்றது. இது ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவி செய்து கொள்ளும் (கூட்டுழைப்பு) முறையைக் குறிக்கின்றது.
ஒரு விவசாயியின் நிலத்தில் வேலை செய்ய மற்றவர்கள் உதவுவதும், பின்னர் அதேபோல் அவர்களின் நிலங்களில் மற்றவர்களும் சென்று வேலை செய்து அந்த உழைப்பைத் திருப்பிச் செலுத்துவதும் இதன் முக்கிய எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதனால் கிராம மக்களிடையே சுயநலமற்ற கூட்டுறவு, ஒற்றுமை மற்றும் வலுவான சமூக உறவு வளர்த்தெடுக்கபடும்.
அந்த வகையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்தத் தொன்மையான உன்னதப் பண்பை மீண்டும் இலங்கை மக்களிடையே புதுப்பிக்கும் நோக்கில், அரச-தனியார் கூட்டுடன் "அத்தம" தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் போன்ற தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த தேசிய அளவிலான திட்டங்களை தற்பொழுது முன்னெடுத்து வருகின்றது.
மேலும், சகோதரத்துவத்தையும், மக்களிடையிலான உன்னத பண்பையும் பரவலாக்கும் நோக்கில் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டமானது, விவசாய துறையில் நெல் அறுவடை, விதைப்பு, வயல் ஆயத்தப்படுத்துதல் போன்ற குறுகிய காலத்தில் அதிக ஆட்கள் தேவைப்படும் விவசாய வேலைகளை எவ்வித பொருளாதாரச் சுமையுமின்றி வெற்றிகரமாக முடிக்க பெருவுதவியாக அமையும்.
அத்தோடு, கூலி ஆட்களுக்கான அதிகப்படியான செலவினங்களைக் குறைத்து, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்ப்பு உறுதி செய்யப்படும். விவசாயம் மட்டுமன்றி, கிராமத்தின் பொதுக் கிணறுகளைத் தூய்மைப்படுத்துதல், வீதிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை சிரமதானம் செய்தல் போன்ற பொதுநலக் காரியங்களை கூட்டுச் செயல்பாடாக மாற்றுவதற்கு வழியமைத்து கொடுக்கும்.
அதனால் சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதோடு, கடந்த காலங்களில் அரசியலுக்காக இன, மத, மொழி மற்றும் பிரதேசவாத பிரித்தாளும் கொள்கைத் தந்திரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.
அரசாங்கதம் 2025 ஜனவரி முதலாம் திகதி நாட்டினுடையதேசிய வேலைத்திட்டமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் "க்ளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.
"அத்தம" (Aththama) என்பதும் க்ளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு தேசிய தூய்மை தின நிகழ்ச்சித் திட்டமாகவே உள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்திய "க்ளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டமானது, வெறும் பௌதிகச் சூழலைத் தூய்மைப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், சமூகம் மற்றும் நெறிமுறை சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய உந்து சக்தியாக ‘அத்தம’ முறையின் தத்துவம் விளங்குகிறது.
மேலும், "க்ளீன் ஸ்ரீ லங்கா" திட்டமானது சட்டம் அல்லது அரசாங்க அதிகாரத்தின் மூலம் கட்டாயப்படுத்திச் செய்யும் ஒன்றல்ல. அது ஒட்டுமொத்த மக்களினதும் தன்னார்வ மற்றும் கூட்டுப் பங்களிப்புடன் (Voluntary Participation) முன்னெடுக்கப்பட வேண்டியதாகும். இந்தத் தன்னார்வக் கூட்டு உழைப்புக்கு ‘அத்தம’ முறையே பிரதான அடித்தளமாக அமைகிறது. ஆகவேதான் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டம் சமூக, சுற்றுச் சூழல் மற்றும் நெறிமுறை (Social, Environmental, and Ethical Pillars) ஆகிய மூன்று முக்கிய தூண்களைக் பிரதானமாக கொண்டுள்ளது.
கிராமிய மட்டத்தில் உள்ள பழக்க வழக்கங்கள் மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் தூய்மையான மற்றும் பசுமையாகை மாற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப்பங்களிப்பினை செயற்பாட்டு வடிவத்தில் பரவலாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
அதனடிப்படையில், இவ்வருடம் (2026) ஆகஸ்ட் 08 முதல் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரச் சனிக்கிழமையன்று 4 மணிநேரம் (காலை 8:00 முதல் நண்பகல் 12:00 வரை) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற செயற்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகின்றது.
இதனை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கையில் பல்லின சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் ‘சகோதரத்துவ செயற்திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தகைய மக்கள் சந்திப்புகளும் விழிப்புணர்வுப் பேரணிகளும் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த பின்னர், தங்களது "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் இந்த நல்லிணக்க முயற்சிகளை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இன, மத மற்றும் மொழி ரீதியான பிளவுகளைக் களைவது இதன் முதன்மைக் குறிக்கோளாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என அனைத்து சமூகங்களையும் "இலங்கையர்" என்ற ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்க இந்தத் திட்டம் முயல்கிறது.
கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இனம், மதம் பாராது அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரச நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதன் மூலம், வளங்கள் அனைத்தும் நாட்டின் அடித்தட்டு மக்கள் வரை சமமாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி (NPP) நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் சகோதரத்துவ மற்றும் நல்லிணக்கச் செயற்திட்டங்கள், இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில், கிராமங்களில் பௌதிக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மீக/நெறிமுறைசார் ஒழுக்கங்களை வளர்த்தெடுக்க கிராம மக்கள் அனைவரும் ஒரு கூட்டுக்குடும்பமாக ‘அத்தம’ எண்ணக்கருவின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றும் வாய்ப்புக்களைப் பெருகின்றனர்.
மக்கள் தங்களின் உழைப்பைத் தாமாகவே முன்வந்து வழங்குவதால், தூய்மைப் பணிகளுக்கான அரசாங்கத்தின் பௌதீகச் செலவுகள் குறைகின்றன. அரசாங்க ஊழியர்கள் மத்தியில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு இது உதவியாக அமையும். அரச நிறுவனங்களில் தேங்கிக் கிடக்கும் தேவையற்ற கோப்புகள் மற்றும் உபகரணங்களை அகற்றி, சுத்தமான மற்றும் அணுகக்கூடிய சேவைச் சூழலை உருவாக்குகின்றது.
அதனால், அரசாங்கத்தின் திட்டமாக மட்டும் இதனைப் பார்க்காமல், "வளமான தேசம் - அழகான வாழ்க்கை" என்ற கொள்கை நோக்கத்தை அடைவதற்காக, ஒட்டுமொத்த பொதுமக்களையும் பொறுப்புணர்வுடன் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் பங்காளிகளாக்கவே இந்த "அத்தம" முறை பயன்படுத்தப்படுகிறது.
நாட்டை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் வேலை மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்த்துகிறது. ஒட்டுமொத்த பொதுமக்களையும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைத்து, சமூகத்தில் ஒற்றுமையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கிறது.
மிக முக்கியமாக, மக்கள் தங்களுக்குள் இருக்கும் வளங்களையும் உழைப்பையும் பகிர்ந்து கொள்வதன் மூலம், வெளிப்புறச் சுமைகளைக் குறைத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாக காரணமாக அமைகின்றது. ஆகவே இது அரசாங்கமும் மக்களும் கைகோர்த்து, நாட்டை முன்னேற்றுவதற்கான ஒரு நடைமுறை உத்தியாகவே முன்வைக்கப்படுகிறது.
"அத்தம’"என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமல்ல, அது சக மனிதர்கள் மீதான அரவணைப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வைக் குறிக்கும் குறியீடாகும். சூழலைத் தூய்மையாக வைப்பதும், ஊழலற்ற நேர்மையான சமூகத்தைக் கட்டியெழுப்புவதும் தனது தார்மீகப் பொறுப்பு என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்க இந்த அத்தமப் பண்பு உதவுகிறது.
எனவே, "க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகக் தத்துவமாகும்.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகை,
07-08-2026.
සිංහල පරිවර්තනය සමඟ) NPP அரசாங்கம் அறிமுகப்படுத்தும்! கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம"
NPP ආයතනය හඳුන්වා දෙයි! ගමේ එකමුතුවේ ජීව නාඩි "අත්තම"
දුප්පත් පොහොසත් භේදයකින් තොරව රැකියාවෙන් සියල්ලෝම සමාන වන සමානාත්මතා චින්තනයක් සමාජය තුළ ඇති කිරීම ‘ආත්ම’ හි අරමුණයි.
“පිරිසිදු ශ්රී ලංකාව” රජයේ ප්රතිපත්ති සැලැස්ම නම් “අත්තම” යනු එම සැලැස්ම ජනතාවගේ හදවතට ගෙන ගොස් සාර්ථක කර ගැනීමේ සමාජ දර්ශනයයි.
++++++++++++++++++++++++++
ශ්රී ලංකාවේ සාම්ප්රදායික සමාජ-ආර්ථික රාමුව තුළ "අත්තමා" යන්නෙන් අදහස් කරන්නේ ලාභ නොලබන, සාමූහික ශ්රම හුවමාරු පද්ධතියකි. ග්රාමීය ප්රදේශවල, විශේෂයෙන්ම ගොවි ප්රජාවන් අතර, මුදල් හුවමාරු නොවී තම ශ්රමය සමසේ බෙදා ගැනීමේ උතුම් චාරිත්රය වැදගත් ලෙස සැලකේ.
මෙම ‘ආතම’ දර්ශනය රජයේ සැලැස්මට පණ පොවන උත්තරීතර ගාමක බලවේගය වන අතර එය ජනතාවගේ දෛනික ජීවිතයේ කොටසක් බවට පත් කරයි. අතුරුදහන් වෙමින් පවතින ග්රාමීය සමුපකාර කෘෂිකාර්මික ජීවිතයේ සම්මතය සහ නිර්වචන ලක්ෂණයයි. එය එකිනෙකාට උපකාර කිරීමේ (සහයෝගීතාවය) මාරුවෙන් මාරුවට ක්රමයට යොමු කරයි.
එහි ප්රධාන අපේක්ෂාව වන්නේ ගොවියෙකුට ඔහුගේ ඉඩමේ වැඩ කිරීමට අන්යයන් උදව් කිරීමත්, පසුව තවත් අය ගොස් එම ශ්රමය ගෙවීමට තම ඉඩමේ වැඩ කිරීමයි. මේ අනුව ගැමියන් අතර පරාර්ථකාමී සහයෝගීතාව, එකමුතුකම හා ශක්තිමත් සමාජ සබඳතා වර්ධනය වනු ඇත.
ඒ ආකාරයට ශ්රී ලාංකේය ජනතාව අතර මෙම ඉපැරණි උදාර චරිතය පුනර්ජීවනය කිරීමේ අරමුණින් ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජනබල රජය මේ වන විට "අත්තම" ජාතික පවිත්රතා දින වැඩසටහන වැනි පවිත්රතාවය සහ පරිසර සංරක්ෂණය සම්බන්ධ ජාතික මට්ටමේ වැඩසටහන් ක්රියාත්මක කරමින් සිටී.
එපමණක් නොව ජනතාව අතර සහෝදරත්වය, උදාරත්වය පතුරුවාලීමේ අරමුණින් ක්රියාත්මක කර ඇති මෙම ව්යාපෘතිය ආර්ථික බරකින් තොරව වී අස්වනු නෙලීම, වැපිරීම, කුඹුරු සකස් කිරීම වැනි විශාල පිරිසක් අවශ්ය කරන කෘෂිකාර්මික කටයුතු කෙටි කාලයක් තුළ සාර්ථකව නිම කිරීමට කෘෂිකාර්මික ක්ෂේත්රයට මහත් රුකුලක් වනු ඇත.
මීට අමතරව, ශ්රමය සඳහා වන අධික වියදම් අඩු කර කුඩා ගොවීන්ගේ ජීවනෝපාය සුරක්ෂිතභාවය සහතික කෙරේ. කෘෂිකර්මාන්තයට අමතරව, ගමේ පොදු ළිං, මාර්ග සහ ආගමික සිද්ධස්ථාන පිරිසිදු කිරීම වැනි වාර්ගික ක්රියාකාරකම්වලට ද එය මග පාදයි.
ඒ නිසා සමාජයේ දුප්පත් පොහොසත් භේදයකින් තොරව රැකියාවෙන් සියල්ලෝම සමානය යන සමානාත්මතා චින්තනයක් ඇති කිරීමත් සමඟම අතීතයේ දේශපාලනය සඳහා ජාති, ආගම්, භාෂා, ප්රාදේශීයවාදී ප්රතිපත්තිමය උපක්රමවලට තිත තැබීමේ කටයුත්තක් ලෙසයි සැලකෙන්නේ.
රජයේ 2025 ජාතික වැඩසටහන "පිරිසිදු ශ්රී ලංකාව" ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් රටේ ජාතික වැඩසටහනක් ලෙස දියත් කරන ලදී.
"ඇත්තම" යනු පිවිතුරු ශ්රී ලංකා ජාතික වැඩසටහන යටතේ මහජන සහභාගීත්වයෙන් රටපුරා ක්රියාත්මක වන ජාතික පිරිසිදු දින වැඩසටහනකි.
"පිරිසිදු ශ්රී ලංකා" ජාතික වැඩසටහනේ අරමුණ වන්නේ භෞතික පරිසරය පිරිසිදු කිරීම පමණක් නොව, සමාජීය හා සදාචාරාත්මක වෙනසක් ඇති කිරීමය. මෙම යෝජනා ක්රමයේ සාර්ථකත්වය තීරණය කරන ප්රධාන ගාමක බලවේගය වන්නේ 'අත්තම' ක්රමයේ දර්ශනයයි.
එසේම "පිරිසිදු ශ්රී ලංකා" වැඩසටහන නීතියෙන් හෝ රාජ්ය අධිකාරියෙන් නියම කළ දෙයක් නොවේ. එය සමස්ත ජනතාවගේ ස්වේච්ඡාවෙන් සහ ඒකාබද්ධ සහභාගිත්වයෙන් සිදු කළ යුතුයි. 'ආතම' මෙම ස්වේච්ඡා සාමූහික ශ්රමයේ ප්රධාන පදනම සාදයි. ‘පිරිසිදු ශ්රී ලංකා’ ව්යාපෘතියට සමාජ, පාරිසරික සහ සදාචාරාත්මක කුළුණු යන ප්රධාන කුළුණු තුනක් ඇත්තේ එබැවිනි.
ග්රාමීය මට්ටමින් රේගුව සහ සාමූහික වගකීම කෙරෙහි අවධානය යොමු කරමින් මෙම වැඩසටහන සම්බන්ධ කර ඇත. ශ්රී ලංකාව පිරිසිදු හා හරිත කිරීමට පියවර ගැනීම සඳහා රාජ්ය, පෞද්ගලික අංශයේ සහ මහජනතාවගේ සහභාගීත්වය ක්රියාකාරී ආකාරයෙන් බලමුලු ගැන්වීම ප්රධාන අරමුණයි.
ඒ මත පදනම්ව මේ වසරේ (2026) අගෝස්තු 08 වැනිදා සිට සෑම මසකම අවසන් සෙනසුරාදා දින පැය 4ක (පෙ.ව. 8.00 සිට මධ්යහ්න 12.00 දක්වා) පිරිසිදු කිරීමේ කටයුතු සිදු කළ යුතු බවට වැඩපිළිවෙළක් හඳුන්වා දෙනවා.
එය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා ශ්රී ලංකාවේ බහු වාර්ගික ප්රජාවන් අතර සමගිය, සාමය සහ සහජීවනය ගොඩනැගීමේ අරමුණින් 'සහෝදරත්ව ව්යාපෘතිය' රට පුරා ක්රියාත්මක විය.
නාගරික සංවර්ධන නියෝජ්ය අමාත්ය එරංග ගුණසේකර මහතාගේ ප්රධානත්වයෙන් මඩකලපුව දිස්ත්රික්කයේ මෙවැනි ජනහමු සහ දැනුවත් කිරීමේ රැස්වීම් පසුගිය කාලයේ අඛණ්ඩව පැවැත්විණි.
2024 ජනාධිපතිවරණයෙන් සහ පාර්ලිමේන්තු මැතිවරණයෙන් ඓතිහාසික ජයග්රහණයක් ලබාගෙන බලයට පත් වූ පසු ඔවුන් මේ සංහිඳියා කටයුතු තීව්ර කර ඇත්තේ ඔවුන්ගේ "සෞභාග්යමත් රටක් - සුන්දර ජීවිතයක්" යන ප්රතිපත්ති ප්රකාශය පදනම් කරගෙනය.
එහි මූලික අරමුණ වන්නේ පසුගිය කාලයේ දේශපාලන බලය රැකගැනීම සඳහා යොදාගත් වාර්ගික, ආගමික හා භාෂාමය බෙදීම් සමනය කිරීමයි. මෙම ව්යාපෘතිය මගින් සිංහල, දෙමළ, මුස්ලිම් සහ කඳුකරයේ සියලු ජන කොටස් "ක්රි ලංකා" යන තනි ජාතික අනන්යතාවයක් යටතේ එක්සත් කිරීමට උත්සාහ කරයි.
අධ්යාපනය, සෞඛ්ය, යටිතල පහසුකම් සහ පානීය ජලය වැනි මූලික අවශ්යතා කුල හා ආගම් භේදයකින් තොරව කලාපයේ සියලුම ජනතාවට එක හා සමානව ලබාදීම මෙහි අරමුණයි. රාජ්ය පරිපාලනයේ දූෂණය පිටු දැකීමෙන් රටේ බිම් මට්ටමට සියලු සම්පත් එක හා සමානව ළඟා වන බව ඔවුහු සහතික කරති.
ඒ අර්ථයෙන් ජාතික ජන බලවේගයේ (NPP) ජාතික සහෝදරත්වය සහ ප්රතිසන්ධාන වැඩසටහන් මූලික වශයෙන් ඉලක්ක කර ඇත්තේ උතුරු නැඟෙනහිර සහ ශ්රී ලංකාවේ අනෙකුත් පළාත් අතර සමාජ සහජීවනය ශක්තිමත් කිරීමයි.
එමෙන්ම ගම්වල භෞතික සංවර්ධනය, පරිසර සංරක්ෂණය සහ අධ්යාත්මික/ආචාර ධර්ම ප්රවර්ධනය කිරීම සඳහා 'අත්තම' සංකල්පය යටතේ ගම්වාසීන් සියලු දෙනාම ඒකාබද්ධ පවුලක් ලෙස එකට වැඩ කිරීමේ අවස්ථා වැඩි වෙමින් පවතී.
මිනිසුන් ස්වේච්ඡාවෙන් ස්වේච්ඡාවෙන් සේවය කරන විට, සනීපාරක්ෂක කටයුතු සඳහා රජය දරන භෞතික පිරිවැය අඩු වේ. මෙමගින් රාජ්ය සේවකයින් අතර වගවීම සහ විනිවිදභාවය වැඩි දියුණු කිරීමට උපකාරී වේ. රාජ්ය ආයතනවල අතිරික්ත ලිපිගොනු සහ උපකරණ ඉවත් කිරීම, පිරිසිදු සහ ප්රවේශ විය හැකි සේවා පරිසරයක් නිර්මාණය කිරීම.
ඒ නිසා මේ "ආත්ම" ක්රමය යොදාගන්නේ රට ගොඩනැගීමේ කාර්යයේ වගකීම් සහගත හවුල්කරුවෙකු බවට සමස්ත මහජනතාවම පත්කිරීම, එය රජයේ ව්යාපෘතියක් ලෙස පමණක් නොදැක, "සෞභාග්යමත් දේශයක් - සුන්දර ජීවිතයක්" යන ප්රතිපත්තිමය අරමුණ සාක්ෂාත් කර ගැනීම සඳහාය.
ජාතිය ගොඩනැගීම රජයේ කාර්යයක් පමණක් නොව එය සෑම පුරවැසියෙකුගේම යුතුකමක් බව එයින් පෙන්නුම් කෙරේ. පොදු අරමුණක් සඳහා සමස්ත මහජනතාවම එකට එක් කරන අතර සමාජය තුළ එකමුතුකම සහ වගකීම පිළිබඳ හැඟීම පෝෂණය කරයි.
වැදගත්ම දෙය නම් සම්පත් හා ශ්රමය තමන් අතර බෙදාගැනීමෙන් බාහිර බර අඩුකරගෙන රට ප්රගති මාවතට ගෙන යා හැකිය යන අදහස සෑම මිනිසෙකු තුළම ඇති කිරීමයි. ඒ නිසා රජයත් ජනතාවත් අත්වැල් බැඳගෙන රට සංවර්ධනය කිරීමේ ප්රායෝගික උපාය මාර්ගයක් ලෙසයි එය ඉදිරිපත් කරන්නේ.
"ආතම" යනු ශාරීරික ශ්රමය පමණක් නොව සෙසු මිනිසුන් කෙරෙහි ඇති උණුසුම සහ සමාජ වගකීමේ සංකේතයකි. පරිසරය පිරිසිදුව තබා ගැනීමට සහ දූෂිත හා අවංක සමාජයක් ගොඩනැගීමේ සදාචාරාත්මක වගකීම මිනිසුන්ට දැනීමට මෙම අත්ථම් ලක්ෂණය උපකාරී වේ.
ඉතින් "පිරිසිදු ශ්රී ලංකාව" රජයේ ප්රතිපත්ති සැලැස්ම නම් "අත්තම" යනු එම සැලැස්ම ජනතාවගේ හදවතට ගෙන ගොස් සාර්ථක කර ගැනීමේ සමාජ දර්ශනයයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
07-08-2026.
(සිංහල පරිවර්තනය සමඟ) NPP அரசாங்கம் அறிமுகப்படுத்தும்! கிராமிய ஒற்றுமையின் உயிர் நாடி "அத்தம" NPP ආයතනය හඳුන්වා දෙයි! ගමේ එකමුතුවේ ජීව නාඩි "අත්තම"
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 07, 2026
Rating:




கருத்துகள் இல்லை: