குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இருவர் பலி
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று [7] காலை ஏற்பட்ட அமைதியின்மையால் இருவர் பலியாகியுள்ளனர்.
நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, சிறைச்சாலையின் மருத்துவமனை கைதிகளால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடனடியாக அங்கு அனுப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இருவர் பலி
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 07, 2026
Rating:

கருத்துகள் இல்லை: