Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு உத்தரவு: 12 எம்.பிக்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை

மேற்குக் கரையில் இடம்பெறும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பதிலடியாக, ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூட இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு வருந்தத்தக்கது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபேண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி வானொலிக்கு கருத்து தெரிவித்த மிலிபேண்ட், “இஸ்ரேலின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில், குடியேற்றவாசிகளுக்கு எதிராகத் தடைகளை அறிவித்த நெதர்லாந்து போன்ற பிற நாடுகளுக்கும் இஸ்ரேல் இதுபோன்ற பதிலடி நடவடிக்கைகளையே மேற்கொண்டது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருந்தத்தக்கது மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது” எனக் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் மேற்குக் கரையிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுடனான வர்த்தகத்திற்குத் தடை விதிப்பதாக செவ்வாயக்கிழமை அறிவித்தன. இதனைத் தொடர்ந்தே இஸ்ரேல் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், காசாவில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான போர்நிறுத்தக் கண்காணிப்பு மையத்திலிருக்கும் பிரித்தானியப் பிரதிநிதிகளை வெளியேற்றவும், பாலஸ்தீன அதிகாரசபைப் படைகளுக்கான பிரித்தானியப் பயிற்சிகளுக்குத் தடை விதிக்கவும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பிரித்தானியர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதைத் தடுக்கவும் இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், இத்தடைகள் இஸ்ரேலுடனான உளவுத்துறை ஒத்துழைப்பைப் பாதிக்கும் என்ற கருத்துக்களை மிலிபேண்ட் நிராகரித்தார்.

“இஸ்ரேலுடன் எங்களுக்கு முக்கியமான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உறவுகள் உள்ளன; அவை தொடர்ந்து நீடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” எனக் கூறிய அவர், “ஈரானிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நமது இஸ்ரேலியப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் நம்புகிறோம் என்பதில் நேற்று நான் மிகவும் தெளிவாக இருந்தேன்” என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பிரித்தானியாவின் தலைமை ரபி எஃப்ராயிம் மிர்விஸ் இத்தடைகள் குறித்து வெளியிட்ட விமர்சனங்களையும் மிலிபேண்ட் நிராகரித்தார்.

பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு உத்தரவு: 12 எம்.பிக்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.