தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் முன்பாக 19ஆம் வட்டார தலைவர் எம்.ஐ.நஜீம் தலைமையில் (07) இடம் பெற்றது.
இந் நிகழ்வில், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்கில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் 19ஆம் வட்டாரத்தில் உள்ள பெருந்தொகையான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை அமைத்தலும் சமகால அரசியல் தெளிவூட்டல் நிகழ்வும்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 09, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 09, 2026
Rating:






கருத்துகள் இல்லை: