Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான "1818" அவசர அழைப்பு இலக்கம் – 24 மணி நேரமும் இயங்கும்


போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்காகச் செயற்படுத்தப்படும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு இணைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர அழைப்பு இலக்கம், தற்போது "முழு நாடும் ஒன்றாக" தலைமை அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிறுவப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.


நாடு முழுவதும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் அல்லது அது தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்த துல்லியமான தகவல்களைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவதற்காக இந்த அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு நபரும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை இந்த இலக்கத்திற்கு உடனடியாக வழங்க முடியும். தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும். அத்துடன், வழங்கப்படும் தகவல்கள் குறித்து மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.

இச்சேவை ஜனாதிபதி செயலகம் மற்றும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டுச் சபையின் நேரடி மேற்பார்வையிலும் ஒருங்கிணைப்பிலும் மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கமைய, போதைப்பொருள் கடத்தல் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை, 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும் மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்க முடியும்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான "1818" அவசர அழைப்பு இலக்கம் – 24 மணி நேரமும் இயங்கும் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.