Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அனோஜன் தொடர்பாக உளசமூக ஆதரவு மையத்தி தினால் உத்தியோகபூர்வ கடிதம் – ஜனாதிபதிற்கு அனுப்பி வைப்பு


அனோஜன் தொடர்பாக 
உளசமூக ஆதரவு மையத்தி தினால் உத்தியோகபூர்வ கடிதம் ஜனாதிபதிற்கு அனுப்பி வைப்பு

சவுதி அரேபியாவில் அனோஜன் தொடர்பாக நிலவி வரும் சூழ்நிலையினால், அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிலைமையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக விஷேட கடிதம் அனுப்பி வைப்பு 

மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில், அனோஜனின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை, கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக, 23.09.2026 அன்று எமது குழுவினர் அனோஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருடன் உளசமூக ஆதரவு மற்றும் ஆறுதல் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது, அனோஜனின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்களது தற்போதைய நிலைமை, கவலைகள், உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

குடும்பத்தினர் வெளிப்படுத்திய விடயங்களை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 26.09.2026 அன்று இலங்கை ஜனாதிபதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு, மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் மூலம், குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கவலைகள், உணர்வுகள் மற்றும் மனிதநேய அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும், நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருமானால், அவற்றை உரிய முறையில் தொடர்ந்து முன்னெடுத்து, குடும்பத்தினருக்கு தேவையான தகவல், வழிகாட்டல் மற்றும் சாத்தியமான மனிதநேய உதவிகள் கிடைப்பதற்கு உரிய கவனம் செலுத்துமாறும் எமது கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் நோக்கம் எந்தவொரு சட்ட அல்லது இராஜதந்திர நடவடிக்கையிலும் தலையிடுவது அல்ல. மாறாக, கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் கவலைகள், உணர்வுகள் மற்றும் மனிதநேய அடிப்படையிலான எதிர்பார்ப்புகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வதே ஆகும்.

ஒரு குடும்பத்தின் கவலையை கேட்பது மட்டுமல்ல; அவர்களின் குரல் உரிய இடத்தை சென்றடையச் செய்வதும் மனிதநேயத்தின் ஒரு பகுதியாகும்.



උලසමුක සහාය මධ්‍යයේ උද්‍යෝගපූර්ව ලිපිය – ජනාධිපතිවරයාගේ අවධානයට යොමු කිරීම

 සෞදි අරාබියාවේ අනෝජන් සම්බන්ධයෙන් පවතිනු ඇත  තත්වයෙන්, ඔහුගේ තායාර් ඇතුළු පවුලේ අය මුහුණ දෙන තත්වය ජනාධිපතිවරයාගේ අවධානයට යොමු විය.

 මට්ටක්ලප්පු උලසමුක සහය මධ්‍යයේ සංවිධානය, අනෝජනින් පවුලේ අය මුහුණ දෙන වත්මන් තත්ත්වය, කනස්සල්ල සහ අපේක්ෂාවන් සෘජුවම  දැන ගැනීම සඳහා, 23.09.2026 එදින අපගේ කණ්ඩායම අනෝජනීන්ගේ නිවසට ගොස් පවුලේ සාමාජිකයන් සමඟ උලසමුක සහාය සහ සැනසීම  සාකච්ඡාවක් සිදු කළහ.

 මේ අතර, අනෝජනින් තායාර් ඇතුළු පවුලේ අය ඔවුන්ගේ වර්තමාන තත්ත්වය, කනස්සල්ල, හැඟීම් සහ අපේක්ෂාවන් ඔවුන් සමඟ බෙදා ගත්හ.

 2026.09.25 දින ශ්‍රී ලංකා  ජනාධිපති මෛත්‍රී අනුර කුමාර තිසානායක මැතිතුමාගේ අවධානයට, මට්ටක්කාලප්පු උලසමුක සහය මධ්‍යස්ථානයේ නියෝජිතායතනය වෙනුවෙන් වෘත්තීය පූර්ව ලිපියක් යවා ඇත.

 අදාළ ලිපිය හරහා, පවුලේ අයට මුහුණ දෙන කනස්සල්ල, හැඟීම් සහ මානව හිමිකම් අපේක්ෂාවන් ජනාධිපතිවරයාගේ අවධානයට  ගොස් ඇත.

 තවද, ප්‍රායෝගිකව පවතින නීති සහ ඉරාජතන්ත්‍ර ක්‍රියාමාර්ගවලට අදාළ නිලධාරීන් සහ ආයතන සඳහා අවශ්‍ය වේ  ක්‍රියාකාරකම් සිදු කරන ලද ආදායම, අවශ්‍ය ක්‍රමයෙන් ඉදිරියට ගෙන යාම, පවුලේ අයට අවශ්‍ය තොරතුරු, මඟ පෙන්වීම සහ  හැකි මිනිසාගේ උපකාරය ලැබීමට නිසි අවධානය යොමු කිරීම අපගේ ලිපියෙන් ඉල්ලා ඇත.

 ඉන්නඩවඩක්‍යේ අරමුණ ඕනෑම නීතියක් හෝ ඉරාජතන්ත්‍ර ක්‍රියාමාර්ගය තුළ හිස තැබීම නොවේ.  ඊට හාත්පසින්ම වෙනස්ව, දුෂ්කර තත්වයකට මුහුණ දෙන එක් පවුලක කනස්සල්ල, හැඟීම් සහ මනුෂ්‍යත්වයේ මූලික අපේක්ෂාවන් සඳහා සුදුසු දර්ශන  අවධානයට ගෙන යන්න.

 එක් පවුලක කරදරය ඇසීම පමණක්;  කටහඬට අදාළ ස්ථානයට ගියදායච් කිරීම මානවනෙය් එක් කොටසක්.
அனோஜன் தொடர்பாக உளசமூக ஆதரவு மையத்தி தினால் உத்தியோகபூர்வ கடிதம் – ஜனாதிபதிற்கு அனுப்பி வைப்பு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.