Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

අනෝජන්ගේ නිදහස පතා ගංගාරාමයේදී සර්ව ආගමික හමුවක් அனோஜனின் விடுதலைக்காக கங்காராமய விஹாரையில் சர்வமத சந்திப்பு !


(ஜே. சுஜீகுமார்) 

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் விடுதலைக்காக, கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையின் விகாராதிபதி கெளரவத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் சர்வமதத் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.


இன, மத அல்லது சாதி வேறுபாடுகளின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் அனோஜனுக்காக குரல் கொடுப்பது, இலங்கையின் மனிதாபிமானத்தையும் தேசிய ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் உயரிய முன்னுதாரணம் என அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றியடைந்து, அனோஜன் விரைவில் விடுதலை செய்யப்பட்டு தனது குடும்பத்தினரிடம் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது அவர் குடும்பத்திற்கு மிகப்பெரும் நிம்மதியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயம் ஒன்றே எனக் குறிப்பிட்டுள்ள சர்வமதத் தலைவர்கள், தத்தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப அனோஜனின் விடுதலைக்காக பிரார்த்திக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த நிகழ்வில் கெளரவத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர், வணக்கத்திற்குரிய கலாநிதி சாஸ்திரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், சிவஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-செய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி திலகசூரிய ஜயவர்தன பாதிரியார் உள்ளிட்ட இலங்கை தேசிய சர்வமத குரு ஒன்றியத்தின் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


සෞදි අරාබියේදී අත්අඩංගුවට ගෙන සිටින ශ්‍රී ලාංකික තරුණයෙකු වන සිවරාසා අනෝජන්ගේ නිදහස වෙනුවෙන්, කොළඹ හුනුපිටිය ගංගාරාම විහාරස්ථානයේ විහාරාධිපති පූජ්‍ය ආචාර්ය කිරින්දේ අස්සජි නායක ස්වාමීන් වහන්සේගේ ප්‍රධානත්වයෙන් සර්ව ආගමික නායකයන්ගේ විශේෂ සාකච්ඡාවක් පැවැත්වුණා.

ජාති, ආගම් හෝ කුල භේදයකින් තොරව සිංහල, දෙමළ, මුස්ලිම් සහ ක්‍රිස්තියානි ජනතාව එකමුතුව මෙම දුෂ්කර අවස්ථාවේදී අනෝජන් වෙනුවෙන් පෙනී සිටීම මෙරට මානුෂීයත්වය සහ ජාතික එකමුතුව ලොවටම පෙන්වන උසස් ආදර්ශයක් බවයි එහිදී අවධාරණය කෙරුණේ.

ශ්‍රී ලංකා රජය රාජ්‍ය තාන්ත්‍රික මට්ටමින් ගනු ලබන උත්සාහයන් සාර්ථක වී, අනෝජන්ට ඉක්මනින් නිදහස ලබා තම පවුලේ සාමාජිකයන් වෙත පැමිණීමට ලැබෙන්නේ නම් එය මහත් සහනයක් බවද මෙහිදී ප්‍රකාශ කෙරුණා.

ආගම් වෙනස් වුවද මනුෂ්‍යත්වය එකක් බවත්, තම තමන්ගේ ආගමික විශ්වාසයන්ට අනුව අනෝජන්ගේ නිදහස සහ ආරක්ෂාව වෙනුවෙන් ප්‍රාර්ථනා කරන ලෙසත් ගංගාරාම විහාරාධිපති හිමියන් ප්‍රමුඛ සර්ව ආගමික නායකයෝ සමස්ත ජනතාවගෙන් ඉල්ලා සිටිනවා.

මෙම  අවස්ථාවට පූජ්‍ය ආචාර්ය කිරින්දේ අස්සජි නායක හිමි, පූජ්‍ය ආචාර්ය ශාස්ත්‍රපති ගලගම ධම්මරන්සි නායක හිමි, සිව ශ්‍රී ආචාර්ය ඛාඛුශර්මා කුරුක්කල්තුමා, අල්-හාජ් අශ්-සෙය්යිද් ආචාර්ය හසන් මව්ලානා අල්-කාදිරි පූජකතුමා සහ ආචාර්ය තිලකසූරිය ජයවර්ධන පියතුමා ඇතුළු ශ්‍රී ලංකා ජාතික අන්තර් ආගමික පූජක එකමුතුවේ සර්ව ආගමික නායකයන් එක්වුණා.



අනෝජන්ගේ නිදහස පතා ගංගාරාමයේදී සර්ව ආගමික හමුවක් அனோஜனின் விடுதலைக்காக கங்காராமய விஹாரையில் சர்வமத சந்திப்பு ! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.