Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் என்பது ஆளுக்கொரு வருடம் என்று ஊருக்கு ஊர் பகிர்ந்தளிக்கப்படும் அலங்கார பொருளாகிவிட்டது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் என்பது ஆளுக்கொரு வருடம் என்று ஊருக்கு ஊர் பகிர்ந்தளிக்கப்படும் அலங்கார பொருளாகி விட்டது.


ரஊப் ஹகீம் போன்ற நீண்ட அரசியல் அனுபவமுள்ள ஒரு தலைமை ஏன் தொடர்ச்சியாக இந்த விளையாட்டுக்கு சம்மதிக்கின்றது என்பது மிகுந்த கவலையை தருகிறது.


ஒரு வருடத்துக்கு ஒரு ஊருக்கு அல்லது நபருக்கு தேசிய பட்டியலை வழங்குவதால் யாருக்கு என்ன நலவு கிடைக்கப் போகின்றது?


ஒரு வருடத்துக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எதைத்தான் சாதிக்கலாம்?


கட்சியின் தேசிய பட்டியல் கட்சிக்கு வாக்களித்த ஊருக்கோ அல்லது கட்சிக்காக உழைத்த ஒருவருக்கோதான் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் கூட, ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நபரையோ தேர்வு செய்து முழுமையான காலத்துக்கும் ஒருவரை நியமித்தால்தானே ஏதாயினும் ஒன்றை செய்யும் அவகாசம் நியமன எம்.பி.க்கு கிடைக்கும்.


அதைவிடுத்து வருடாவருடம் ஒவ்வொருவருக்கோ அல்லது வெவ்வேறு ஊர்களுக்கோ சுழற்சி முறையில் பகிர்ந்தளித்து, மக்களின் மடத்தனமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தேசிய பட்டியலூடாகக் கிடைக்கும் மகத்தான வாய்ப்பை கிள்ளிக் கிள்ளிக் கொடுத்து, யாருக்கும் எந்தப் பிரயோசனமற்றதாக ஆக்கிவிடுவது எந்த வகையில் நியாயமாகும்?


மக்கள்தான் மடத்தனமாக எதிர்பார்க்கின்றார்கள் என்றால் கட்சியின் தலைமையாவது சிந்தித்து செயற்பட வேண்டாமா?


முழுமையான காலத்தையும் யாராகினும் ஒரு திறமையானவருக்கு வழங்கி தேசிய பட்டியல் நியமனத்தை பெறுமதியாக்குவதில் இனியாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கவனம் எடுக்கட்டுமாக!


சிறந்த தலைமை என்பது எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்துவதல்ல.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நேர்த்தியாக செயல்படுவதே சிறந்த தலைமையின் அடையாளம்.

இந்த கலாச்சாரத்துக்கு சகோதரர் ரஊப் ஹகீம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அவருக்கு பின்னரும் இது தொடரும்.


தேசிய பட்டியலினூடாக சமூகத்துக்கு கிடைக்க சாத்தியமான அத்தனை நலவுகளும் பகிர்ந்தளித்தல் எனும் தொடர் விளையாட்டால் மொத்தமாக நாசமாகிவிடும்

-அரசியன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் என்பது ஆளுக்கொரு வருடம் என்று ஊருக்கு ஊர் பகிர்ந்தளிக்கப்படும் அலங்கார பொருளாகிவிட்டது. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 26, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.