மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் ஒழுங்கமைப்பில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சுனில் ஹந்துநெத்தி அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (29) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர், கௌரவ தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி, மக்களின் தேவைகள் மற்றும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 29, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 29, 2026
Rating:




கருத்துகள் இல்லை: