සිංහල පරිවර්තනය සමග) 22ஆவது திருத்தமும் புதிய அரசியல் கலாச்சாரமும்! வெறும் கோஷங்களால் மக்களின் விழிப்புணர்வை தகர்த்திட முடியாது!
சட்டத்தின் முன் எவரும் உயர்ந்தவர்களும் இல்லை,எவறும்தாழ்ந்தவர்களும் இல்லை என்ற கொள்கை நடைமுறையில் வலுப்பெறுவது, NPP இந்த நாட்டில் ஏற்படுத்த நினைக்கும் நல்லாட்சியின் முக்கிய அடையாளங்களாகும்.
மக்கள் இன்று கேட்கும் கேள்வி ஒன்றுதான், இந்த எதிர்ப்பு எதற்காக.? நாட்டின் நலனுக்காகவா, அல்லது பழைய அரசியல் நடைமுறைகளை பாதுக்காக்கவா? அல்லது இழந்த அரசியல் அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ளவா.? என்பதுதான்.
நாட்டின் எதிர்காலப் பாதை எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற இறுதி முடிவு, அரசியல்வாதிகளின் கைகளில் அல்லாமல் விழிப்புணர்வுள்ள மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் கைகளிலேயே உள்ளது.
ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பது என்றால், அதில் உள்ள எந்தப் பிரிவு மக்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் விளக்க வேண்டும். வெறுமனே “அரசாங்கத்தை எதிர்க்கிறோம்”, “ஜனநாயகம் அழிக்கப்படுகிறது” என்ற அரசியல் முழக்கங்களை எழுப்புவதானது எதிர்காலத்தில் தமது பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை என்பதே புத்திஜீவிகளின் பார்வையாக உள்ளது.
ஒருநாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களையோ அல்லது தங்களது எதிர்ப்புக்களையோ வெளியிடுவது சாதாரண விடயமாகும் அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரசியல் எதிர்ப்பு இருப்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கமே. ஆனால் ஒரு சட்டத்தை எதிர்ப்பவர்கள், முதலில் அந்தச் சட்டத்தில் தாங்கள் எதிர்க்கும் பிரிவு எது?, அது ஏன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?, அதற்குப் பதிலாக தங்களுடைய தீர்வு என்ன? என்பதைக் முதலில் நாட்டு மக்களுக்கு தெளிவாகக் எடுத்துரைக்க வேண்டும்.
இல்லையெனில், 22ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக நடத்தப்படும் போராட்டம், 22ஆவது திருத்தத்தைப் பற்றிய போராட்டமா? அல்லது NPP அரசாங்கத்திற்கு எதிரான பொதுவான அரசியல் போராட்டமா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புவது இயல்பானதே.
22ஆவது திருத்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 63 இலிருந்து 65 ஆகவும் மாற்ற முன்மொழிகிறது. மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 20 இலிருந்து 25 ஆக உயர்த்தும் முன்மொழிவும் இதில் உள்ளது.
குறிப்பாக, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் மற்றும் தாமதங்களை குறைத்து, மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது. அதேவேளை, நீதித்துறையுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் திடமான கொள்கையுடன் செயற்படுகின்றது.
இந்த நிலையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலமும் 158–63 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் கடந்த செப்டம்பர் 25ம் திகதி நிறைவேற்றப்பட்டிருப்பது, நீதித்துறையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதியான முன்னெடுப்பாகும். 2024இல் மாற்றத்திற்காக மக்கள் வழங்கிய ஆணை, இவ்வாறான வரலாற்று மாற்றங்களின் மூலம் நடைமுறையாகிறது.
இதற்கு பொதுவாக்கெடுப்பு தேவையில்லை என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னரே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இது ஊழலற்ற, நீதியான, புதிய இலங்கையை கட்டியெழுப்பும் மக்கள் எதிர்பார்ப்பின் முக்கியமான முன்னேற்றமாகவும் நாட்டை நேசிக்கும் பலதரப்பு மக்களாலும் பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும், அவற்றுக்கு துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச திணைக்கள நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் செல்வாக்கு காரணமாக நீண்டகாலமாக முன்னேறாமல் நிலுவையில் இருந்ததாகக் கூறப்படும் பல வழக்குகள் தொடர்பிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் விசாரணைகள் முன் எடுக்கப்படுகின்றன. சட்டத்தின் முன் எவரும் உயர்ந்தவர்களும் இல்லை, எவரும் தாழ்ந்தவர்களும் இல்லை என்ற கொள்கை நடை முறையில் வலுப்பெறுவது, NPP இந்த நாட்டில் ஏற்றபடுத்த நினைக்கும் நல்லாட்சியின் முக்கியமான அடையாளமாகும்.
பல தசாப்தங்களாக இலங்கை மக்களாகிய நாம் எதிர்பார்த்த மிகப்பெரிய மாற்றம் என்பது வெறுமனே ஒரு அரசாங்கம் மாறியதுடன் முடிவடைந்துவிட்டதாகக் கருத முடியாது. அது மக்களால் வழங்கப்படும் தற்காலிகமான பொறுப்பாகும். அந்த பொறுப்பினை நேர்மையான செயற்திட்டமாக உருவாக்குவதிலேயே நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்களின் உரிமைகளை மதிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை இலங்கையில் உருவாக்க முடியும்.
சட்ட அமுலாக்க நிறுவனங்கள், பொலிஸ் ஆணைக்குழு,அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறையானது அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டு, தங்களது சட்டபூர்வமான பொறுப்புகளை சுயாதீனமாக நிறைவேற்றும் சூழல் உருவாக வேண்டும் என்பதே மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாற்றமாகும்.
இந்தப் பின்னணியில், அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான விவாதங்களானது வெறும் அரசியல் கோஷங்களாக மாறக்கூடாது. குறிப்பாக நீதித்துறையுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் அதன் உண்மையான உள்ளடக்கம், நோக்கம் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும்.
இன்று வீதிகளில் அரசியல் எதிர்ப்புகளை நடத்துவது ஜனநாயக உரிமையாக இருக்கலாம். ஆனால், அந்த எதிர்ப்புகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை மக்களிடம் நேர்மையாக எடுத்துரைப்பதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். குறிப்பாக 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதைத் தெளிவாக விளக்காமல், வெறுமனே அரசாங்க எதிர்ப்பு கோஷங்களை முன்வைப்பது மக்களின் அரசியல் அறிவை மதிப்பதாக அமையாது.
மக்கள் இன்று கேட்கும் கேள்வி ஒன்றுதான்: இந்த எதிர்ப்பு எதற்காக? நாட்டின் நலனுக்காகவா, அல்லது பழைய அரசியல் நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காகவா? அல்லது இழந்த அரசியல் அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ளவா.?
ஆனால், இந்த அரசியல் போராட்டங்களுக்கு அப்பால் ஒரு புதிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வலுப்பெற்றுள்ளது. பல தசாப்தங்களாக ஊழல், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அரசியல் தலையீடு மற்றும் சட்டத்தின் சமமற்ற நடைமுறை குறித்து மக்கள் அனுபவித்த வேதனைதான் 2024 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்திற்கான முக்கியமான பின்னணிகளில் ஒன்றாகவும், அநுர குமார திசாநாயக்கவை நாட்டின் ஜனாதிபதி எனும் சிம்மாசனத்திலும் உட்கார வைத்தது.
அதனால்தான் இன்று மக்கள் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் எதிர்பார்த்த மக்களாக இல்லாமல், அவர்கள் புதியதொரு அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்தவர்களாகவும், நம்பிக்கையுடன் முன்னோக்கிய பயணத்தில் கைகோர்த்து இருக்கின்றார்கள்.
அரசியல்வாதியின் பெயர் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் அவர் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அதிகாரி எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்தை மீறினால் விசாரணைக்கு உட்பட்டே ஆக வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் அவை சட்டரீதியாக விசாரிக்கப்பட வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி என்பது பழிவாங்கும் விடயமல்ல. ஆதாரத்தின் அடிப்படையில் உண்மையை நிலைநாட்டும் சட்டப்பூர்வமான செயல் முறையாகும். இதனையே பல தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்திருந்த புதிய இலங்கையின் அரசியல் சீர்த்திருத்தமாகும்.
எனவே, அரசியல் அதிகாரம் மாறும்போது வழக்குகள் மூடப்பட்டு விடக்கூடாது. ஆட்சி மாறும்போது விசாரணைகள் நிறுத்தப்பட்டு விடக்கூடாது. பதவி மாறும்போது சட்டத்தின் பாதையும் மாறி விடக்கூடாது. சட்டம் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். அது ஆட்சியாளருக்காகவும், எதிர்க்கட்சிக்காகவும், பொது மக்களுக்காகவும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
இன்று அநுர குமார திசாநாயக்க தலைமையிலான NPP அரசாங்கத்தை ஆதரிக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். அவர்கள் எந்த அரசியல்வாதியையும் கண் மூடித்தனமாக ஆதரிப்பதற்காக மட்டும் அரசியல் மாற்றத்தை உருவாக்கவில்லை. ஊழலுக்கு எதிரான அரசியல், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இன–மத பேதமற்ற ஒருங்கிணைந்த தேசத்திற்குள் ஒற்றுமையாக வாழக் கூடிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனேயே அந்த மாற்றத்தை எதிர்பார்த்தனர்.
அந்த நம்பிக்கையின் பின்னால் இளைஞர்கள் இருக்கின்றனர். கல்வியறிவு பெற்ற சமூகங்கள் இருக்கின்றன. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அரசியல் கட்சி என்ற எல்லைகளைத் தாண்டி, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்க்கும் நடுநிலை சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.
இந்த நாட்டை ஏன் NPP அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம்?” என்ற கேள்விக்கான பதில் அவர்களிடம் தெளிவாக உள்ளது.
அது ஒரு கட்சி சார்ந்தவர்களையோ அல்லது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்துவதற்கான சிந்தனைக்கு பின்னால் எழுந்த மக்கள் எழுச்சி என்று நினைப்பது விமர்சிப்பவர்களின் பிழையான கணிப்பாக உள்ளது.
2024ல் இடம் பெற்ற மாற்றம் என்பதானது, அதிகாரம் என்பது பரம்பரைச் சொத்தல்ல, சட்டம் அரசியல்வாதியின் அடிமையுமல்ல,
ஊழல் என்பது அரசியலின் இயல்பான அங்கமுமல்ல, அரசுப் பதவி தனிப்பட்ட சலுகைக்கான வாசலுமல்ல, மக்களின் ஆட்சி மாற்றம் என்பது வெறும் தேர்தல் நாளில் மட்டும் நிகழ்வல்ல என்பதை நிரூபித்து மாற்றத்துக்கான மக்களின் உண்மையான எழுச்சியாகவே இருந்தது.
அதனால்தான் இன்று நாட்டின் அரசியல் பயணம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், எதிர்க்கட்சிகள் விரும்படி கோசங்களை எழுப்பட்டும், வீதிகளில் போராடுபவர்கள் போராடட்டும், ஜனநாயகத்தில் அதற்கான இடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆனால், மக்களின் அரசியல் விழிப்புணர்வை யாராலும் பின்னோக்கி அழைத்துச் செல்ல முடியாது. அந்த உண்மையும், தோற்றுப் போகின்ற பாரம்பரிய அரசியலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பின்னால் உள்ள மிகப் பெரும் சக்தியாக மாறியுள்ளது.
இனி வெறும் கோஷங்களால் முடிவெடுக்கும் மக்களின் அரசியல் கலாச்சாரம் மாறி விட்டது. பாமர மக்கள் தொடக்கம் படித்தவர்கள் வரை கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். மக்கள் ஆதாரங்களை தேடுகின்றார்கள், சட்டத்தின் நடைமுறையைப் பார்க்கின்றார்கள். அரசியல் கட்சிகளின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க தொடங்கி விட்டார்கள். ஆதலால் மக்களே தங்களது ஜனநாயகத் தீர்ப்பை வழங்கும் அளவிற்கு அரசியல் விழிர்ப்புணவில் இருக்கின்றார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தின் பயணம் எளிதானதல்ல. மேலும், ஊழலற்ற, சட்டத்தின் ஆட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதும், இன–மத வேறுபாடுகளைக் கடந்து “இலங்கையர்” என்ற ஒற்றை அடையாளத்தில் மக்கள் ஒன்றிணைத்து நாட்டை உருவாக்கும் இலக்கானது எளிதில் கைவிடப்பட்டு விடக் கூடாது. அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பலம் அதிகாரத்தில் மட்டும் இல்லை. மாற்றத்தை நம்பி அதனுடன் பயணிக்கும் மக்களின் நம்பிக்கையில்தான் உள்ளது.
அந்த நம்பிக்கையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக எந்தளவு பார்க்கப்படுகின்றதோ, அந்தளவு நம்பிக்கையை கண்காணிப்பதும் மக்களின் மிகப் பெரும் பொறுப்பாக உள்ளதோடு, அதனை ஜனநாயகத்தின் வழியில் முன்னெடுத்துச் செல்வதானது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகவும் இருக்கின்றது.
இலங்கை இனி பழைய அரசியல் கலாசாரத்திற்குத் திரும்ப வேண்டுமா? அல்லது சட்டம், நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி முன்னேற வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான இறுதி பதில் எந்த ஒரு அரசியல்வாதியிடமும் இல்லை.
அது மக்களின் உள்ளங்களிலே உள்ளது.
அது மக்களின் வாக்கிலே உள்ளது.
அது மக்களின் விழிப்புணர்விலே உள்ளது.
அது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பிலே உள்ளது.
அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
28-09-2026.
22 වැනි සංශෝධනය සහ නව දේශපාලන සංස්කෘතිය! හුදු සටන් පාඨවලින් මිනිසුන්ගේ දැනුවත්භාවය නැති කළ නොහැක!
නීතිය ඉදිරියේ කිසිවකු උසස් නැත, කිසිවකු පහත් නැත යන ප්රතිපත්තිය ශක්තිමත් කිරීම ජාතික පොදුජන පෙරමුණ මේ රට තුළ ස්ථාපිත කිරීමට අදහස් කරන යහපාලනයේ ප්රධාන ලක්ෂණයයි.
අද ජනතාව අසන ප්රශ්නය එකකි, මේ විරෝධතාව කුමක් සඳහාද? රටේ යහපත වෙනුවෙන්ද, නැතිනම් පැරණි දේශපාලන භාවිතයන් රැකගැනීමටද? නැතිනම් නැතිවූ දේශපාලන බලය නැවත ලබාගන්නවාද? එනම්.
රටේ අනාගත ගමන් මග කුමක් විය යුතුද යන්න පිළිබඳ අවසන් තීරණය ඇත්තේ දේශපාලනඥයන් අත නොව දැනුවත් ජනතාවගේ ප්රජාතන්ත්රවාදී තීරණය අතේය.
++++++++++++++++
ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනයකට විරුද්ධ වීම යනු එහි ඇති කවර වගන්තියකින් ජනතා අයිතියට බලපාන්නේද යන්න පැහැදිලිව ජනතාවට පැහැදිලි කිරීමයි. “අපි ආණ්ඩුවට විරුද්ධයි”, “ප්රජාතන්ත්රවාදය විනාශ කරනවා” වැනි දේශපාලන සටන් පාඨ පමණක් මතු කිරීම අනාගතයේදී තම සාම්ප්රදායික දේශපාලන සංස්කෘතියට තර්ජනයක් වේය යන බියේ ප්රකාශයක් මිස අන් කිසිවක් නොවන බව බුද්ධිමතුන්ගේ අදහසයි.
ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුවට දේශපාලන විරෝධයක් ඇතිවීම ප්රජාතන්ත්රවාදයේ අංගයක් වන්නේ රටක විපක්ෂයේ පක්ෂ ආණ්ඩුවට චෝදනා එල්ල කිරීම හෝ විරෝධතා දැක්වීම සාමාන්ය දෙයක් වන බැවිනි. නමුත් නීතියකට විරුද්ධ වන අය, පළමුවෙන්ම, ඔවුන් විරුද්ධ නීතියේ කොටස කුමක්ද?, එය ජනතාවට බලපාන්නේ ඇයි?, ඒ වෙනුවට ඔවුන්ගේ විසඳුම කුමක්ද? මුලින්ම එය රටේ ජනතාවට පැහැදිලිව පැහැදිලි කළ යුතුයි.
නොඑසේ නම් 22 වැනි ව්යවස්ථා සංශෝධනයට විරෝධය පළ කිරීම 22 වැනි ව්යවස්ථා සංශෝධනයට විරෝධයක් ද? නැතිනම් NPP ආන්ඩුවට එරෙහි පොදු දේශපාලන අරගලයක්ද? යන ප්රශ්නය මිනිසුන්ගෙන් ඇසීම ස්වාභාවිකය.
22 වැනි සංශෝධනයෙන් ශ්රේෂ්ඨාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වයස අවුරුදු 65 සිට 67 දක්වාත් අභියාචනාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වයස 63 සිට 65 දක්වාත් වෙනස් කිරීමට යෝජනා කර ඇත. අභියාචනාධිකරණ විනිසුරුවරුන් සංඛ්යාව 20 සිට 25 දක්වා වැඩි කිරීමේ යෝජනාවක් ද ඊට ඇතුළත්.
විශේෂයෙන්ම අධිකරණවල පවතින ප්රමාදය හා ප්රමාදය අවම කර ජනතාවට කඩිනම් යුක්තිය ඉටු කිරීමට පරිපාලන ප්රතිසංස්කරණවල අවශ්යතාවද බොහෝ කලක සිට කතාබහට ලක්ව ඇත. එමෙන්ම අධිකරණයට අදාළ ඕනෑම ව්යවස්ථා සංශෝධනයක් සලකා බැලිය යුත්තේ අධිකරණයේ ස්වාධීනත්වය සහ නීතියේ ආධිපත්යය යන මූලික සිද්ධාන්ත පදනම් කරගෙන බව ආණ්ඩුවේ ස්ථිර ප්රතිපත්තියක් තිබේ.
මේ තත්ත්වය තුළ සැප්තැම්බර් 25 වැනිදා 22 වැනි ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පනත් කෙටුම්පත සහ අධිකරණ (සංශෝධන) පනත් කෙටුම්පත 158-63 වැඩි ඡන්දයෙන් සම්මත වීම අධිකරණය ශක්තිමත් කිරීම සඳහා රජය ගත් ස්ථිර ඉදිරි පියවරකි. 2024 වෙනසක් සඳහා ජනතාව ලබාදුන් ජනවරම මෙවැනි ඓතිහාසික වෙනස්කම් හරහා ක්රියාත්මක වෙනවා.
පනත් කෙටුම්පත සම්මත වූයේ ඊට ජනමත විචාරණයක් අවශ්ය නොවන බවත් ආණ්ඩුක්රම ව්යවස්ථා රාමුව තුළ පාර්ලිමේන්තුවේ සම්මත කළ හැකි බවත් මහාධිකරණය පැහැදිලි කිරීමෙන් පසුවයි. දුෂණයෙන් තොර සාධාරණ නව ශ්රී ලංකාවක් ගොඩනැගීමේ ජනතා අපේක්ෂාව මෙන්ම රටට ආදරය කරන බොහෝ දෙනාගේ අපේක්ෂාවේ වැදගත් ඉදිරි පියවරක් ලෙස මෙය සැලකේ.
දේශපාලන බල අපයෝජනයට, දූෂණයට සහ අක්රමිකතාවලට අනුබල දෙන බවට චෝදනා එල්ල වන රජයේ දෙපාර්තමේන්තු නිලධාරීන්ට පසුගිය කාලයේ විවිධ චෝදනා එල්ල විය.
දේශපාලන බලපෑම් මත දීර්ඝ කාලයක් ප්රමාද වූ බව කියන සිද්ධීන් කිහිපයක් සම්බන්ධයෙන් වත්මන් ජාතික ජන බලවේගය රජය යටතේද පරීක්ෂණ සිදුවෙමින් පවතී. නීතියට ඉහළින් කිසිවකුත් නීතියට ඉහළින් කිසිවකුටත් වඩා පහත් නැත යන ප්රතිපත්තිය ශක්තිමත් කිරීම ජාතික ජනතා විමුක්ති පෙරමුණ මේ රට තුළ ඇති කිරීමට අපේක්ෂා කරන යහපාලනයේ වැදගත් සංකේතයකි.
දශක ගණනාවක් තිස්සේ ශ්රී ලාංකිකයන් වශයෙන් අප බලා සිටි දැවැන්තම වෙනස ආණ්ඩු පෙරළියකින් පමණක් අවසන් වේ යැයි සිතිය නොහැක. එය ජනතාව ලබාදුන් තාවකාලික වගකීමකි. යහපාලනය, විනිවිදභාවය, වගවීම සහ ජනතා අයිතිවාසිකම්වලට ගරු කරන නව දේශපාලන සංස්කෘතියක් ශ්රී ලංකාව තුළ නිර්මාණය කළ හැක්කේ එම වගකීම අවංක න්යාය පත්රයක් බවට වර්ධනය කර ගැනීමෙනි.
නීතිය ක්රියාත්මක කරන ආයතන, පොලිස් කොමිෂන් සභාව, රාජ්ය සේවා කොමිෂන් සභාව සහ අධිකරණය දේශපාලන මැදිහත්වීම්වලින් මිදී ස්වාධීනව තම නීතිමය වගකීම් ඉටු කළ යුතු බව දිගු කලක් බලා සිටි වෙනසයි.
මේ පසුබිම තුළ ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පිළිබඳ සාකච්ඡා හුදු දේශපාලන සටන් පාඨ බවට පත් නොවිය යුතුය. විශේෂයෙන්ම අධිකරණය හා සම්බන්ධ ඕනෑම ව්යවස්ථා සංශෝධනයක් එහි සැබෑ අන්තර්ගතය, අරමුණ සහ නීතිමය බලපෑම් පිළිබඳව ජනතාවට පැහැදිලිව පැහැදිලි කළ යුතුය.
අද වීදිවල දේශපාලන විරෝධතා ප්රජාතන්ත්රවාදී අයිතිවාසිකමක් විය හැකිය. එහෙත් එම විරෝධතාවලට හේතු වූ කරුණු අවංකව ජනතාවට පැහැදිලි කිරීම දේශපාලන පක්ෂවල වගකීමක් ද වේ. විශේෂයෙන්ම 22 වැනි ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනයට අප විරුද්ධ වන්නේ මන්දැයි පැහැදිලිව පැහැදිලි නොකර හුදෙක් ආණ්ඩු විරෝධී සටන් පාඨ මතු කිරීම ජනතා දේශපාලන දැනුමට ගරු කිරීමක් නොවේ.
අද ජනතාව අසන ප්රශ්නය එකම එක දෙයකි: ඇයි මේ විරෝධය? රටේ යහපත වෙනුවෙන්ද, නැතිනම් පැරණි දේශපාලන භාවිතයන් රැකගැනීමටද? නැතිනම් නැතිවූ දේශපාලන බලය නැවත ලබාගන්නවාද?
එහෙත් මේ දේශපාලන අරගලවලින් ඔබ්බට නව ශ්රී ලංකාවක් බිහිකිරීමේ අපේක්ෂාව ජනතාව තුළ ශක්තිමත් වී තිබේ. දශක ගනනාවක දූෂණය, අල්ලස, බලය අයුතු ලෙස භාවිතා කිරීම, දේශපාලන ඇඟිලි ගැසීම් සහ නීතිය අසමාන ලෙස ක්රියාත්මක කිරීම පිළිබඳ ජනතාවගේ සිත් වේදනාව 2024 දේශපාලන සංක්රාන්තියට සහ රටේ ජනාධිපති ලෙස අනුර කුමාර දිසානායකගේ සිංහාසනයට වැදගත් පසුබිමක් විය.
අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවෙන් අද ජනතාව නිකං පාලන වෙනසක් බලාපොරොත්තු නොවී නව දේශපාලන සංස්කෘතියක් අපේක්ෂාවෙන් බලාපොරොත්තු ඇතිව ඉදිරි ගමනට අත්වැල් බැඳගෙන සිටින්නේ එබැවිනි.
දේශපාලකයාගේ නම කුමක් වුවත් ඔහු නීතිය ඉදිරියේ වග කිව යුතුය. නිලධරයකු විසින් ඔහුගේ තනතුර කුමක් වුවත්, යම් නීතියක් උල්ලංඝණය කිරීමක්, විමර්ශනයට යටත් විය යුතුය. පසුගිය කාලයේ සිදුවූ බව කියන දූෂණ හා අක්රමිකතා පිළිබඳ යම් සාක්ෂි තිබේ නම් ඒවා නීත්යානුකූලව විමර්ශනය කළ යුතුයි.
වැරදිකරු නම් නීතියට අනුව පියවර ගත යුතුය. යුක්තිය පළිගැනීම නොවේ. එය සාක්ෂි මත පදනම්ව සත්යය තහවුරු කරන නීතිමය ක්රියා පටිපාටියකි. දශක ගණනාවක් තිස්සේ ජනතාව බලා සිටි නව ශ්රී ලංකා දේශපාලන ප්රතිසංස්කරණය මෙයයි.
ඒ නිසා දේශපාලන බලය වෙනස් වුණාම නඩු වහන්න එපා. ආණ්ඩු මාරු වුණාම පරීක්ෂණ නතර කරන්න හොඳ නැහැ. තනතුර වෙනස් වන විට නීතියේ ගමන් මග වෙනස් නොවිය යුතුය. නීතිය ද එම මාවතේම ගමන් කළ යුතුය. එය පාලකයාටත් විපක්ෂයටත් පොදු ජනතාවටත් එකසේ විය යුතුය.
අද අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් NPP ආණ්ඩුවට සහය දක්වන ජනතාවගේ අපේක්ෂාව ද එයයි. ඔවුන් දේශපාලන වෙනසක් ඇති කරන්නේ කිසිම දේශපාලනඥයකුට අන්ධ ලෙස සහාය දීමට පමණක් නොවේ. දූෂණ විරෝධී දේශපාලනයක්, නීතියේ ආධිපත්යයක්, විනිවිදභාවයක්, වගවීමක් සහ ජනවාර්ගික ආගම්වලින් තොර එක්සත් ජාතියක් තුළ සමගියෙන් ජීවත් විය හැකි එක්සත් ශ්රී ලංකාවක් බිහිකිරීමේ අපේක්ෂාවෙන් ඔවුහු වෙනස අපේක්ෂා කළහ.
ඒ බලාපොරොත්තුව පිටුපස ඉන්නේ තරුණ තරුණියන්. සාක්ෂරතා සංගම් තියෙනවා. රටේ අනාගතය ගැන හිතන බුද්ධිමතුන් ඉන්නවා. දේශපාලන පක්ෂ සීමාවෙන් ඔබ්බට නව දේශපාලන සංස්කෘතියක් සොයන මධ්යස්ථ චින්තකයෝ ද සිටිති.
ඇයි අපි මේ රට NPP ආණ්ඩුවට භාර දුන්නේ?” ප්රශ්නයට පිළිතුර ඔවුන්ට පැහැදිලිය.
එය කවුරුන් හෝ බලයට පත්කිරීම සඳහා එක් පක්ෂයක් හෝ එක් පක්ෂයක් යන අදහසින් ක්රියාත්මක වූ ජනතා නැගිටීමක් යැයි සිතීම විචාරකයන්ගේ වැරදි ගණන් බැලීමකි.
2024 දී ඇති වූ වෙනස නම් බලය පරම්පරාගත නොවීම, නීතිය දේශපාලනඥයාගේ වහල්කම නොවේ.
දූෂණය දේශපාලනයේ ස්වභාවික අංගයක් නොවන බවත්, රජයේ කාර්යාලය පුද්ගලික වරප්රසාද සඳහා දොරක් නොවන බවත්, ජනතා පාලනය වෙනස් කිරීම මැතිවරණ දින සිදුවීමක් නොවන බවත් ඔප්පු කරමින් වෙනසක් සඳහා වූ සැබෑ ජනතා නැගිටීමක් විය.
ඒ නිසා තමයි අද රටේ දේශපාලන ගමන තීරණාත්මක තැනකට පැමිණ තිබෙන්නේ. ආණ්ඩුව විවේචනය කරන අයට විවේචනය කරන්න, විපක්ෂයට සටන් පාඨ කියන්නට ඉඩ දෙන්න, පාරේ අරගල කරන අයට සටන් කිරීමට ඉඩ දෙන්න, ප්රජාතන්ත්රවාදී රටක ඊට වැඩි ඉඩක් තිබෙනවා. එහෙත් ජනතාවගේ දේශපාලන අවබෝධය කිසිවකුට ආපසු ගත නොහැක. එම කාරණය සහ වියැකී යන දේශපාලන සම්ප්රදාය අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුව පිටුපස ඇති විශාලතම බලවේගය බවට පත්ව ඇත.
දැන් හුදු සටන් පාඨ මත තීරණ ගන්නා මිනිසුන්ගේ දේශපාලන සංස්කෘතිය වෙනස් වී ඇත. ගිහියන්ගේ සිට උගතුන් දක්වා ප්රශ්න ඇසීමට පටන් ගත්හ. මිනිස්සු සාක්ෂි හොයනවා, නීතිය ක්රියාත්මක කරන්න බලාගෙන ඉන්නවා. ඔවුන් දේශපාලන පක්ෂවල අතීතය සහ වර්තමානය සංසන්දනය කරන්න පටන් අරන්. ඒ නිසා තමන්ගේ ප්රජාතන්ත්රවාදී තීන්දුව දෙන තරමට ජනතාවම දේශපාලන වශයෙන් සවිඥානිකයි.
ජනතා විමුක්ති පෙරමුණේ සහ ජාතික ජන බලවේගයේ (NPP) ආණ්ඩුවේ ගමන පහසු එකක් නොවේ. එපමණක් නොව, නීතියේ ආධිපත්යය යටතේ, දූෂණයෙන් තොරව සැමට සමාන අවස්ථා නිර්මාණය කර, වාර්ගික ආගම් භේදවලින් තොරව "ශ්රී ලාංකික" යන තනි අනන්යතාවයක් යටතේ ජනතාව ඒකරාශී කර ජාතියක් බිහිකිරීමේ අරමුණ ලෙහෙසියෙන් අත්හැරිය යුතු නොවේ. අනුර කුමාර දිසානායක ප්රමුඛ ආණ්ඩුවේ ශක්තිය ඇත්තේ බලයේ පමණක් නොවේ. ඒ වෙනස විශ්වාස කරන, ඒ සමඟ ගමන් කරන ජනතාවගේ විශ්වාසය මතයි.
එම විශ්වාසය ආරක්ෂා කිරීම රජයේ වගකීමක් ලෙස දකින තරමටම ශ්රද්ධාව නිරීක්ෂණය කිරීම ජනතාවගේ පරම වගකීම වන අතර එය ප්රජාතන්ත්රවාදයේ මාවතට ගෙන ඒම රටේ සමස්ත ජනතාවගේ වගකීමකි.
ශ්රී ලංකාව නැවතත් පැරණි දේශපාලන සංස්කෘතියට යා යුතුද? නැතිනම් නීතිය, සාධාරණත්වය, වගවීම සහ සමානාත්මතාවය මත පදනම් වූ නව දේශපාලන සංස්කෘතියක් කරා ගමන් කළ යුතුද?
මේ ප්රශ්නයට අවසාන පිළිතුර කිසිම දේශපාලනඥයකුට නැත.
ඒක තියෙන්නේ මිනිස්සුන්ගේ හදවත් වල.
ඒක තියෙන්නේ ජනතාවගේ හඬින්.
ඒක තියෙන්නේ ජනතාවගේ විඥානයේ.
එය ජනතාවගේ ප්රජාතන්ත්රවාදී තීන්දුවේ ය.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
28-09-2026.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 28, 2026
Rating:



கருத்துகள் இல்லை: