(සිංහල පරිවර්තනය සමග) விஜேவீர முதல் அநுர வரை! இடதுசாரி கொள்கைச் சிந்தனையின் வெற்றிப் பயணம.
ரோஹண விஜேவீரவால் 1965-இல் விதைக்கப்பட்ட இடதுசாரி சிந்தனைகளும், அரசு, பொருளாதாரம் மற்றும் அதிகாரம் குறித்த அடிப்படையான மூன்று கேள்விகளுமே இலங்கையின் தற்கால மாற்று அரசியலுக்கான அடித்தளமாக அமைந்துள்ளது.
பல தசாப்த கால போராட்டங்கள், இழப்புகள் மற்றும் வரலாற்றுத் துயரங்களைக் கடந்து, தற்பொழுது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அந்த இலட்சியங்களை நடைமுறைப்படுத்தும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது.
1965ஆம் ஆண்டு, தோழர் ரோஹண விஜேவீர, இடதுசாரி அரசியல் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளுக்கு மாற்றான ஒரு புதிய அரசியல் பாதையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கைகளில் குவிந்திருந்த சூழலில், அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில்,
அரசு யாருக்காக? — மக்களுக்காக!
பொருளாதாரம் யாருக்காக? — மக்களுக்காக!
அதிகாரம் எதற்காக? — பொதுநலனுக்காக!
என்ற பிரதான மூன்று கேள்விகளுக்கான விடைகளுடன், 1965இல் தொடங்கிய அரசியல் சிந்தனை மற்றும் அமைப்புச் செயல்பாடுகள் பின்னர் 1970களின் தொடக்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) உருவாக வழிவகுத்தன.
மக்கள் விடுதலை முன்னணி எழுப்பிய இந்த மூன்று கேள்விகளும் வெறும் அரசியல் கோஷங்களாக இருக்கவில்லை. அரச அதிகாரம் என்பது தனிநபர்களுக்கோ, குடும்பங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட வர்க்கத்திற்கோ சொந்தமான தனிச்சொத்து அல்ல; அது மக்களால் வழங்கப்படும் ஒரு பொறுப்பு என்ற இடதுசாரி அரசியல் தத்துவத்தின் அடிப்படை வெளிப்பாடாகவே இருந்தது.
மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வம் சிலரின் கைகளில் மட்டுமே குவியக்கூடாது. அரசியல் அதிகாரம் தனிப்பட்ட சலுகைகளுக்கான கருவியாக மாறிவிடக்கூடாது. அரசு என்பது மக்களை ஆளுவதற்கான இயந்திரமாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பை ஏற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே இந்தச் சிந்தனையின் மைய நோக்கமாக அமைந்திருந்தது.
அதன் பின்னர், மக்கள் விடுதலை முன்னணி கடந்து வந்த இலங்கையின் அரசியல் வரலாற்றில் எழுச்சிகள், அடக்குமுறைகள், மோதல்கள், ஆயிரக்கணக்கான உயிர்த்தியாகங்கள் மற்றும் சொல்லொண்ணாத குடும்பத் துயரங்கள் இடம்பெற்றன.
ஒரு தலைமுறையையே இழந்த வலி, இன்னும் ஆறாத வடுவாக சமூக நினைவில் பதிந்துள்ளது. அந்த வரலாற்றை மறந்துவிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அதேவேளை, அந்தத் துயரங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் புதிய அரசியல் பாதையையும் உருவாக்க முடியாது.
காலம் மாறும்போது அரசியல் சூழலும் மாறுகிறது. தலைமுறைகள் மாறுகின்றன. போராட்டங்களின் வடிவங்கள் மாறுகின்றன. ஆனால் சமூக நீதி, சமத்துவம், ஊழல் எதிர்ப்பு, மக்களின் உரிமை, பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் மைய அரசியல் போன்ற அடிப்படைக் கேள்விகள் தொடர்ந்து சமூகத்தின் முன் நிற்கின்றன.
அந்த வகையில், ரோஹண விஜேவீர முன்வைத்த அரசியல் கேள்விகளும் சிந்தனைகளும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை வெறுமனே கடந்த காலத்தின் ஒரு அத்தியாயமாகக் கருத முடியாது. அவை பல்வேறு அரசியல் மாற்றங்களின் ஊடாக, புதிய தலைமுறைகளின் அரசியல் சிந்தனைகளிலும் தொடர்ந்து பல கோணங்களிலிருந்தும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.
2024ஆம் ஆண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் மூலம், இலங்கை அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமானது. அந்த மாற்றத்தின் முக்கியத்துவம் வெறுமனே ஆட்சி மாற்றத்தில் இல்லை.
அரசியல் அதிகாரம் எதற்காக? அரசு யாருக்காக? பொதுச் சொத்துக்கள் யாருடையவை? ஊழலுக்கு எதிரான அரசின் பொறுப்பு என்ன? சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமா? என்ற கேள்விகளை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வந்ததில்தான் அதன் ஆழமான அர்த்தம் இருக்கிறது.
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியின் இரண்டு ஆண்டுகாலப் பயணத்தையும் இதே அளவுகோல்களில்தான் மதிப்பிட வேண்டும். மக்கள் நம்பிக்கையை வெல்வது தேர்தலில் வாக்குகளைப் பெறுவதால் மட்டும் முடிவதில்லை என்பதற்கு அப்பால், அந்த நம்பிக்கையை நல்லாட்சியாக மாற்றும் செயல்முறையாகவும் அது அமைந்துள்ளது.
மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளையில், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் மக்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகின்றன.
நீண்டகாலமாக அரசியல் அதிகாரத்துடனும் நிர்வாக அமைப்புகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருந்த ஊழல், வீண்விரயம் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம் போன்ற சவால்களுக்கு எதிராக மாற்று அரசியல் பண்பாட்டை உருவாக்கும் முயற்சியே இந்த ஆட்சியின் முக்கியமான அடையாளமாகவும், வெற்றிக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பார்வையாகவும் உள்ளது.
அந்த வகையில், சுதந்திரத்திற்குப் பின்னரான பல தசாப்தங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள், சமூகப் பிளவுகள் மற்றும் இன, மத, மொழி அடிப்படையிலான அரசியல் முரண்பாடுகள் ஆகியவற்றிலிருந்து நாட்டை ஒரு புதிய அரசியல் திசைக்கு நகர்த்துவது எளிதான பணியல்ல.
நீண்டகாலமாக நிலவி வந்த பாரம்பரிய அதிகார அரசியலுக்கு மாற்றாக, சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை மையப்படுத்திய அரசியல் பண்பாட்டை உருவாக்கும் முயற்சி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக சமத்துவம், சுரண்டலுக்கு எதிரான கொள்கை, அரசியல் அதிகாரத்தின் ஜனநாயகப் பயன்பாடு மற்றும் சாதாரண மக்களின் உரிமைகள் ஆகிய கேள்விகளை முன்னிறுத்திய அந்த அரசியல் சிந்தனைகள், பல்வேறு வரலாற்று மாற்றங்களையும் கடந்து இன்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் தளத்தில் புதிய வடிவில் மக்கள் நம்பிக்கையுடன் வெளிப்படுகின்றது.
ரோஹண விஜேவீர உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பல தோழர்கள் தங்களது அரசியல் கொள்கைக்காகவும் நம்பிக்கைகளுக்காகவும் செய்த தியாகங்களின் வரலாற்று மதிப்பீடு, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற அதேவேளையில், அவர்கள் முன்வைத்த இடதுசாரி அரசியல் சிந்தனைகளில் இடம்பெற்ற சமூக சமத்துவம், சுரண்டலுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் பொதுநல அரசியல் கருத்துக்கள் இன்றைய மாற்று அரசியல் உரையாடலிலும் தாக்கம் செலுத்துகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்த மாற்றத்தின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ளும்போது, ரோஹண விஜேவீர தலைமையில் உருவான இடதுசாரி அரசியல் சிந்தனையையும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆரம்பகால அரசியல் பயணத்தையும், அவர்கள் எதிர்கொண்ட தியாகங்களையும் பற்றி தெரிந்துகொள்ளும் அதீத தேடல்களில் தற்கால இளைஞர் சமூகம் இறங்கியுள்ளது.
எனவே, இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான நிகழ்கால உலகில், இடதுசாரி அரசியல் என்பது கடந்த காலத்தின் கோஷங்களை மீண்டும் கூறுவதில் மட்டும் தங்கி இருக்கவில்லை. அதன் சமகாலப் பொருள், சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் அரசியலையும் உருவாக்குவதாகும்.
சந்தையும் இருக்கலாம், தனியார் துறையும் இருக்கலாம், முதலீடுகளும் வரலாம், தொழில்துறைகளும் வளரலாம். ஆனால் இந்த வளர்ச்சியின் பயன் சமூகத்தின் ஒரு சிறிய பகுதியிடம் மட்டுமே குவியாமல், பெரும்பான்மையான மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இன்றைய இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாக உள்ளது.
ஒரு விவசாயி உற்பத்தி செய்வதற்கான நியாயமான வாய்ப்பைப் பெற வேண்டும். ஒரு தொழிலாளி தனது உழைப்புக்குரிய மரியாதையையும் நியாயமான வருமானத்தையும் பெற வேண்டும். ஒரு இளைஞன் தனது எதிர்காலத்தை நாட்டுக்குள்ளேயே கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும்.
ஒரு மாணவன் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக தனது கல்வியை இடைநிறுத்திவிடக் கூடாது. இந்தக் கேள்விகளுக்கு அரசியல் தீர்வுகளை உருவாக்குவதே சமகால இடதுசாரி அரசியலின் பொருளாகவும், NPP அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும் பாதையுமாக உள்ளது.
எனவே,அரசு யாருக்காக? — மக்களுக்காக!
பொருளாதாரம் யாருக்காக? — மக்களுக்காக!
அதிகாரம் எதற்காக? — பொதுநலனுக்காக!
இந்த இடதுசாரி சமத்துவ அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற மூன்று கேள்விகளுக்கான நடைமுறை விடைகளில்தான் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியின் வரலாற்று முக்கியத்துவம் எழுதப்பட இருக்கின்றது.
இரண்டு ஆண்டுகள் என்பது ஒரு நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாகப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு புதிய அரசியல் பண்பாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு அது முக்கியமான காலகட்டமாக இருக்கின்றது.
அதனடிப்படையில், இலங்கை கடந்த காலத்தின் ஊழல், வீண்விரயம், அதிகார மையப்படுத்தல், இன–மத–மொழி அடிப்படையிலான பிளவு மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம் ஆகியவற்றைத் தாண்டி, சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார நியாயம் மற்றும் மனித உரிமையை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்று உள்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் காட்டியுள்ளது.
ஆகவே, மக்கள் வழங்கிய அதிகாரத்தை, மீண்டும் மக்களுக்கே சொந்தமான நிலையான நல்லாட்சியாக மாற்ற வேண்டும் என்றால், அரசியலில் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு சமூகத்திலும் வெளிப்படைத்தன்மைக்கான கலாசாரம் வளர வேண்டும். ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும் என்றால், ஊழலை ஏற்றுக்கொள்ளாத குடிமக்கள் உருவாக வேண்டும். சட்டத்தின் ஆட்சி வேண்டும் என்றால், சட்டத்தை மதிக்கும் அரசியல் பண்பாடு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வலுப்பெற வேண்டும்.
அரசியல் மாற்றம் அரசாங்க அலுவலகங்களில் மட்டும் நிகழ்வதில்லை. அது குடும்பங்களில், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், பணியிடங்களில், ஊடகங்களில் மற்றும் சமூக உரையாடல்களிலும் நிகழ வேண்டும். இந்த மாற்றத்தைத்தான் ரோஹண விஜேவீர கட்டியெழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியானது 70 வருட இடதுசாரிக் கொள்கை வரலாற்றுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூலமாக ஏற்படுத்தி வருகின்றது.
அஹமட் இர்ஷாட்.
11-09-2026
(සිංහල පරිවර්තනය සමග) விஜேவீர முதல் அநுர வரை! இடதுசாரி கொள்கைச் சிந்தனையின் வெற்றிப் பயணம. විජයවීරගෙන් අනුරට!
වාමාංශික දේශපාලන චින්තනයේ ජයග්රාහී ගමන.
1965 දී රෝහණ විජේවීර විසින් රෝපණය කරන ලද වාමාංශික අදහස් සහ රජය, ආර්ථිකය සහ බලය යන මූලික ප්රශ්න තුන ශ්රී ලංකාවේ සමකාලීන විකල්ප දේශපාලනයේ පදනම සකස් කරයි.
දශක ගණනාවක අරගල, අහිමිවීම් හා ඓතිහාසික ඛේදවාචකයන්ගෙන් පසුව අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ වත්මන් ජාතික ජන බලවේගය (NPP) රජය එම පරමාදර්ශ ක්රියාත්මක කරන නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කර ඇත.
+++++++++++++++++
1965 දී වාමාංශික දේශපාලන අදහස්වලින් ආභාෂය ලැබූ රෝහණ විජේවීර සහෝදරයා එවකට ශ්රී ලංකාවේ පැවති සමාජ, ආර්ථික හා දේශපාලන ප්රතිවිරෝධතා සඳහා විකල්පයක් සඳහා නව දේශපාලන මාවතක් සෙවීමට උත්සාහ කළේය.
කම්කරු පන්තිය ඇතුළු වැඩකරන ජනතාවගේ අවශ්යතා නොසලකා හැර ආර්ථික හා දේශපාලන බලය කිසියම් පන්තියක් අතේ සංකේන්ද්රණය වූ තත්ත්වය වෙනස් කිරීමේ අරමුණින්,
ආණ්ඩුව කා වෙනුවෙන්ද? - ජනතාව වෙනුවෙන්!
ආර්ථිකය කා වෙනුවෙන්ද? - ජනතාව වෙනුවෙන්!
බලය යනු කුමක් සඳහාද? - පොදු යහපත සඳහා!
ප්රධාන ප්රශ්න තුනකට පිළිතුරු සහිතව, 1965 දී ආරම්භ වූ දේශපාලන චින්තනය සහ සංවිධානාත්මක ක්රියාකාරකම් පසුව 1970 දශකයේ මුල් භාගයේ ජනතා විමුක්ති පෙරමුණ (ජවිපෙ) පිහිටුවීමට හේතු විය.
ජනතා විමුක්ති පෙරමුණ මතු කළ මේ ප්රශ්න තුන හුදු දේශපාලන සටන් පාඨ නොවීය. රාජ්ය බලය යනු පුද්ගලයන්ගේ, පවුල්වල හෝ යම් පන්තියක තනි දේපළක් නොවේ; එය ජනතාව විසින් පවරන ලද වගකීමක වාම දේශපාලන දර්ශනයේ මූලික ප්රකාශනයක් විය.
මිනිසුන්ගේ ශ්රමයෙන් බිහිවන ධනය සුළු පිරිසක් අතේ සංකේන්ද්රණය නොවිය යුතුයි. දේශපාලන බලය පුද්ගලික වරප්රසාද සඳහා මෙවලමක් බවට පත් නොවිය යුතුයි. මෙම චින්තනයේ කේන්ද්රීය පරමාර්ථය වූයේ රජය ජනතාව පාලනය කරන යන්ත්රයක් නොවිය යුතු අතර, ජන ජීවිතය යහපත් කිරීමට සමාජ වගකීමක් ඇති සංවිධානයක් විය යුතු බවයි.
එතැන් පටන් මහජන විමුක්ති පෙරමුණ පසු කළ ශ්රී ලංකා දේශපාලන ඉතිහාසය පෙරළි, මර්දන, ගැටුම්, දහස් ගණන් කැපකිරීම් සහ අප්රකාශිත පවුල් ඛේදවාචකවලට මුහුණ දුන්නේය.
පරම්පරාවක් අහිමි වීමේ වේදනාව සුව නොවූ කැළලක් ලෙස සමාජ මතකයේ රැඳී පවතී. ඒ ඉතිහාසය අමතක කරලා අපිට අනාගතය හදන්න බැහැ. එසේම එම ඛේදවාචකයන්ගෙන් පාඩම් ඉගෙන නොගෙන නව දේශපාලන මාවතක් සකස් කළ නොහැක.
කාලය වෙනස් වන විට දේශපාලන පරිසරයද වෙනස් වේ. පරම්පරා වෙනස් වෙනවා. අරගල රටා වෙනස් වෙමින් පවතී. එහෙත් සමාජ සාධාරණත්වය, සමානාත්මතාවය, දූෂණයට එරෙහි වීම, ජනතා අයිතීන්, පොදු දේපළ ආරක්ෂා කිරීම, ජනතාව කේන්ද්ර කරගත් දේශපාලනය වැනි මූලික ප්රශ්න දිගින් දිගටම සමාජය හමුවේ පවතී.
ඒ අර්ථයෙන් රෝහණ විජේවීර මහතා විසින් ඉදිරිපත් කරන ලද දේශපාලන ප්රශ්න සහ අදහස් ශ්රී ලාංකේය දේශපාලන ඉතිහාසයට ඇති කළ බලපෑම හුදෙක් අතීත පරිච්ඡේදයක් ලෙස සැලකිය නොහැකිය. විවිධ දේශපාලන වෙනස්කම් හරහා ඔවුන් නව පරම්පරාවල දේශපාලන චින්තනය තුළ නොයෙක් පැතිවලින් දෝංකාර දෙනවා.
2024 දී ශ්රී ලංකා දේශපාලනයේ නව පරිච්ඡේදයක් ආරම්භ වූයේ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජන බලවේගය බලයට පත්වීමත් සමඟය. එම වෙනසෙහි වැදගත්කම හුදෙක් පාලන තන්ත්ර වෙනසක් පමණක් නොවේ.
දේශපාලන බලය කුමක් සඳහාද? ආණ්ඩුව කා වෙනුවෙන්ද? පොදු දේපල අයිති කාටද? දූෂණයට එරෙහිව ආණ්ඩුවේ වගකීම කුමක්ද? නීතියේ ආධිපත්යය සැමට සමානද? ප්රශ්න නැවත දේශපාලන විවාදයේ කේන්ද්රය වෙත ගෙන ඒම තුළ එහි ගැඹුරුම අර්ථය ඇත.
අනුර කුමාර දිසානායක ප්රමුඛ රෙජීමයේ දෙවසරක ගමනද එම නිර්ණායක මත විනිශ්චය කළ යුතුය. ජනතා විශ්වාසය දිනා ගැනීම යනු මැතිවරණවලදී ඡන්ද ලබා ගැනීම පමණක් නොව එම විශ්වාසය යහපාලනයක් බවට පත් කිරීමේ ක්රියාවලියක් ද වේ.
එමෙන්ම ආර්ථික ස්ථාවරත්වයක් ඇති කිරීමට පියවර ගනිමින් සිටින අතරම රාජ්ය ආයතනවල ක්රියාකාරීත්වයේ විනිවිදභාවය, වගවීම සහ නීතියේ ආධිපත්යය තහවුරු කිරීමට ගන්නා උත්සාහයන් ද ජනතාව තුළ නව විශ්වාසයක් ඇති කරයි.
දේශපාලන බලය සහ පරිපාලන ව්යුහයන් සමඟ දිගු කලක් සම්බන්ධ වී ඇති දූෂණය, නාස්තිය සහ අවපාලනය යන අභියෝගවලට එරෙහිව විකල්ප දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීමට දරන උත්සාහය මෙම පාලන තන්ත්රයේ වැදගත් ලක්ෂණයක් වන අතර සාර්ථකත්වය පිළිබඳ දේශීය හා ජාත්යන්තර දැක්මකි.
ඒ නිසා නිදහසින් පසු දශක කිහිපය තුළ ශ්රී ලංකාව මුහුණ දී ඇති ආර්ථික අර්බුද, සමාජ බෙදීම්, වාර්ගික, ආගම, භාෂාව මුල් කරගත් දේශපාලන ගැටුම්වලින් රට නව දේශපාලන දිශානතියකට ගෙන යාම පහසු කාර්යයක් නොවේ.
දීර්ඝ කාලීන සම්ප්රදායික බල දේශපාලනයට විකල්පයක් ලෙස සමානාත්මතාවය, සමාජ සාධාරණත්වය, ප්රජාතන්ත්රවාදී වගවීම සහ පොදු යහපත කේන්ද්ර කරගත් දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීමේ උත්සාහයක් මෙහිදී වැදගත් වේ.
සමාජ සමානාත්මතාව, සූරාකෑමට එරෙහි ප්රතිපත්තිය, දේශපාලන බලය ප්රජාතන්ත්රවාදී භාවිතය සහ සාමාන්ය ජනතාවගේ අයිතිවාසිකම් යන ප්රශ්න ඉදිරිපත් කළ එම දේශපාලන අදහස් විවිධ ඓතිහාසික වෙනස්කම් පසුකර අද ජාතික ජන බලවේගයේ දේශපාලන වේදිකාවේ නව මුහුණුවරකින් ජනතා විශ්වාසය ඇතිව ප්රකාශ වේ.
රෝහණ විජේවීර ඇතුළු ජනතා විමුක්ති පෙරමුණේ සහෝදරවරුන් කිහිප දෙනෙකු තම දේශපාලන මූලධර්ම හා විශ්වාසයන් වෙනුවෙන් කළ කැපකිරීම් පිළිබඳ ඓතිහාසික ඇගයීම ජාතික ජන බලවේගයේ දේශපාලන ගමනේ වැදගත් ස්ථානයක් ගන්නා අතරම, සමාජ සමානාත්මතාවය, සූරාකෑමට එරෙහි ස්ථාවරය සහ පොදු අවශ්යතා මත ඔවුන්ගේ දේශපාලන අදහස් අද දේශපාලනික වශයෙන් බලපාන බව කිසිවකුටත් ප්රතික්ෂේප කළ නොහැකිය. දේශනය.
මෙම වෙනසේ ඓතිහාසික පසුබිම තේරුම් ගනිමින් රෝහණ විජේවීරගේ නායකත්වයෙන් වාමාංශික දේශපාලන චින්තනය, ජනතා විමුක්ති පෙරමුණේ මුල්කාලීන දේශපාලන ගමන සහ ඔවුන් මුහුණ දුන් කැපකිරීම් තේරුම් ගැනීමේ තීව්ර ගවේෂණයකට සමකාලීන තරුණ ප්රජාව යොමු වී ඇත.
ඒ නිසා වර්තමාන ලෝකයේ වත්මන් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ නායකත්වයෙන් වාමාංශික දේශපාලනය රැඳෙන්නේ අතීතයේ සටන් පාඨ කීම මත නොවෙයි. එහි සමකාලීන අර්ථය වන්නේ සමාජයේ බහුතරයකගේ ජීවිත කේන්ද්ර කරගත් ආර්ථිකයක් සහ දේශපාලනයක් නිර්මාණය කිරීමයි.
වෙළඳපොලක් තියෙන්න පුළුවන්, පුද්ගලික අංශයක් තියෙන්න පුළුවන්, ආයෝජන එන්න පුළුවන්, කර්මාන්ත දියුණු වෙන්න පුළුවන්. නමුත් අද වාම ප්රගතිශීලි චින්තනය වන්නේ මෙම සංවර්ධනයේ ප්රතිලාභය සමාජයේ කුඩා කොටසකට පමණක් කේන්ද්රගත නොවී බහුතර ජනතාව වෙත ළඟා විය යුතු බවයි.
ගොවියාට නිෂ්පාදනය කිරීමට සාධාරණ අවස්ථාවක් ලැබිය යුතුයි. සේවකයෙකුට ඔහුගේ ශ්රමයට ගෞරවයක් සහ සාධාරණ ප්රතිලාභයක් ලැබිය යුතුය. තරුණයෙකුට තම අනාගතය රට තුළ ගොඩනගා ගැනීමට අවස්ථාව තිබිය යුතුයි.
ශිෂ්යයෙක් තම පවුලේ ආර්ථික තත්ත්වය නිසා අධ්යාපනය නතර නොකළ යුතුය. මෙම ප්රශ්නවලට දේශපාලන විසඳුම් නිර්මාණය කිරීම සමකාලීන වාම දේශපාලනයේ හරය වන අතර NPP රජය රට ඉදිරියට ගෙන යන මාවතයි.
ඉතින් ආණ්ඩුව කා වෙනුවෙන්ද? - ජනතාව වෙනුවෙන්!
ආර්ථිකය කා වෙනුවෙන්ද? - ජනතාව වෙනුවෙන්!
බලය යනු කුමක් සඳහාද? - පොදු යහපත සඳහා!
මෙම වාමාංශික සමානාත්මතා දේශපාලනයේ පදනම වන ප්රශ්න තුනට ප්රායෝගික පිළිතුරු තුළ අනුර කුමාර දිසානායකගේ පාලනයේ ඓතිහාසික වැදගත්කම ලියැවී ඇත.
රටක ඉතිහාසයේ වසර දෙකක් යනු ඉතා දිගු කාලයක් නොවේ. නමුත් එය නව දේශපාලන සංස්කෘතියකට අඩිතාලම දැමීමේ වැදගත් කාල පරිච්ඡේදයක් විය.
ඒ අනුව අතීතයේ පැවැති දූෂණය, නාස්තිය, බලය මධ්යගත කිරීම, වාර්ගික-ආගමික-භාෂා භේදය සහ වගකීම් රහිත පාලනය ජයගෙන සමානාත්මතාවය, සමාජ සාධාරණත්වය, නීතියේ ආධිපත්යය, ආර්ථික යුක්තිය සහ මානව හිමිකම් කේන්ද්ර කරගත් නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කළ හැකි බව ශ්රී ලංකාව දේශීය හා ජාත්යන්තර වශයෙන් පෙන්වා දී ඇත.
ඒ නිසා ජනතාව ලබාදුන් බලය නැවත ජනතාවට අයිති තිරසාර යහපාලනයක් බවට පත්කරන්න නම් දේශපාලනය තුළ විනිවිදභාවයක් ඇති කළ යුතුයි. ඒ සඳහා සමාජය තුළත් විනිවිදභාවය පිළිබඳ සංස්කෘතියක් ගොඩනැගිය යුතුයි. දූෂණ විරෝධී ආණ්ඩුවක් අවශ්ය නම් දූෂණය නොපිළිගන්නා පුරවැසියන් නිර්මාණය කළ යුතුයි. නීතියේ ආධිපත්යය ඇතිවීමට නම් සමාජයේ සෑම තරාතිරමකම නීතිගරුක දේශපාලන සංස්කෘතියක් ශක්තිමත් කළ යුතුය.
දේශපාලන වෙනසක් සිදුවන්නේ රජයේ කාර්යාලවල පමණක් නොවේ. එය පවුල්වල, පාසල්වල, විශ්වවිද්යාලවල, සේවා ස්ථානවල, මාධ්යවල සහ සමාජ සංවාදවල සිදුවිය යුතුයි. වසර 70ක වාමාංශික ප්රතිපත්තිවල ඉතිහාසයක් ඇති රෝහණ විජේවීර මහතා ගොඩනැගූ ජනතා විමුක්ති පෙරමුණ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව හරහා ගෙන එන්නේ එම වෙනසයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
11-09-2026
(සිංහල පරිවර්තනය සමග) விஜேவீர முதல் அநுர வரை! இடதுசாரி கொள்கைச் சிந்தனையின் வெற்றிப் பயணம.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:




கருத்துகள் இல்லை: