செப்டம்பர் 14 முதல் 19 வரை நாடு தழுவிய விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
வரவிருக்கும் டெங்கு அபாயத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செப்டம்பர் 14 முதல் 19 வரை நாடு தழுவிய விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என சுத்தமான இலங்கை செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே தெரிவித்தார்.
இன்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
சுகாதாரம் தொடர்பான 62 பகுதிகளை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக ஒரு விசேட செயல்பாட்டு நிலையம் நிறுவப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை அந்த நிலையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எல் நினோ சூழ்நிலையை முன்னிட்டு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு அபாயம் குறித்து முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம் என்றும், அதற்கேற்ப, அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்திகா கமகே மேலும் தெரிவித்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 11, 2026
Rating:

கருத்துகள் இல்லை: