සිංහල පරිවර්තනය සමග)ஈராண்டு ஆட்சியில் கிழக்கில் இன நல்லிணக்கமும் பன்முக அபிவிருத்தியும்.
සිංහල පරිවර්තනය සමග)ஈராண்டு ஆட்சியில் கிழக்கில் இன நல்லிணக்கமும் பன்முக அபிவிருத்தியும். දෙවසරක පාලන කාලය තුළ නැඟෙනහිර වාර්ගික සංහිඳියාව සහ බහුවිධ සංවර්ධනය.
'இலங்கையர்' மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் கிராமிய வேலைத்திட்டங்கள்.
நிலாவெளி, பாசிக்குடா, கல்லடி, அறுகம்பே பகுதிகளில் நீர்ச்சறுக்கல், கடல்சார் விளையாட்டு வசதிகள் மேம்பாடு.
திருகோணமலை எண்ணைத் தாங்கி வளாகத்தை மேம்படுத்த இலங்கை - இந்திய - UAE முத்தரப்பு ஒப்பந்தம்.
NPPயின் இரண்டாண்டு ஆட்சியும், கிழக்கின் இன நல்லிணக்கமும் பன்முக அபிவிருத்தியும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், இனவாதப் பரப்புரைகளைத் தடுத்து அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைக்கவும் கிராமிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய அரசியலில் இனவாத களமாக கிழக்கு அரசியலை மூவின மக்களின் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் சமத்துவ அபிவிருத்தியின் மையமாக மாற்றும் புதிய அரசியல் பாதையை NPP திறந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், கிழக்கு மாகாணத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் முன்னெடுத்து வருகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில், இன நல்லிணக்கம், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இன அடிப்படையிலான அரசியல் மற்றும் பிரதேசவாதப் பரப்புரைகளால் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருந்த சந்தேகங்களையும் அரசியல் விரிசல்களையும் குறைத்து, “இலங்கையர்” என்ற பொதுவான அடையாளத்தின் கீழ் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மூலம் மூவின மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள “முழு நாடுமே ஒன்றாக” (Ratama Ekata) என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் “அகன்று செல்” போதை ஒழிப்பு தேசிய செயற்திட்ட மாநாடு நடத்தப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுடன், போதைக்கு அடிமையானவர்களுக்கான குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையமும் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board) மற்றும் இலங்கை பொலிஸாரின் இணைப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், தமிழ் மொழியில் முழுமையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக அமைந்துள்ளது.
இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்டு நிலையான வாழ்க்கைக்குத் திருப்புவதே இதன் நோக்கமாகும்.
2026ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர், மாகாண அபிவிருத்திப் பணிகளும் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, பின்தங்கிய பகுதிகளின் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாண்டியடி அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் கணினி வசதிகளை உருவாக்குவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
சீனா மற்றும் இந்தியாவின் சர்வதேச உதவிகளும் இத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
அதிவேக இணைய வசதி மற்றும் தடையற்ற மின்சாரத்திற்கான UPS போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்களும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தின் Rapid Development Plan மூலம் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீண்டகாலமாக முடங்கியிருந்த மூலதன வளர்ச்சித் திட்டங்கள மீண்டும் செயற்படுத்தப்பட்டு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் ஒரே நேரத்தில் பயனடையும் நிலை உருவாகியுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதுடன், அதனைச் சுற்றியுள்ள 300 ஏக்கர் நிலம் கைத்தொழில் பேட்டைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஏக்கரில் தோல் பதனிடும் கைத்தொழில் நிறுவனத்திற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயர்மட்ட மீளாய்வுக் கூட்டங்கள் மூலம் திட்டத் தாமதங்களை குறைத்து, உள்கட்டமைப்பு மற்றும் மூலதனத் திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
அரச சேவையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டு இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக ஊழியர்களின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பொது நிறுவனங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இலகுவாக அணுகக்கூடிய Accessibility வசதிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் 2025ஏப்ரலில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபைனத்துக்கு சொந்தமான 24எண்ணெய்த் தாங்கிகளை மீள செயற்படுத்துவதற்கு கனடா தொழில்நுட்பம் மற்றும் செயற்பாடு உதவிகளை வழங்க முன் வந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் கடற்கரை வளங்கள் நவீனமயப்படுத்தப்
படுகின்றன.
நீர்ச்சறுக்கு மற்றும் கடல்சார் விளையாட்டுகளுக்கான வசதிகளுடன் திருகோணமலை நிலாவெளி, மட்டக்களப்பு பாசிக்குடா மற்றும் கல்லடி, அம்பாறை ஆறுகம்பே ஆகிய பகுதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சர்வதேச தரத்திலான பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் உணவகங்களும் விரிவுபடுத்தப்படுகின்றன.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு அரங்கில் 104 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நீச்சல் தடாகம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமானப் பணிகளும் 30.08.2026 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளும் மாகாண பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
பெரியநீலாவனைக்கு 24 மில்லியன், நிந்தவூருக்கு 22 மில்லியன், காரைதீவுக்கு 22 மில்லியன் ரூபாய் என நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாய உற்பத்திகளுக்கான உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பொத்துவில் பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்கவும் விரிவுபடுத்தவும் 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 2025 நவம்பரில் 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஜப்பான் அரசாங்கம், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(FAO) பங்களிப்புடன் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கலாச்சார மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிந்தவூர் கலாச்சார மண்டப கட்டடப் பணிகள் 600 மில்லியன் ரூபாய் செலவில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரைதீவு–மாவடிப்பள்ளி பெரிய பாலத்தை 247 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலத்தை 247 மில்லியன் ரூபா செலவில் புணரமைக்கும் பணிகளும் போக்குவரத்து அமைச்சர் பிமர் ரட்நாயக்கவின் பங்கேற்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா–குறிஞ்சாக்கேணி பாலம் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் மீள்கட்டப்பட்டு வருகிறது.
2025–2027 காலப்பகுதியில் நிறைவடையவுள்ள இத்திட்டம் சுமார் ஒரு இலட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் துறைகளிலும் முக்கிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 30 தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் 200 மிதக்கும் மீன் வளர்ப்பு கூடுகள் அமைக்கப்பட்டு வருவதுடன், 5.48 மில்லியன் மீன் குஞ்சுகள் குளங்களில் விடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் 900 மில்லியன் ரூபாய் செலவில் விவசாயிகளின் வெள்ளப்பெருக்கு மற்றும் பயிர்ச்சேதப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்னெடுக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் 550 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உன்னிச்சை ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 106 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு, சேமிப்பு வசதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை இணைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
2024–2026 காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மானிய உதவித் திட்டத்தின் கீழ் 2,371.83 மில்லியன் ரூபாய் செலவில் கிழக்கு மாகாணத்தில் 33 முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 780 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நிலையான ஆயுர்வேத கிராமம், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால காணிப் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றச் சிக்கல்களுக்கு தீர்வு காண ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலின் கீழ் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 2025 செப்டம்பர் 30ம்திகதி முறக்கண்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் இயங்கி வந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு, அந்த வளாகம் மீண்டும்பாடசாலைக்கு பயன்படுத்துவதற்காக கையளிக்கப்பட்டது வரலாற்று சிரப்பு மிக்க சம்பவமாகும்.
மட்டக்களப்பு பொது நூலகம், குடிநீர் விநியோகம் மற்றும் நகர நவீனமயமாக்கல் போன்ற சமூக உள்கட்டமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பாதுகாப்பான மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மனிதாபிமான மிதிவெடி அகற்றும் பணிகளும் தொடர்கின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மற்றும் உலக வங்கி நிதியுதவிகளுடன் வீதிகள், வாழ்வாதாரம் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் தொடர்பான ஒருங்கிணைந்த அபிவிருத்திப் பணிகளும் கண்காணிக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான NPP அரசாங்கத்தின் கிழக்கு மாகாண அணுகுமுறை, ஆடம்பரமான மெகா திட்டங்களைக் காட்டிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய நடைமுறைக்கு சாத்தியமான அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அமைந்துள்ளது.
விவசாயம் மற்றும் கடற்றொழிலை நவீனமயமாக்குதல், ஊழல் மற்றும் வீண்விரயங்களை கட்டுப்படுத்துதல், கிராமப்புற பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மேம்படுத்துதல், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகத் திகழ்கின்றன.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி என்பது வெறுமனே கட்டடங்களையும் வீதிகளையும் அமைப்பதற்கான திட்டமாக இல்லாமல், மூவின மக்களையும் ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், தொழில், சுற்றுலா மற்றும் அடிப்படை வசதிகளில் நிலையான முன்னேற்றத்தை உருவாக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பயணமாக முன்னெடுக்கப்படுகின்றது.
அஹமட் இர்ஷாட்.
20-09-2026.
ஈராண்டு ஆட்சியில் கிழக்கில் இன நல்லிணக்கமும் பன்முக அபிவிருத்தியும். දෙවසරක පාලන කාලය තුළ නැඟෙනහිර වාර්ගික සංහිඳියාව සහ බහුවිධ සංවර්ධනය.
ශ්රී ලංකික ජනතාව තිදෙනාම එකට එකතු කරන ග්රාමීය වැඩසටහන්.
නිලාවේලි, පාසිකුඩා, කල්ලඩි, ආරුගම්බේ ජල ස්කීං සහ සමුද්ර ක්රීඩා පහසුකම් සංවර්ධනය කිරීම.
ත්රිකුණාමලය තෙල් රඳවන සංකීර්ණය සංවර්ධනය කිරීමට ශ්රී ලංකාව - ඉන්දියාව - එක්සත් අරාබි එමීර් රාජ්ය ත්රෛපාර්ශ්වික ගිවිසුම
NPP ගේ දෙවසරක පාලනය, වාර්ගික සංහිඳියාව සහ නැගෙනහිර බහුමාන සංවර්ධනය.
ජාතික ජනබල ආණ්ඩුවේ වසර දෙකක කාලය තුළ නැඟෙනහිර පළාතේ වාර්ගික සංහිඳියාව ශක්තිමත් කිරීම, ජාතිවාදී ප්රචාර වැළැක්වීම සහ සියලු ජාතීන් ඒකරාශී කිරීම සඳහා ගම් මට්ටමින් වැඩසටහන් ක්රියාත්මකයි.
නැඟෙනහිර දේශපාලනය සාම්ප්රදායික දේශපාලනයේ වාර්ගික ක්ෂේත්රයේ සිට ත්රි-වාර්ගික ජනතාවගේ අයිතිවාසිකම්, ජීවනෝපාය සහ සාධාරණ සංවර්ධනයේ කේන්ද්රස්ථානය දක්වා පරිවර්තනය කිරීමට NPP නව දේශපාලන මාවතක් විවෘත කර ඇත.
+++++++++++++++++
2024 දී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වයෙන් බලයට පත් වූ ජාතික ජන බලවේගය (NPP) රජය නැගෙනහිර පළාතේ දේශපාලන, සමාජීය සහ ආර්ථික සංවර්ධනය ඒකාබද්ධ ප්රවේශයකින් ඉදිරියට ගෙන යමින් සිටී.
අම්පාර, මඩකලපුව සහ ත්රිකුණාමලය යන දිස්ත්රික්ක තුන ඇතුළත් නැගෙනහිර පළාතේ වාර්ගික සංහිඳියාව, අධ්යාපනය, සෞඛ්ය, කෘෂිකර්මය, ධීවර, යටිතල පහසුකම්, සංචාරක, ජීවනෝපාය සංවර්ධනය යන ක්ෂේත්ර කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කර ඇත.
පසුගිය කාලයේ ජනවාර්ගික දේශපාලනය සහ ප්රාදේශීයවාදී ලොබියන් නිසා දෙමළ, මුස්ලිම්, සිංහල ජනතාව අතර ඇති වූ සැක සංකා සහ දේශපාලන විරසකතා අවම කර “ක්රි ලංකා” යන පොදු අනන්යතාවය යටතේ සියලු ජන කොටස් ඒකරාශී කිරීමට උත්සාහ දරමින් සිටී.
විශේෂයෙන්ම ගම් මට්ටමින් සාකච්ඡා කර සංහිඳියා වැඩසටහන් තුළින් ජාතීන් තුනට සහෝදරත්වයෙන් ජීවත්වීමට අවශ්ය පරිසරය නිර්මාණය කිරීමට කටයුතු කරනවා.
මීට සමගාමීව මත්ද්රව්ය උවදුරට මුහුණදීමේ ජාතික වැඩසටහන යටතේ "මුළු රටම එකමුතුයි" (රටටම එකට) යටතේ "යන්න යන්න" ජාතික මත්ද්රව්ය නිවාරණ ක්රියාකාරී සැලසුම් සමුළුව මඩකලපුවේදී පැවැත්විණි. මත්ද්රව්යවලට ඇබ්බැහි වූවන් සඳහා කෙටි කාලීන ප්රතිකාර හා පුනරුත්ථාපන මධ්යස්ථානයක් ද විවෘත කෙරුණේ ජනාධිපතිතුමාගේ ප්රධානත්වයෙන් පැවැති උත්සවයට සමගාමීව ය.
අන්තරායකර ඖෂධ පාලක ජාතික මණ්ඩලය සහ ශ්රී ලංකා පොලිසිය සමඟ එක්ව ක්රියාත්මක වන මෙම ව්යාපෘතිය දෙමළ භාෂාවෙන් පුළුල් ප්රතිකාර සහ පුනරුත්ථාපන සේවා සපයන ප්රධාන මධ්යස්ථානයකි. මත්ද්රව්යවලට ඇබ්බැහි වූ තරුණ තරුණියන් යථා තත්ත්වයට පත් කර ස්ථාවර ජීවිතයකට යොමු කිරීම එහි අරමුණයි.
2026 වසරේ නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස මහාචාර්ය ජයන්ත ලාල් රත්නසේකර මහතා පත්වීමෙන් පසු පළාත් සංවර්ධන කටයුතු ද වේගවත් වී ඇත. විශේෂයෙන්ම, අවාසි සහගත ප්රදේශවල අධ්යාපනයේ ගුණාත්මක භාවය සහ මූලික පහසුකම් වැඩිදියුණු කිරීම සඳහා පළාත් අරමුදල් වෙන් කර ඇත. රුපියල් මිලියන 35 ක වියදමින් මඩකලපුව තාණ්ඩියාඩි රාජ්ය දෙමළ කලවන් පාසලේ දෙමහල් පන්තිකාමර ගොඩනැගිලි ව්යාපෘතියක් ආරම්භ කර ඇත.
පාසල්වල පරිගණක විද්යාගාර, ස්මාර්ට් පන්තිකාමර, ස්මාට් පුවරු, පරිගණක පහසුකම් ඇති කිරීමට ද කටයුතු කරගෙන යයි. චීනයේ සහ ඉන්දියාවේ ජාත්යන්තර ආධාර ද මෙම ව්යාපෘති සඳහා යොදා ගැනේ. අධිවේගී අන්තර්ජාල පහසුකම සහ අඛණ්ඩ විදුලිය සඳහා UPS වැනි පහසුකම් ද සපයන අතර ග්රාමීය සිසුන්ට නවීන ඩිජිටල් තාක්ෂණ කුසලතා ලබා ගැනීමට අවස්ථා නිර්මාණය වෙමින් පවතී.
නැගෙනහිර පළාත් සැලසුම් ලේකම් කාර්යාලයේ කඩිනම් සංවර්ධන සැලැස්ම හරහා මධ්යම රජය සහ පළාත් අමාත්යාංශ අතර සම්බන්ධීකරණය ශක්තිමත් කර ඇත. මේ හරහා දීර්ඝ කාලයක් ඇණහිට තිබූ ප්රාග්ධන සංවර්ධන ව්යාපෘති යළි සක්රීය කර ඇති අතර ත්රිකුණාමලය, මඩකලපුව සහ අම්පාර දිස්ත්රික්කවලට එකවර ප්රතිලාභ ලැබෙනු ඇත.
කෙසෙල් කඩදාසි කම්හල නැවත පණ ගන්වා ඒ අවට ඉඩම් අක්කර 300ක් කර්මාන්ත පුරය සඳහා වෙන් කර ඇත. මෙයින් අක්කර 50ක සම් පදම් කිරීමේ කර්මාන්ත ශාලාවක් සඳහා මූලික කටයුතු සිදු කෙරෙමින් පවතී. ඉහළ මට්ටමේ සමාලෝචන රැස්වීම් මගින් ව්යාපෘති ප්රමාදයන් අවම කිරීම, යටිතල පහසුකම් සහ ප්රාග්ධන ව්යාපෘති කඩිනම් කිරීම සහ ප්රදේශවාසීන් සඳහා නව රැකියා උත්පාදනය කිරීම සඳහා ද ප්රයත්න දරනු ලැබේ.
රාජ්ය සේවයේ විනිවිදභාවය ඇති කිරීමේ අරමුණින් 2026 ස්ථාන මාරු ප්රතිපත්තිය යටතේ සේවකයින්ගේ ස්ථාන මාරුවීම් සහ උසස්වීම් විධිමත් කර ඇත. ඒ හා සමානව, රාජ්ය ආයතනවල සහ නව යටිතල පහසුකම් ව්යාපෘතිවල ආබාධ සහිත පුද්ගලයින් සඳහා ප්රවේශ්යතා පහසුකම් අනිවාර්ය වේ.
ත්රිකුණාමලය තෙල් රඳවන සංකීර්ණය බලශක්ති කේන්ද්රස්ථානයක් ලෙස සංවර්ධනය කිරීම සඳහා ශ්රී ලංකාව, ඉන්දියාව සහ එක්සත් අරාබි රාජධානිය 2025 අප්රේල් මාසයේදී ත්රෛපාර්ශ්වික අවබෝධතා ගිවිසුමකට අත්සන් කර ඇති අතර, ශ්රී ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව සතු තෙල් සහිත ක්ෂේත්ර 24 ක් නැවත සක්රීය කිරීම සඳහා තාක්ෂණික සහ මෙහෙයුම් සහාය ලබා දීමට කැනඩාව ඉදිරිපත් වී ඇත.
නැඟෙනහිර පළාතේ සංචාරක ක්ෂේත්රය ජාත්යන්තර ප්රමිතියට නැංවීමේ අරමුණින් වෙරළ සම්පත් නවීකරණය කෙරේ. ත්රිකුණාමලය නිලාවේලි, මඩකලපුව පාසිගුඩා සහ කල්ලඩි, අම්පාර ආරුගම්බේ ජල ස්කීං සහ සමුද්ර ක්රීඩා සඳහා පහසුකම් සහිතව සංවර්ධනය කෙරේ.
ක්රීඩා සංචාරකයින් ආකර්ෂණය කර ගැනීම සඳහා ජාත්යන්තර මට්ටමේ පුහුණු මධ්යස්ථාන, විනෝදාස්වාද පහසුකම් සහ අවන්හල් ද පුළුල් කෙරේ. රුපියල් මිලියන 104 ක වියදමින් නව පිහිනුම් තටාකය ඇතුළු පහසුකම් සහිත කල්මුණේ සන්තංගේනි ක්රීඩා පිටියේ ඉදිකිරීම් කටයුතු 2026.08.30 දින ආරම්භ කර ඇත.
කෘෂිකර්ම හා ධීවර අංශ ද පළාත් ආර්ථිකයේ වැදගත් කුළුණු ලෙස සලකා සංවර්ධනය කෙරේ. මිරිදිය ධීවර හා කෘෂිකාර්මික නිෂ්පාදන සඳහා යටිතල පහසුකම් සහ වෙළඳපල අවස්ථා සඳහා පෙරියනීලවනෙයි සඳහා මිලියන 24 ක්, නින්දවූර් සඳහා මිලියන 22 ක් සහ කරෙයිඩියෝ සඳහා මිලියන 22 ක් වෙන් කර ඇත. මීළඟ අදියරේදී කල්මුණේ, සයින්දමර්දු සහ පොතුවිල් ප්රදේශවලට මුදල් වෙන් කරනවා.
වසායිචේන ධීවර වරාය නවීකරණය හා පුළුල් කිරීම සඳහා රුපියල් මිලියන 1,300ක් වෙන් කර ඇති අතර 2025 නොවැම්බර් මාසය වන විට රුපියල් මිලියන 350ක මූලික ප්රතිපාදන සහිතව එහි වැඩකටයුතු සිදු කර ඇත. එසේම ජපන් රජයේ දායකත්වයෙන් ඇමෙරිකානු ඩොලර් මිලියන 1.33ක ව්යාපෘතියක් ආරම්භ කර ඇත. Titwa සුළි කුණාටුවෙන් මඩකලපුව සහ ත්රිකුණාමලය දිස්ත්රික්කවලට බලපෑම්.
සංස්කෘතික හා යටිතල පහසුකම් සංවර්ධනය කෙරෙහි ද අවධානය යොමු කර ඇත. නින්දවූර් සංස්කෘතික ශාලාවේ ඉදිකිරීම් රුපියල් මිලියන 600ක වියදමින් නැවත ආරම්භ කර ඇත. රුපියල් මිලියන 247ක වියදමින් කරෙයිතිව් - මාවඩිපල්ලි පාලම ප්රතිසංස්කරණය කිරීමේ කටයුතු මේ වන විට ආරම්භ කර තිබෙනවා.
රුපියල් මිලියන 247ක වියදමින් කරෙයිතිව්-මාවටිපල්ලි පාලම ප්රතිසංස්කරණය කිරීමේ කටයුතුද ප්රවාහන අමාත්ය බිමර් රත්නායක මහතාගේ ප්රධානත්වයෙන් ආරම්භ කර ඇත.
සෞදි සංවර්ධන අරමුදලේ ඇමරිකානු ඩොලර් මිලියන 10.5 ක ප්රදානයකින් කින්නියා-කුරින්ජකේනි පාලම ප්රතිසංස්කරණය කෙරේ. 2025-2027 කාලය තුළ නිම කෙරෙන ව්යාපෘතියෙන් ලක්ෂයකට පමණ සෙත සැලසෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
වාරිමාර්ග හා පානීය ජල ක්ෂේත්රයේ ද ප්රධාන ව්යාපෘති ක්රියාත්මක වේ. තෝරාගත් පොකුණු 30 ක පාවෙන මසුන් ඇතිකිරීමේ කූඩු 200 ක් පිහිටුවා ඇති අතර ඇගිලි පැටවුන් මිලියන 5.48 ක් පොකුණුවලට මුදා හැර ඇත. ගංවතුර සහ වගා හානි පිළිබඳ ගොවීන්ගේ ගැටලුවලට විසඳුමක් ලෙස කල්ඔය වාරිමාර්ග පුනරුත්ථාපන ව්යාපෘතිය රුපියල් මිලියන 900 ක වියදමින් සිදු කෙරේ.
රුපියල් මිලියන 550ක වියදමින් මඩකලපුවේ ආරම්භ කර ඇති උන්නිච්චයි ඒකාබද්ධ ජල සම්පාදන ව්යාපෘතිය හරහා ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශ 7ක් යටතේ පවතින ග්රාම නිලධාරී ඒකක 106කට පිරිසිදු පානීය ජලය ලබාදීම ඉලක්කය වී ඇත. ආහාර සුරක්ෂිතතාව, ගබඩා පහසුකම් සහ දේශීය හා විදේශීය වෙළෙඳපොළ සබඳතා ශක්තිමත් කිරීමට ද පියවර ගැනේ.
2024-2026 කාලය තුළ ඉන්දියානු රජයේ විවිධාංගීකරණය වූ ආධාර යෝජනා ක්රමය යටතේ රුපියල් මිලියන 2,371.83 ක වියදමින් නැගෙනහිර පළාතේ ප්රධාන සංවර්ධන ව්යාපෘති 33 ක් ක්රියාත්මක කෙරේ. තිරසාර ආයුර්වේද ගම්මානය, කෘෂිකර්මාන්තය සහ ජීවනෝපාය ව්යාපෘති සඳහා අවධාරණය කරමින් ප්රාදේශීය සෞඛ්ය සේවා ශක්තිමත් කිරීම සඳහා රුපියල් මිලියන 780ක් වෙන් කර ඇත.
දීර්ඝ කාලයක සිට පවතින ඉඩම් ගැටලු සහ නැවත පදිංචි කිරීමේ ගැටලු විසඳීම සඳහා ජනාධිපතිතුමාගේ සෘජු මඟපෙන්වීම යටතේ විශේෂ කමිටු පිහිටුවා ඇත. විශේෂයෙන්ම 2025 සැප්තැම්බර් 30 වැනි දින මුර්කන්ඩන්සන් රාමක්රිෂ්ණ විද්යාලයේ ක්රියාත්මක වූ හමුදා කඳවුර ඉවත් කර එම මණ්ඩපය පාසලක් ලෙස භාවිතයට භාර දෙන ලදී.
මඩකලපුව මහජන පුස්තකාලය, ජල සම්පාදන හා නගර නවීකරණය වැනි සමාජ යටිතල පහසුකම් කටයුතු ද සිදු කෙරේ. ආරක්ෂිත නැවත පදිංචි කිරීම් සහ කෘෂිකාර්මික කටයුතු සඳහා මානුෂීය බිම්බෝම්බ ඉවත් කිරීම ද අඛණ්ඩව සිදු කෙරේ. මාර්ග, ජීවනෝපාය සහ දේශගුණයට ඔරොත්තු දීමේ ඒකාබද්ධ සංවර්ධන ව්යාපෘති ද ආසියානු සංවර්ධන බැංකුව (ADB) සහ ලෝක බැංකු අරමුදල් සමඟ නිරීක්ෂණය කෙරේ.
සමස්තයක් වශයෙන් ගත් කල, ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් NPP ආණ්ඩුවේ නැගෙනහිර පළාත් ප්රවේශය, අතිවිශාල දැවැන්ත ව්යාපෘතිවලට වඩා ජනතාවගේ දෛනික ජීවිතයට සෘජුවම සම්බන්ධ ප්රායෝගික ශක්ය වර්ධනයන් සඳහා ප්රමුඛත්වය දී ඇත.
කෘෂිකර්මාන්තය හා ධීවර කර්මාන්තය නවීකරණය කිරීම, දූෂණය හා නාස්තිය මැඬලීම, ග්රාමීය පාසල් හා රෝහල් වැඩිදියුණු කිරීම, පානීය ජල ප්රශ්න විසඳීම, රැකියා උත්පාදනය සහ වාර්ගික සහජීවනය ශක්තිමත් කිරීම එහි ප්රධාන අරමුණු වේ.
ඒ ආකාරයට නැඟෙනහිර පළාතේ සංවර්ධනය යනු ගොඩනැඟිලි, මාර්ග ඉදිකිරීමේ සැලසුමක් පමණක් නොව, ත්රිවිධ ජාතීන් ඒකරාශී කර, ඔවුන්ගේ ජීවනෝපාය ශක්තිමත් කර, අධ්යාපන, සෞඛ්ය, කර්මාන්ත, සංචාරක, මූලික පහසුකම්වල තිරසාර ප්රගතියක් ඇති කිරීමේ බහුවිධ ගමනකි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
"අපේ රජය, දෙවසරක. පාලනය - රටට යහපතක්" යනුවෙන් දිනකරන් සඟරාවේ වර මංජරි විශේෂ මුද්රණයක් සඳහා ලියා ඇත.
20-09-2026.
සිංහල පරිවර්තනය සමග)ஈராண்டு ஆட்சியில் கிழக்கில் இன நல்லிணக்கமும் பன்முக அபிவிருத்தியும்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2026
Rating:




கருத்துகள் இல்லை: