Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அனோஜனின் விடுதலைக்காக மூவின மக்களும் கைகோர்ப்பு: வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் நடைபவனியை முன்னெடுத்தனர்.


இதன்போது பொதுமக்களிடமிருந்து விசேட கையெழுத்துகளும் சேகரிக்கப்பட்டன.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் அனோஜனின் விடுதலை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களின் பங்கேற்புடன் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச் சென்றது.

பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றதைத் தொடர்ந்து, அனோஜனைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நடைபவனியாகச் சென்ற பொதுமக்களும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் இந்தக் கையெழுத்து மனுக்கள், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அத்துடன், இலங்கை அரசும் இந்த விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் மிகத் துரிதமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எனப் பலரும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனோஜனின் விடுதலைக்காக மூவின மக்களும் கைகோர்ப்பு: வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.