Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நெதர்லாந்து தூதுவர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ (அல் அக்ஸா) பள்ளிவாயலுக்கு விஜயம்


நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்திய சிறப்புமிக்க சந்திப்பு

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் His Excellency Mr. Wiebe Jakob de Boer அவர்கள்,  புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு 03.09.2026 வியாழக்கிழமை இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.


இவ்விஜயம் மிகவும் சிறப்பான முறையிலும், அன்பான வரவேற்புடனும் நடைபெற்றதுடன், தூதுவர் அவர்களுக்கு  பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பில் விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது.


தூதவருடன் வருகை தந்த Mr. Namal Perera மற்றும் Mr. Chryshane Mendis ஆகியோரும் வருகை தந்தனர்

இந்நிகழ்வில் பள்ளிவாயல் தலைவரும் நகர சபை உறுப்பினருமான  ஜனாப் MIM. ஜவாஹிர் JP, உப தலைவர் MIM. பைசர் நகர சபை உறுப்பினர் மௌலவி அஜ்வத் பலாஹி, எமது பள்ளிவாயல் ATMT (awirnes through mosque tour) குழுத் தலைவர் அல்ஹாஜ் சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB, பிரதம இமாம் அஷ் ஷெய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA மற்றும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


மேலும், நிகழ்வில் அல்ஹாஜ் சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB அவர்கள், காத்தான்குடி பிரதேசத்தின் வரலாறு, சமூக, கல்வி, சமய மற்றும் அபிவிருத்தி சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களையும், எமது அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலின் சமய, கல்வி, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்தார்.


அத்துடன், தூதுவர் அவர்களால் காத்தான்குடி மற்றும் பள்ளிவாயல் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சட்டத்தரணி அவர்களினால் தெளிவானதும் திருப்திகரமானதுமான பதில்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, தூதுவர் அவர்கள்  பள்ளிவாயலை முழுமையாகப் பார்வையிட்டு, அதன் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.


இந்த விஜயத்தின் போது, மத நல்லிணக்கம், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பிலும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.


விஜயத்தின் நிறைவில்,  பள்ளிவாயலுக்கு வருகை தந்தமை குறித்து தனது மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளிப்படுத்திய His Excellency Mr. Wiebe Jakob de Boer அவர்கள், பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும் சமூகத்தினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்
நெதர்லாந்து தூதுவர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ (அல் அக்ஸா) பள்ளிவாயலுக்கு விஜயம் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.