ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்துடன் இணைந்ததாக, கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளை ஆராயும் வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேற்று (2) மண்டபத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களுடன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 03, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 03, 2026
Rating:






கருத்துகள் இல்லை: