Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வெகு சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தின் முப்பெரும்விழா


(ஏ.எல்.டீன் பைரூஸ்)

வெகு சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தின் முப்பெரும்விழா..

மட்டக்களப்பு மத்தி வலயம் காத்தான்குடி கோட்ட கல்வி பாடசாலையான மட்/மம/ ஹைறாத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா பாடசாலையின் அதிபர் ஜனாப். NMA. றஹீம் SLPS தலைமையில் இன்று 09.09.2026 புதன் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம  அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் U.H.M அப்துல்லா, மற்றும் 
MBM. பிர்தௌஸ் (நளிமி) 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விஷேட அதிதியாக காத்தான்குடி கோட்ட கல்வி பணிப்பாளர் AJ. மர்சூக்  SLEAS கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய முப்பெரும் நிகழ்வாக.... 

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும்கௌரவிப்பு விழா.

ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா. 

மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் கௌரவிப்பு விழா என்பன இடம் பெற்றது.

மேலும் இதன் போது பாடசாலை சமூகத்தால் பல பிரிவினருக்கும் பல பரிசில்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இன்றைய நிகழ்வில் கல்வி அதிகாரிகள், அரசியல் வாதிகள்,பள்ளிவாயல் நிருவாகிகள், பாடசாலை சமூகம், பெற்றோர் சமூகம், ஆசியர்கள் என பலரும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்

























வெகு சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தின் முப்பெரும்விழா Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.