Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) இன-மத அடையாளங்களுக்கு அப்பால்: NPP அரசின் சமத்துவ கொள்கையும்,முஸ்லிம்களின் எதிர்காலமும்


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிழைத்துப்போன இடமும், தேசிய நீரோட்டத்தில் தகுதி அடிப்படையிலான அணுகு முறையும்.


முஸ்லிம் தனித்துவ கட்சிகள் முன்னெடுத்த அடையாள அரசியலைக் கைவிட்டு, பொதுவான தேசிய அரசியல் நீரோட்டத்தினூடாகவே முஸ்லிம்களின் உரிமைகளுக்கும், கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தீர்வு காண முடியும் என்ற யதார்த்தத்தை நோக்கி முஸ்லிம் சமூகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


தகுதி மற்றும் திறமையின் (Merit-based) அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுவதாகவும், இன-மத அடிப்படையில் பதவிகளைப் பிரிப்பது பிளவுகளை உருவாக்கும் என்பதே உண்மை.



தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் போதியளவில் இல்லை என்ற விமர்சனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.


இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது, கொள்கைசார் அரசியல் என்ற நிலையிலிருந்து மாறி, சந்தர்ப்பவாத மற்றும் அமைச்சுப் பதவிசார் அரசியலாக சுருங்கிய இடத்திலேயே பிழைத்துப்போனது என்ற பொதுவான கருத்து அரசியல் அவதானிகளிடம் இருக்கின்றது.


மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, இலங்கை முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட பாரிய தலைமைத்துவ வெற்றிடமும், அதற்குப் பின்னர் வந்த தலைமைகளின் சுயநலப் போக்குகளுமே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களில் ஒன்று என்பது அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயமாகவும் உள்ளது.



முன்னர் முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் உரிமைகளைப் பெற பேரம்பேசும் சக்தியாக உருவெடுத்தன. ஆனால் காலப்போக்கில், அது வெறும் அமைச்சுப் பதவிகள், சலுகைகள் மற்றும் தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்கான பேரம் பேசலாக மாறியது. அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் தங்களின் சுயலாபத்திற்காக ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ளும் போக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது.


முஸ்லிம் அரசியல் தலைமைகள் பிராந்திய வாதத்திலும், மத அடையாள அரசியலிலும் அதிக கவனம் செலுத்தியதால், அவர்கள் பேரினவாத சக்திகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகினர். 

ஏனைய சிறுபான்மை சமூகங்களான தமிழ் மக்களுடனோ அல்லது பெரும்பான்மை சிங்கள முற்போக்கு சக்திகளுடனோ இணைந்து பயணிக்கத் தவறியமை முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது என்ற பார்வை அரசியலை உண்ணிப்பாக அவதானிப்பவர்களிடம் உள்ளது.


இக்கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் படியாக, 2014 அளுத்கம வன்முறை, 2018 திகன கலவரம், மற்றும் குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் போன்ற நெருக்கடி காலங்களில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு முறையான பாதுகாப்பையோ அல்லது தற்காப்பையோ வழங்க முடியவில்லை. 


கொவிட்-19 பேரிடர் காலத்தில் கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற உணர்வு பூர்வமான விவகாரங்களில் கூட முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பலவீனமான நிலைப்பாடு அம்பலமானது.


மேலும், முஸ்லிம் தலைவர்கள் தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்டு, உணர்ச்சிப்பூர்வமான கோஷங்களை எழுப்பி வாக்குகளைப் பெற்றனரே தவிர, சமூகத்தின் நீண்ட காலப் பிரச்சினைகளான காணி விவகாரம், வேலைவாய்ப்பு, கலாசாரப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு முறையான வியூகங்களை வகுக்கவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால அரசியல் வரலாறு தேசிய அளவில் பெறும்மதிப்பை பெற்றிருந்தது அகில இலங்கை முஸ்லிம் லீக், இஸ்லாமிய ஐக்கிய முன்னணி போன்ற இயக்கங்களின் தலைவர்கள் ஏனைய இனங்களுடன் இன நல்லுரவை பேணிசெயபட்டனர். 


முஸ்லிம் சமூகத்தின் சமூகத்தின் இருப்பு, உரிமைகள், கல்வி மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வலுவான பேசும் சக்தியாக (Bargaining Power) அவர்கள் தமது அரசியலை முன்னெடுத்தனர்.


பிற்காலத்தில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தலைமையில் உருவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதே
நோக்கத்தை முதன்மைப்படுத்தியதாக இருந்தாலும், அவருடைய மறைவுக்கு பின்னர் சமூக நலன்களை விட நாடாளுமன்றப் பதவிகள், அமைச்சுப் பொறுப்புகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் சில தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டதுடன், பதவிகள் அவர்களின் முக்கிய இலக்காகவும் மாறியது.


கொள்கை ரீதியான உடன்பாடுகளின்றி, ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசாங்கத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தது. 


இது சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தியது. இங்கேதான், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் என்பது "சமூக நலனுக்கான பேரம் பேசும் சக்தி" என்ற நிலையிலிருந்து மாறி, "தலைவர்களின் சுய பாதுகாப்புக்கான அரண்" என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், அது முற்றாகப் தடம்மாறிப் போனது என்பது முஸ்லிம் புத்திஜீவிகளின் பார்வையாக உள்ளது.

கடந்த கால அரசியல் ஏமாற்றங்களால், குறிப்பாக 2024 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், முஸ்லிம் சமூகம் (குறிப்பாக இளைஞர்கள்) பாரம்பரிய முஸ்லிம் கட்சிகளை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். 


ஒற்றை மத அடையாள அரசியல் தமக்கு உதவாது என்பதை உணர்ந்து, தேசிய அரசியல் மாற்றங்களிலும் மாற்று அரசியல் கொள்கைகளிலும் தங்களை இணைத்துக் கொள்ளும் புதியதொரு அரசியல் போக்கை நோக்கிய சமூகமாக நகரத் தொடங்கியுள்ளார்கள்.

பாரம்பரிய முஸ்லிம் கட்சிகள் மற்றும் "முகநூல்/அரசியல் வியாபாரிகளாக" மாறும் தலைவர்கள் மீது விரக்தியடைந்த மக்கள், தற்காலத்தில்  புதிய எழுச்சியுடன் தூய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி  நகரும் தேசிய மக்கள் சக்தியுடன் தேசிய அரசியலில் இணைந்து பயனிக்கின்றமையானது, முஸ்லிம் கட்சிகளின் தனித்துவ அரசியல் தளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், இலங்கையிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை நாட்டின் சமத்துவமுள்ள, பிரிக்க முடியாத ஒரு அங்கமாகப் பார்க்கிறது. 


இன, மத அடிப்படையிலான பிரிவினைகளுக்குப் பதிலாக, அனைத்து மக்களையும் "இலங்கையர்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே தங்களது முதன்மைக் கொள்கை என அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத் தேவைகளுக்காகவே இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்தினர் என்ற  கடுமையாக விமர்ச னங்களுக்கு மத்தியில், நாட்டில் இனி எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சொத்து,செல்வம், அதிகாரம், மதம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபட்டு நிலை நாட்டப்பட்ட காலம் மாறி, நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதை NPP அரசாங்கம் உறுதி செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாயமாக எரிக்கப்பட்ட பொழுது வாய் மூடி மெளனிகளாக இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் அதற்கு எதிராகவும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) சீர்திருத்தத் தாமதங்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்திருந்தார்.

அத்தோடு அண்மைய நீர் கொழும்பு மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்திகளில் கூட, ஜனாதிபதி முஹம்மது நபியின் தியாகங்கள் மற்றும் போதனைகளை நினைவு கூர்ந்து, சமூகத்தில் வெறுப்புணர்வை நீக்கி, பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஒன்றிணைந்து வாழ முஸ்லிம் மக்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இருந்தும், தேசிய மக்கள் சக்தி சமத்துவக் கொள்கையைப் பேசினாலும், நடைமுறையில் தற்போதைய அமைச்சரவையில் அல்லது முக்கிய அரச உயர் மட்டப் பதவிகளில் முஸ்லிம்களுக்கான நேரடிப் பிரதிநிதித்துவம் போதியளவில் இல்லை என்ற விமர்சனம் நிலவி வருகின்றது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களும், எதிர்க்கட்சியினருமே இவ்விவகாரத்தை ஒருபிரதான பிரச்சனையாக முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் (National Delimitation Commission) முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எவரும் உள்வாங்கப்படவில்லை என்பதும் இவர்களின் NPP அரசுக்கு எதிரான வாதமாகவும் மாறியுள்ளது.

ஆனால், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படுகின்றன என்றும், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் பதவிகளைப் பிரித்துக் கொடுப்பது தேவையற்ற பிளவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என்றும், நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் NPP அரசாங்கம் இதற்கான பூரண விளக்கத்தை அளித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முஸ்லிம் சமூகத்தை எவ்விதப் பாகுபாடுமின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டிய பிரஜைகளாகவே பார்க்கிறது. 


எனினும், கடந்த காலங்களில் முஸ்லிம் தனிக்கட்சிகள் முன்னெடுத்த "மத அடையாள அரசியல் அல்லது பிராந்திய அரசியல்" முறைமையை நிராகரித்து, பொதுவான தேசிய அரசியல் நீரோட்டத்தினூடாகவே முஸ்லிம்களின் மொழி, கலாச்சார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அரசின் கொள்கை நடைமுறை உண்மையானது என்பது நிரூபிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அஹமட் இர்ஷாட்.
03-04-2026.

වාර්ගික-ආගමික අනන්‍යතාවයෙන් ඔබ්බට: NPP රජයේ සමානාත්මතාවය සහ මුස්ලිම්වරුන්ගේ අනාගතය පිළිබඳ ප්‍රතිපත්තිය.

ශ්‍රී ලංකාව ද මුස්ලිම්වරුන්ගේ දේශපාලනය අවුල් වූ ස්ථානයකි, කුසලතා පදනම් කරගත් ජාතික ප්‍රවාහයට ඇතුළත් වීමේ ක්‍රමය.

මුස්ලිම් පුද්ගලවාදී පක්‍ෂ විසින් ඉදිරිපත් කරන අනන්‍යතා දේශපාලනය අතහැර පොදු ජාතික දේශපාලන ධාරාවක් තුළින් මුස්ලිම් අයිතීන් සහ සංස්කෘතික ආරක්‍ෂාව විසඳාගත හැකිය යන යථාර්ථය වෙත මුස්ලිම් ප්‍රජාව වේගයෙන් ගමන් කරමින් සිටිති.

කුසලතා පදනම මත පත්වීම් සිදුකරන අතර කුල ආගම් වශයෙන් තනතුරු වෙන් කිරීම බෙදීම් ඇති කරන බව සැබෑය.

වත්මන් කැබිනට් මණ්ඩලය තුළ ප්‍රමාණවත් තරම් මුස්ලිම් නියෝජනයක් නොමැති බවට ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කරන ලද සම්ප්‍රදායික දේශපාලන නායකයින් විවේචන එල්ල කරමින් සිටියි.
+++++++++++++++++

ශ්‍රී ලාංකේය මුස්ලිම්වරුන්ගේ දේශපාලනය ප්‍රතිපත්තිමය දේශපාලනයේ සිට අවස්ථාවාදී සහ ඇමති දේශපාලනයක් දක්වා වෙනස් වී ඇති බවට දේශපාලන නිරීක්ෂකයින් අතර පොදු මතයක් පවතී.

එම්.එච්.එම්. අෂ්රෆ්ගේ මරණයෙන් පසු ශ්‍රී ලාංකේය මුස්ලිම් දේශපාලනයේ ඇති වූ දැවැන්ත නායකත්ව රික්තකය සහ ඉන් පසුව පැමිණි නායකයන්ගේ ආත්මාර්ථකාමී ප්‍රවණතා මෙම කඩා වැටීමට මූලික හේතුවක් ලෙස දේශපාලන විශ්ලේෂකයින් පෙන්වා දී ඇත.

මීට පෙර මුස්ලිම් පක්‍ෂ ප්‍රජාවගේ අයිතීන් සුරක්ෂිත කිරීම සඳහා කේවල් කිරීමේ බලයක් ලෙස මතුවිය. නමුත් කාලයාගේ ඇවෑමෙන් එය ඇමතිකම්, වරප්‍රසාද සහ පුද්ගලික වාසි සඳහා හුදු කේවල් කිරීමක් බවට පත් විය. ආණ්ඩු වෙනස් වන සෑම අවස්ථාවකම තම වාසිය තකා ආණ්ඩු පක්ෂය සමඟ පෙළ ගැසෙන ප්‍රවණතාව මුස්ලිම් ප්‍රජාව තුළ දැඩි අප්‍රසාදයක් ඇති කර තිබේ.

මුස්ලිම් දේශපාලන නායකයන් ප්‍රාදේශීයවාදය සහ ආගමික අනන්‍යතා දේශපාලනය කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කිරීම නිසා ස්වෝත්තමවාදී බලවේගවල විවේචනයට ලක් විය. දෙමළ වැනි අනෙකුත් සුළුතර ප්‍රජාවන් සමඟ හෝ බහුතර සිංහල ප්‍රගතිශීලී බලවේග සමඟ ගමන් කිරීමට අපොහොසත් වීම මුස්ලිම් ජනතාව දේශපාලනිකව හුදකලා කිරීමට හේතු වූ බව දේශපාලන විචාරකයන්ගේ අදහසයි.

මේ කාරණය තව තවත් තහවුරු කරමින් 2014 අලුත්ගම් ප්‍රචණ්ඩත්වය, 2018 දිගන කෝලාහල, විශේෂයෙන්ම 2019 පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාර වැනි අර්බුදකාරී කාලවලදී, ප්‍රජාවට නිසි ආරක්ෂාවක් හෝ ආරක්ෂාවක් සැපයීමට මුස්ලිම් දේශපාලනඥයන්ට නොහැකි විය. කොවිඩ්-19 ව්‍යසනයේදී බලහත්කාරයෙන් ජනාසා ගිනි තැබීම වැනි සංවේදී කාරණාවලදී පවා මුස්ලිම් දේශපාලන නායකත්වයේ දුර්වල තත්ත්වය හෙළිදරව් වී ඇත.

එපමණක් නොව මුස්ලිම් නායකයින් ඡන්ද ඉලක්ක කර හැගීම්බර සටන් පාඨ නඟා ඡන්ද ලබා ගත්තා මිස ඉඩම් ප්‍රශ්න, රැකියා, සංස්කෘතික සංරක්ෂණය ආදී ප්‍රජාවගේ දිගුකාලීන ගැටලු සඳහා නිසි උපාය මාර්ග සකස් කළේ නැත.

සමස්ත ශ්‍රී ලංකා මුස්ලිම් ලීගය සහ ඉස්ලාමීය එක්සත් පෙරමුණ වැනි ව්‍යාපාරවල නායකයින් අනෙකුත් ජනවාර්ගික කණ්ඩායම් සමඟ වාර්ගික සහජීවනය පවත්වාගෙන යාම හේතුවෙන් ශ්‍රී ලාංකීය මුස්ලිම්වරුන්ගේ මුල් දේශපාලන ඉතිහාසය ජාතික පිළිගැනීමට ලක් විය. මුස්ලිම් ප්‍රජාවගේ සමාජ පැවැත්ම, අයිතිවාසිකම්, අධ්‍යාපනය සහ ආර්ථික අවශ්‍යතා ආරක්ෂා කර ගැනීම සඳහා කේවල් කිරීමේ බලයක් ලෙස ඔවුහු තම දේශපාලනය ඉදිරියට ගෙන ගියහ.

පසුව එම්.එච්.එම්. අෂ්රෆ්ගේ නායකත්වයෙන් ගොඩනැගුණු ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයත් එහෙමයි
පරමාර්ථය ප්‍රමුඛ වුවද, ඔහුගේ මරණයෙන් පසු සමාජ ප්‍රතිලාභවලට වඩා පාර්ලිමේන්තු තනතුරු, ඇමැතිකම් සහ වරප්‍රසාද ලබා ගැනීමේදී ඇතැම් නායකයන් ගැටුණු අතර තනතුරු ඔවුන්ගේ ප්‍රධාන ඉලක්කය බවට පත්විය.

ප්‍රතිපත්තිමය එකඟතාවයකින් තොරව බලයේ සිටින ඕනෑම රජයක් සමඟ සන්ධානගත වීමේ ප්‍රවණතාව වැඩි විය. මෙය සමාජයේ කේවල් කිරීමේ හැකියාව දුර්වල කළේය. මුස්ලිම් බුද්ධිමතුන්ගේ අදහසට අනුව ශ්‍රී ලාංකේය මුස්ලිම් දේශපාලනය "සමාජ සුබසාධනය සඳහා කේවල් කිරීමේ බලයේ" සිට "නායකයින්ගේ ආත්මාරක්ෂාව ආරක්ෂා කිරීමේ පවුරක්" දක්වා මාරු වී සම්පූර්ණයෙන්ම පීලිපැනීමට ලක්ව ඇත්තේ මෙතැනදීය.

පසුගිය දේශපාලන කලකිරීම් නිසා විශේෂයෙන්ම 2024 සහ ඉන් ඔබ්බට මුස්ලිම් ප්‍රජාව (විශේෂයෙන් තරුණයන්) සාම්ප්‍රදායික මුස්ලිම් පක්ෂ ප්‍රතික්ෂේප කිරීමට පටන් ගෙන ඇත. ඒක ආගමික අනන්‍යතා දේශපාලනය තමන්ට අත්වැලක් නොවන බව වටහාගත් ඔවුන් ජාතික දේශපාලන වෙනස්කම් හා විකල්ප දේශපාලන මූලධර්මවලට සම්බන්ධ වන නව දේශපාලන ප්‍රවණතාවක් කරා සමාජයක් ලෙස ගමන් කිරීමට පටන් ගෙන තිබේ.

“ෆේස්බුක්/දේශපාලන වෙළෙන්දෝ” බවට පත්වන සාම්ප්‍රදායික මුස්ලිම් පක්‍ෂ හා නායකයින් ගැන කලකිරී, ජාතික දේශපාලනය හා මුසු වූ ජාතික ජන බලයේ නූතන පුනර්ජීවනය පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් කරා ගමන් කිරීම මුස්ලිම් පක්ෂවල සුවිශේෂී දේශපාලන වේදිකාව හෙළිදරව් කර ඇත.

එනිසා, ජනාධිපති අනුරකුමාර් දිසානායක සහ ඔහුගේ ජාතික ජන බලය (NPP) ආණ්ඩුව ශ්‍රී ලංකාවේ මුස්ලිම් සුළුතර ප්‍රජාව දකින්නේ රටේ සමාන හා නොබෙදිය හැකි කොටසක් ලෙසය. වාර්ගික සහ ආගම් භේද වෙනුවට "ශ්‍රී ලාංකික" යන තනි අනන්‍යතාවය යටතේ සියලු ජනතාව ඒකරාශී කිරීමේ මූලික ප්‍රතිපත්තිය ඔවුන් ප්‍රකාශ කර ඇත.

දේශපාලකයින් පසුගිය කාලයේ කුලවාදය සහ කල්ලිවාදය තම බල අවශ්‍යතා සඳහා යොදාගත් බවට දැඩි විවේචන මධ්‍යයේ ඔහු පොරොන්දු වී ඇත්තේ මින් ඉදිරියට රට තුළ කිසිදු කුල හෝ ආගම් ගැටුමකට ඉඩක් නොතබන බවයි.

දේපළ, ධනය, බලය, ආගම හෝ සංස්කෘතිය පදනම් කර ගනිමින් විවිධ නීති පැනවූ යුගය අවසන් වී ඇති බවත්, නීතිය ඉදිරියේ රටේ සියලු පුරවැසියන්ට එක හා සමානව සැලකීමට NPP රජය සහතික වන බව ජනාධිපති අනුරකුමාර දිසානායක මහතා පැවසීය.

එසේම කොවිඩ් 19 ව්‍යසනයේදී මුස්ලිම් ජනාසා අනිවාර්යයෙන් පුළුස්සා දමන විට නිහඬව සිටි මුස්ලිම් දේශපාලන නායකයන්ට එරෙහිව සහ මුස්ලිම් විවාහ හා දික්කසාද පනත (MMDA) ප්‍රතිසංස්කරණය කිරීම ප්‍රමාද කිරීමට එරෙහිව මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් පාර්ලිමේන්තුවේදී සහ මුස්ලිම් ප්‍රජාවෙන් පිටත මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් ජනාධිපති අනුරකුමාර් දිසානායක හඬ නැගුවා.

එමෙන්ම පසුගියදා පැවති නේ කලම්බු මිලාදුන් නබි දින සුබපැතුම්වලදී මුහම්මද් නබිතුමාගේ පරිත්‍යාගයන් සහ ඉගැන්වීම් සිහිපත් කර සමාජය තුළ වෛරය තුරන් කර විවිධත්වය හඳුනාගෙන එකට ජීවත් වන ලෙස ජනාධිපතිවරයා ප්‍රසිද්ධියේ මුස්ලිම් ජනතාවගෙන් ඉල්ලා සිටියේය.

කෙසේ වෙතත් සමානාත්මතාවය පිළිබඳ ජාතික ජනබල ප්‍රතිපත්තිය තිබියදීත්, ප්‍රායෝගිකව වත්මන් කැබිනට් මණ්ඩලයේ හෝ රජයේ ප්‍රධාන ඉහළ පෙළේ තනතුරුවල මුස්ලිම් ජනතාව සඳහා ප්‍රමාණවත් සෘජු නියෝජනයක් නොමැති බවට විවේචන පවතී. ජනතාව විසින් ප්‍රතික්ෂේප කරන ලද මුස්ලිම් දේශපාලන නායකයන් සහ විරුද්ධ පක්ෂ මෙම ප්‍රශ්නය ප්‍රධාන ගැටලුවක් ලෙස ඉදිරිපත් කරනවා.

පසුගියදා පත්කළ ජාතික සීමා නිර්ණය කොමිසමට මුස්ලිම් ප්‍රජාව නියෝජනය කරන කිසිඳු සාමාජිකයෙකු ඇතුළත් නොවීම ඔවුන්ගේ NPP ආණ්ඩුවට එරෙහි තර්කයක් බවට පත්ව තිබේ.

නමුත් රට නිදහස ලැබූ දා සිට උගත් පාඩම් පදනම් කරගෙන NPP ආණ්ඩුව මේ සඳහා පුළුල් පැහැදිලි කිරීමක් කර ඇති අතර, පත්වීම් ලබා දෙන්නේ කුසලතාව සහ හැකියාව මත බවත්, ආගම හෝ කුලය මත තනතුරු ලබාදීමෙන් නැවත අනවශ්‍ය බෙදීම් ඇති වන බවත් පවසමින්.

ජනාධිපති අනුරකුමාර් දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය මුස්ලිම් ප්‍රජාව දකින්නේ කිසිදු භේදයකින් තොරව සමාන සැලකිලි ලැබිය යුතු පුරවැසියන් ලෙසය. කෙසේ වෙතත් පසුගිය කාලයේ වෙන වෙනම මුස්ලිම් පක්ෂ ගෙන ගිය "ආගමික අනන්‍යතා දේශපාලනය හෝ ප්‍රාදේශීය දේශපාලනය" ප්‍රතික්ෂේප කරමින් මුස්ලිම් ජනතාවගේ භාෂාමය, සංස්කෘතික හා පරිපාලන ගැටලු විසඳීමේ රජයේ ප්‍රතිපත්තිය පොදු ජාතික දේශපාලන ධාරාවකින් විසඳිය හැකි බව ඔප්පු කිරීමට කාලය වැඩි ඈතක නොවේ.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
03-04-2026.
සිංහල පරිවර්තනය සමග) இன-மத அடையாளங்களுக்கு அப்பால்: NPP அரசின் சமத்துவ கொள்கையும்,முஸ்லிம்களின் எதிர்காலமும் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.