Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்..

"கடந்த காலத்தைக் கௌரவித்து, நிகழ்காலத்தைப் பலப்படுத்தி, எதிர்காலத்தை வரைபடமாக்குவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (23) முற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.


நாட்டின் அரச பொறிமுறையின் பழமையான திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமும், நூற்றாண்டைப் பூர்த்தி செய்யும் அரச நில அளவையாளர் சங்கமும் அந்தப் பெருமைமிக்க பயணத்தில் தொழில்சார் கண்ணியம் மற்றும் சேவைத் தரங்களைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கி வந்துள்ள விசேட பங்களிப்பை ஜனாதிபதி இதன் போது பாராட்டினார்.


நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய நில அளவை சேவைக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் அறிவோடு முன்னோக்கிச் சென்று, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் பயணத்திற்கு பலமான பங்களிப்பை வழங்குமாறும் அழைப்பு விடுத்தார்.

அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்.. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.