மட்டக்களப்பு பொது நூலகத்தில் மாபெரும் புத்தகத்திருவிழா: ஒக்டோபர் 28 முதல் ஆரம்பம்!
(எம்.ஐ.அப்துல் நஸார்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகம் நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வெளிக்கொணரும் வகையிலும் இந்த மாபெரும் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சி மட்டக்களப்பு பொது நூலக வளாகத்தில் எதிர்வரும் 28.10.2026 தொடக்கம் 01.11.2026 வரை தினமும் காலை 09:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந் நிகழ்ச்சியில் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையின் சிறப்பு விற்பனை முகவர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்பிலான அரிய நூல்களை விற்பனைக்கு வைக்கவுள்ளனர். அத்துடன் வாசகர்கள் தங்களது புத்தகங்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் நூல் பரிமாற்ற வசதி, வரலாற்று சிறப்புமிக்க புதிய அருங்காட்சியகப் பொருட்களைச் சேகரிக்கும் சிறப்பு முயற்சி, பார்வையாளர்களைக் கவரும் கலை நிகழ்வுகள் மற்றும் சுவையான உணவுக் கடைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன.
'நூல்கள் வாழ்வை வளமாக்கும்' என்ற உயரிய நோக்கத்துடன் நடத்தப்படும் இம்மாபெரும் கலை மற்றும் புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
மட்டக்களப்பு பொது நூலகத்தில் மாபெரும் புத்தகத்திருவிழா: ஒக்டோபர் 28 முதல் ஆரம்பம்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 24, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: