Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

14 ஆண்டு கால உன்னிச்சை மக்களின் சுத்தமான குடிநீர் காத்திருப்பிற்கு தேசிய மக்கள் சக்தி ஊடாக விடிவு ஆரம்பம் என்கிறார் கந்தசாமி பிரபு MP


​
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  உன்னிச்சை பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

​ உன்னிச்சை குளத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்ற போதும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் கடந்தும், உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த சொந்த மக்களுக்கே தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  சபையின் ஊடாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குறை நிலவி வந்த நிலையில்  ​தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடாக விடிவு கிட்ட தொடங்கியுள்ளதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார் .
மேலும்  இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சபையிடம் 833 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டம் கட்டமாக பணிகளை  செயற்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .

உன்னிச்சை குடிநீர் திட்டத்திற்காக  முதற்கட்டமாக 1,000 பேருக்குத் தேவையான குடிநீர் விநியோகம்  வழங்கப்படவுள்ளதுடன் 
அதற்காக 500 கன அடி  கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர் தொட்டி (Ground Sump), பம்ப் அறை, ஜெனரேட்டர் அறை, இரசாயன அறை, பராமரிப்பாளர் இல்லம் மற்றும் மின்மாற்றி அறை (Transformer Cubical) அமைத்தல் என்பவைகளுக்காக 137 மில்லியன் நிதியும்,  உன்னிச்சையில் 1000m³ கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க 35 மில்லியன் நிதியும் முதற்கட்டமாக செலவிடப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் மேலும்  தெரிவித்தார்.

மாவட்டம் எங்கும் நீரைச் வாரிக்கொடுத்த உன்னிச்சை மக்களின் கனவு 14 வருடங்களின் பின் நனவாகுவது 
மக்கள் சக்தி மக்களுக்கானது என்பதன் வெளிப்பாடு ஆகும் .


14 ஆண்டு கால உன்னிச்சை மக்களின் சுத்தமான குடிநீர் காத்திருப்பிற்கு தேசிய மக்கள் சக்தி ஊடாக விடிவு ஆரம்பம் என்கிறார் கந்தசாமி பிரபு MP Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.