இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளும் எமக்கு பெறுமதியானவர்கள். அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் எமது பிள்ளைகளுக்காகவே.

ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளிலும் டிஜிட்டல் இணைப்புகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பும் (ITN) இணைந்து ஏற்பாடு செய்த, “மகத்தான செல்வம் – பிள்ளைகளைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற 2026 உலக சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (03) எஸ். டி. எஸ். ஜயசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலக சிறுவர் தினம் என்பது ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், பிள்ளைகளின் உலகைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை இத்தினம் எமக்கு நினைவூட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளும் எமக்கு பெறுமதியானவர்கள். அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் எமது பிள்ளைகளுக்காகவே.
பிள்ளைப் பருவத்திலிருந்தே சமூகத்தில் எத்தகைய வயது வந்தவராக அல்லது குடிமகனாக ஒருவர் உருவாகிறார் என்பதில் கல்விg முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். 2027 ஆம் ஆண்டில் இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கானG புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதேபோன்று, பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளையும் டிஜிட்டல் வசதிகளையும் திட்டமிட்ட அடிப்படையில் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளிலும் டிஜிட்டல் இணைப்புகளையும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மேலும், போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து பிள்ளைகளின் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக, பாடசாலைப் போக்குவரத்து வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அளவுகோல்கள், சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
ஒரு நாடு என்ற வகையில் சுகாதாரம் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பும் சுகாதாரமும் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான துறைகளாகும். பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்துகின்றோம். விளையாட்டும் அதேபோன்று முக்கியமானதாகும். பாடசாலைகளுக்குள் விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பிள்ளைகள் சுதந்திரமாக விளையாடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்குவது எமது பொறுப்பாகும்.
இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, தெஹி
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 04, 2026
Rating:
கருத்துகள் இல்லை: