15 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 6000 வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

2027ஆம் கல்வி ஆண்டிற்காக 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலை எழுதுபொருட்கள் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கான குறித்த திட்டத்தின் கீழ் பாடசாலையில் கல்வி பயிலும் அஸ்வசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக 6,000 ரூபா பாடசாலை எழுதுபொருள் கொடுப்பனவை வைப்பு செய்யப்படவுள்ளது.
அதேபோல கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் அடையாளம் காணப்பட்ட 5 லட்சம் மாணவர்களுக்கு 6,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களை இத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். அதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 13, 2026
Rating:
கருத்துகள் இல்லை: