Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்: மஜ்லிஸுல் பலாஹிய்யீன் அமைப்பு ஏற்பாடு


(எம்.ஐ.அப்துல் நஸாா்)

காத்தான்குடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான "மஜ்லிஸுல் பலாஹிய்யீன்", சமூக நலன் கருதி மாபெரும் இரத்ததான முகா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.   

இவ்விரத்ததான முகாம், மத்ரஸாவின் நிறுவனரும் சிரேஷ்ட உலமாவுமான உஸ்தாதுனா ஷைஹுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நினைவாகவும், அவர்களின் சமூக சேவையைப் போற்றும் வகையிலும் நடாத்தப்படுகின்றது.   

இந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.   


அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த இரத்ததான முகாம், பிற்பகல் வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இம் முகாம் காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.   

"ஒரு துளி இரத்தம்... ஒரு உயிரைக் காப்பாற்றும்!" என்ற உயரிய வாசகத்தை முதன்மைத் தொனிப் பொருளாகக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் வைத்தியசாலைகளிலும் இரத்தத் தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கில் இச்சேவை முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், "எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல்குர்ஆன் 5:32) எனும் பரிசுத்த அல்குர்ஆனின் வழிகாட்டலுக்கு அமைவாக மனிதநேய சேவை நோக்குடன் இச் செயற்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.   

அத்துடன், இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கும் கொடையாளர்களுக்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளும், மருத்துவ வழிகாட்டல்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.   

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்த முகாம் பெரும் பக்கபலமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.   

எனவே, பொதுமக்கள், பழைய மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் அனைவரும் இப்புனிதமிக்க நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி உயிர்களைக் காக்குமாறு மஜ்லிஸுல் பலாஹிய்யீன் பழைய மாணவர் அமைப்பு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஊடகம் 
மஜ்லிஸுல் பலாஹிய்யீன் காத்தான்குடி
காத்தான்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்: மஜ்லிஸுல் பலாஹிய்யீன் அமைப்பு ஏற்பாடு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.