காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் புரட்சி! பாடசாலைகளில் 67 வகையான கழகங்கள்/சங்கங்கள் உருவாக்கம்!
காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் புரட்சி!
பாடசாலைகளில் 67 வகையான கழகங்கள்/சங்கங்கள் உருவாக்கம்!
2027ஆம் கல்வியாண்டு "இளம் விஞ்ஞானக் கண்டு பிடிப்பாளர்களின் ஆண்டு" ஆகப் பிரகடனம்!
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய MM.ஜவாத் (SLEAS) அவர்களின் ஆலோசனைக்கும் வழி காட்டலுக்கமைவாக காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் லெப்டினன் NM.முஹம்மட் சாலிஹ் (SLEAS) அவர்களின் உருவாக்கத்தில்
மாணவர்களின் ஆளுமை, செயற்திறன் மற்றும் ஆக்கபூர்வ சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கில், காத்தான்குடி கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளிலும் பாடவிதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட சுமார் 67 வகையான கழகங்கள் மற்றும் சங்கங்கள் புதிதாக உருவாக்கப்படவுள்ளன.
அத்துடன், வருகின்ற 2027ஆம் கல்வியாண்டை "இளம் விஞ்ஞானக் கண்டு பிடிப்பாளர்களின் ஆண்டு" ஆகக் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக அதிபர்களுக்கான விசேட தெளிவூட்டல் மற்றும் பணிப்புரை 23.10.2026 அன்று நடைபெற்ற கோட்டப் பாடசாலை அதிபர்கள் கூட்டத்தின் போது கோட்டக் கல்விப் பணிப்பாளரினால் விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சிறுவர் மெய்வல்லுனர் இணைப்பாளர் SLHM.இனாமுல்லாஹ், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ABM.றசீம் ஆகியோரும் பங்கேற்றனர்.
அத்துடன், இத்திட்டங்களை அனைத்துப் பாடசாலைகளிலும் உடனடியாக நடைமுறைப் படுத்துமாறு அதிபர்களுக்குக் கோட்டக் கல்விப் பணிப்பாளரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
2027இல் விசேட மேற்பார்வை நடவடிக்கை இப்புதிய திட்டங்களின் திறம்பட்ட செயற்பாட்டினை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்வரும் 2027ஆம் கல்வியாண்டில் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலைகள் தோறும் விசேட கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"எமது மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், அவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதற்கும் இத்திட்டம் சிறந்ததொரு வழிகாட்டியாக அமையும்!"என்பதில் ஐயமில்லை.
காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் புரட்சி! பாடசாலைகளில் 67 வகையான கழகங்கள்/சங்கங்கள் உருவாக்கம்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 24, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 24, 2026
Rating:








கருத்துகள் இல்லை: