සිංහල පරිවර්තනය සමග) அடையாள அரசியலா, தேசிய ஒருமைப்பாடா.? சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயகப் பயணத்தில் புதிய பரிணாமம்
முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்துச் சிறுபான்மை சமூகங்களினதும் பாதுகாப்பு என்பது தனி நபர்களின் வாக்குறுதிகளில் தங்கியிருக்க கூடாது; மாறாக அது நீதிமன்றங்களின் சுயாதீனம்,சட்டத்தின் சட்டங்கள்,வலுவான அரச நிறுவனங்கள், சமத்துவம், பொறுப்புக்கூறல்,மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பான அரசியல் அமைப்பின் வழிகாட்டலினூடாகவே முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே வரலாற்று ரீதியாக சில அரசியல் மற்றும் சமூகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளன. எனினும், அத்தகைய உணர்வு பூர்வமான கடந்த கால பிரச்சனைகளைத் தேர்தல் காலங்களில் மீண்டும் முன்னிலைப்படுத்துவது தீர்வுக்கு வழிவக்குக்காது.
முஸ்லிம் புத்திஜீவிகளும் இளைஞர்களும் அச்ச அரசியலை விடுத்து, சமூகத்தின் உண்மையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க முன்வர வேண்டும்.
"எங்களைப் பாதுகாக்க எங்கள் கட்சியே வேண்டும்” என்ற குறுகிய அச்ச உணர்வு சார்ந்த பாதுகாப்பு கோரிக்கைகளிலிருந்தும்,
இனவாத சிந்தனைகள் கடந்த காலங்களில் (குறிப்பாக பிந்திய 80களில்) அதாவது,
தகவல் தொழில்நுட்பங்களும் தொடர்பு சாதணங்களும் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் தனித்துவ அரசியல் குறித்த சிந்தனைகள் உணர்வு பூர்வமான தளத்தில் முதன்மை பெற்றன.
பிராந்திய ரீதியிலான மற்றும் தனித்துவ அடையாளங்கள் சமூகத்தின் உடனடி தேவையாக பார்க்கப்பட்டாலூம், அவை நீண்ட கால நோக்கில் தேசிய அரசியலில் முக்கிய நீரோட்டத்திலிருந்து சமூகத்தை ஓரளவு இடைவெளி கொள்ளச் செய்தன என்ற கருத்துநிலையும் உள்ளது. சமூகத்தின் இயல்பான அச்ச உணர்வுகளும் பாதுகாப்பு கவலைகளும் அரசியல் நகர்வுகளுக்கான முக்கிய காரணிகளாக இருந்த நிலையில், மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில் மக்கள் புதிய அரசியல் அணுகுமிறைகளையும், தேசிய அளவிலான ஒருங்கிணைப்பையும் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கையும் குறிக்கோளும் மிகத் தெளிவான கட்டமைப்பை கொண்டவை. முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களினதும் உரிமைகளும், தனிநபர் சார்ந்த அணுகுமுறைகளுக்கு அப்பால், நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் சட்டக் கட்டமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். சட்டத்தின் ஆட்சியின் மூலம் மட்டுமே அனைத்துக் குடிமக்களினதும் உரிமைகளும் மற்றும் சமமான நிலையான பாதுகாப்பை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை கட்டியெழுப்புவதே இந்த அரசியல் அணுகுமுறையின் நோக்கமாகும்.
2024ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, பரந்த அளவிலான தேசிய அரசியலை நோக்கி மக்கள் நகரத் தொடங்கினர். இருப்பினும் அதில் தப்பிப் பிழைத்துக் கொண்ட பாரம்பரிய அரசியல் அணுகுமுறைகளைக் கொண்ட சில தரப்பினர் இன்னமும் பழைய உணர்வுபூர்வமான கருத்து நிலைமைகளையே முன்வைக்க முயற்சித்து வருகின்றனர். சமூக கவலைகளையும், அடையாள அரசியலையும் மையப்படுத்தி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டாலும், இன்றைய கால கட்டத்தில் மக்கள் முற்போக்கான மற்றும் கொள்கை சார்ந்த அரசியலையே அதிகம் விரும்புகின்றனர்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான சமூக உணர்வுகளையும், கவலைகளையும் மையப்படுத்தி பாரம்பரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நகர்வுகள் சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இன்றைய இளைய தலைமுறையினர் இத்தகைய உணர்வு பூர்வமான அணுகு முறைகளைத் தாண்டி, தெளிவான சிந்தனையுடனும், முற்போக்காகவும் செயற்படுகின்றனர்.
உணர்வுகளை சூடேற்றி, அதனைத் தங்களின் எதிர்கால அரசியல் இருப்புக்காகப் பற்றவைப்பதே இவர்களின் திரைக்குப் பின்னால் உள்ள திட்டமாக இருந்தாலும், தொழில்நுட்பமும் ஊடகத்துறையும் உச்சத்தில் இருக்கும் இக்காலத்தில் இன்றைய நவீன இளைய சமூகத்திற்குள், இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளால் இனியும் குழப்பங்களை ஏற்படுத்த முடியாது என்பதை சிந்திக்கத் தவறியவர்களாகவே இவர்களைப்போன்ற சிலர் செயற்படுகின்றனர்.
எப்பொழுது தாம் மாட்டிக்கொள்ளலாம் என்ற அச்சத்தின் பின்னணியில் காலத்தை கடத்திக்கொண்டிருக்கும் கடந்த கால ஊழல்வாதிகளுக்கு மத்தியில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின்ஆட்சியும் சமத்துவமும் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. இனவாதமற்ற அமைதியான ஆட்சிச் சூழலில் சட்டம் மற்றும் நீதித்துறைகள் சுயாதீனமாக செயற்படுவதன் மூலம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டின்நீதித்துறை மீதான நம்பிக்கையும் நன்மதிப்பும் கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இந்தப் பின்னணியில், நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விரிவான நீதித்துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது முக்கியத்துவம் வாய்ந்த சமகால உதாரணங்களில் ஒன்றாக உள்ளது. 2026 செப்டம்பர் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் 158 வாக்குகளுக்கு 63 வாக்குகள் என்ற விகிதத்தில் அது நிறைவேற்றப்பட்டது.
இச்சீர்திருத்தமானது சட்டத்தின் ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களைப் பிரித்தாள நினைக்கும் சந்தர்ப்பவாதத் தலைமைகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாகவும் நோக்கப்படுகின்றது.
அதில் முக்கியமாக,
01- நிலுவையில் உள்ள குற்றவியல் குற்றச்சாட்டுக்கள், ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துதல்,
அரச காணிகளைச் முறைகேடாக கையகப்படுத்தியமை அல்லது சுவீகரித்தமை மற்றும் முறையற்ற சொத்துக் குவிப்பும் அவைகளை பினாமிகளின் பெயர்களில் மாற்றியமையும்
02- அதிகார துஷ்பிரயோகம், அரச வேலைவாய்ப்புகளைப் பணத்திற்கு விற்றமை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவிகளைத் தமதாக்கி பண முதலைகளாக மாறியுள்ளமை.
03- அரசியல் பிழைப்புக்காக கடந்த காலத்தில் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மதவாதக் கருத்துக்களைப் பரப்பியதுடன், அதிலிருந்து அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றமை.
04- அரசியல் அதிகாரத்துடன் தொடர்புபட்ட ஊழல், அரச சொத்துக்கள் முறைகேடாக கையாண்டமை, அரச நிலங்களை தமதும், தமது உறவினர்களின் பெயர்களிலும் மாற்றிக்கொண்டமை, அரச கொந்துராத்து ஒப்பந்தளில் முறைகேடுகள், இலஞ்சம், முறைகேடான சொத்துக்குவிப்பு, அரச நிருவாக உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், அரச அதிகாரிகளை தகுந்த காரணங்கள் இன்றி அழுத்தங்கள் ஊடாக இடமாற்றம் செய்தமை.
இப்படியான குற்றச்சாட்டுக்களும், விசாரணைகளும் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளும் குறுகிய காலத்தில் வெளிச்சத்துக்கு வரலாம் என்ற யதார்த்தமே, இன்று பாரம்பரிய ஊழல்வாதிகளினதும், அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ள விடயமாகவும், அவர்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள விவாதப்பொருளாகவும் மாற்றியுள்ளது.
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், இனம்-மதம் கடந்த சமத்துவமான ஒரு நல்லாட்சி மலர்ந்துள்ளது. உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் நடத்தும் காலம் மலையேறிவிட்டது. சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை முதன்மைப்படுத்தும் புதியஅரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், மக்கள் சுயநலவாதிகளை அடையாளம் கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் தேசிய மக்கள் சக்தியின் தூய அரசியலுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.
அதனால், எதிர்கால முஸ்லிம் அரசியலின் மையக் கேள்வி “எந்தத் தனித்துவக் கட்சி எங்களைப் பாதுகாக்கும்?” என்ற குறுகிய எல்லைக்குள் சுருங்கி விடக்கூடாது. மாறாக “எந்த நிறுவனங்கள் எமது உரிமைகளைப் பாதுகாக்கும்? சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்துகிறதா? அரசியல் அதிகாரங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடாத வகையில் நிறுவனமயப்பட்ட கட்டமைப்புக்கள் வலுவானதாக உள்ளனவா.? என்பனவே முதன்மை வினாக்களாக அமைய வேண்டும்.
மக்களின் அச்ச உணர்வுகளை அரசியலின் எரிபொருளாகப் பயன்படுத்தும் காலத்திலிருந்து, மக்களின் நம்பிக்கையை சட்டத்தின் ஆட்சியின் மீது கட்டியெழுப்பும் காலத்திற்கு நகர்வதே முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தின் அடையாளமாகும். முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சிறு சமூகங்களினதும்பாதுகாப்பு என்பது தனி நபர்களின் வாக்குறுதிகளில் தங்கியிருக்கக் கூடாது. மாறாக அது நீதிமன்றங்களின் சுயாதீனம், சட்டத்தின் சட்டகங்கள், வலுவான அரச நிறுவனங்கள், சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பான அரசியலமைப்பு வழிகாட்டல்களின் ஊடாகவே முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறுகிய கால அரசியல் இலாமங்களுக்காக மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தும் அரசியல் கலாச்சாரத்திலிருந்து முஸ்லிம் சமூகம் வெளியே வர வேண்டிய காலம் இதுவாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்திலும் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தாத பதவிநிலைகள் அரசியல் வெற்றியின் அளவுகோலாக இருக்க முடியாது. ஒரு மக்கள் பிரதிநிதி வகித்த பதவிகளை விட, அவர்தமதுசமூகத்தின்நீண்ட கால பிரச்சனைகளுக்கு எத்தனை நிலையான மற்றும்சட்ட ரீதியான தீர்வூகளை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதே அவரது மக்கள்சேவையின்உண்மையான அளவுகோளாகும்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே வரலாற்று ரீதியாக சில அரசியல் மற்றும்சமூக கருத்து வேறுபாடுகள் நிலவிவந்துள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் அத்தகைய உணர்வு பூர்வமான கடந்த கால பிரச்சனைகளைத் தேர்தல் காலங்களில் மீண்டும் முன்னிலைப்படுத்துவது தீர்வுக்கு வழிவகுக்காது. மாறாக பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உரையாடல்கள் மூலமே இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த முடியும்.
நிலம், நிர்வாகம், இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெளிப்படையான, சட்டபூர்வமான மற்றும் அனைவருக்கும் சமமான நடைமுறைகள் உருவாக்குவதில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. தெளிவான மற்றும் நிலையான கொள்கை திட்டமிடலுடனும், மெதுமையான சமூக உணர்திறனுடனும் அனைத்து அணுகுவதே அரசாங்கத்தின்முதன்மைக் கோட்பாடாகும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதென்பது ஒன்றுக்கொன்றுமுரனாண விடயங்கள் அல்ல. அவைகள் முரனாண விடயங்களாகவும் காட்டப்படவும் கூடாது. நீதியும் சட்டமும் இரு சமூகங்களுக்கும் ஒரே அளவில் நடைமுறைக்கு வருவதுதான் நிலையான தீர்வுக்கான அடித்தளமாகும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் சமத்துவதுடனும், பரஸ்பர நம்பிக்கையுடனனும் நிம்மதியாக வாழ வழிவக்கும்.
ஆகவே “முஸ்லிம் அரசியல்” என்பதற்கே இன்று ஒரு புதிய வரையறை தேவைப்படுகிறது. மதவாதம் அல்லது இனவாத உணர்வுகளைத் தூண்டி தனித்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் முஸ்லிம் மக்களை மீண்டும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிக்கும் எந்த அரசியல் அணுகு முறையும், நீண்ட காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தாது என்ற யதார்த்தத்தை முஸ்லிம் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது.
முஸ்லிம்களின் மத, கலாசார மற்றும் சமூக அடையாளங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் அந்த அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக இலங்கையர் என்ற தேசிய அடையாளத்திலிருந்து விலகுவதானது அரசியல் விமோசனமாக ஒரு பொழுதும் மாறப்போவதில்லை. மாறாக, தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டே சம உரிமையுள்ள இலங்கையர்களாக தேசிய அரசியல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்கெடுப்பதே நாட்டின் குடிமகன் என்ற வகையில் காலத்தின் தேவையாகவும்,முதன்மைப் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாழும் முஸ்லிம் புத்திஜீவிகள், நடுநிலைச் சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் தொலை நோக்கு பார்வையுடைய இளைஞர்கள், இந்த மாற்றத்தைப் பற்றிய ஆரோக்கியமானதும், அறிவார்ந்ததுமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை நிரந்தர அச்சத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் அணுகு முறைகளுக்கும், மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பான அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காக புனித குர்ஆன் வசனங்களை அரசியல் மேடைகளில் பயன்படுத்துவதும், உணர்ச்சிகளைத் தூண்டும் ஆன்மீகப் பாடல்களை ஒலிக்கச் செய்வதும், இறைவனின் மற்றும் அவனது தூதரின் திருநாமங்களை அரசியல் கோஷங்களாகப் பயன்படுத்துவதும் அரசியல் தந்திரோபாயமே தவிர, அது முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்கவோ அல்லது அரசியலின் தரத்தினை தேசியத்தில் ஒரு பொழுதும் உயர்த்திவிடுவதோ இல்லை.
மதம் என்பது தனி நபரினதும் சமூகத்தினதும் ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிமுறைகளுக்கான வாழ்வியல் தத்துவ வழிகாட்டியாகும். அரசியல் என்பது மக்களின் உலகியல் தேவைகளையும்,உரிமைகளையும் பொறுப்புணர்வுடன் நிர்வகிக்கும் ஜனநாயக நடை முறையாகும்.
ஆண்மிக விழுமியங்களையும் ஜனநாயக அரசியலையும் அவரவருக்குரிய புனிதத்துடனும், பொறுப்புடனும் அணுக வேண்டியதன் அவசியத்தை இன்றைய இளைய தலைமுறையினர்நன்கு உணர்ந்துள்ளனர். இந்த அறிவார்ந்த தெளிவை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கு ம்கொண்டு சேர்த்து கொள்கை சார்ந்த ஆரோக்கியமான அரசியல் சூழலை உருவாக்குவது அவர்களின்முதன்மைப் பொறுப்பாகும்.
வெறும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைகளுக்குப் பதிலாக, மக்களின் அறிவு, அணுபவம் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புக்களை அல்லது கனவுகளை மதிக்கும் அரசியல் நடைமுறை முன்னெடுக்கப்பட வேண்டும். வாக்குறிமை என்பது ஒருவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அதிகாரப் பரிசுப்பொருள் அல்ல. அது மக்களின் எதிர்பார்ப்புகளையும், உரிமைகளையும் நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் அமானிதம் அல்லது பொறுப்பாகும்..
எனவே “மக்களுக்காக அரசியல்வாதிகள் என்ன பதவியைப் பெற்றார்கள்?” என்பதல்ல இங்கிருக்கும் அடிப்படை கேள்வி; “மக்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் மேம்படுத்த எத்தகைய நிலையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன? என்பதே முதன்மையான வினாவாக அமைய வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள்?” என்பதே இனிமேல் மக்களின் அரசியல் கேள்வியாக இருக்க வேண்டும்.
“இலங்கை அரசியலில் இதுவரை ஒரு நாகரிகமற்ற அரசியல் பயணம் நீடித்திருந்தால், அந்த நாகரிகமற்ற ஆட்சிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வெளிப்படைத்தன்மையும்,பொறுப்புக்கூறலும் கொண்ட புதிய அரசியல் நாகரிகத்தை நிலை நாட்டுவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியிருப்பதானது உண்மையை உரத்துச் கூறியிருக்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
எனவே, மக்களுக்கான பொறுப்புணர்வு, நேர்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாச்சாரத்தில், அரசியல் அதிகாரம் என்பதுதனீநபர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட குழுக்கலுக்கோ உரித்தான ஒன்றல்ல. அது மக்களால் ஜனநாயக வழிகளில் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தற்காலிக பொறுப்பாகவே கருதப்படுகின்றது. அது மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) நீண்ட கால அரசியல் கொள்கைப் பயணத்தின் நிலையான அடித்தளமாகவும் உள்ளது.
அந்தப் பொறுப்பை கண்ணியமாக நிறைவேற்றி, அரச நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுப்பதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இறுதி இலக்காக உள்ளது.
அந்த வகையில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரையாடல்கள் “எங்களைப் பாதுகாக்க எங்கள் கட்சியே வேண்டும்” என்ற குறுகிய அச்ச உணர்வு சார்ந்த பாதுகாப்பு கோரிக்கைகளிலிருந்து விலகுவதுடன், "நாட்டின் சட்டத்தின் மூலம் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்" என்ற ஜனநாயக நம்பிக்கை சார்ந்த தளத்திற்கு நகர வேண்டும். இதௌதகைய அறிவார்ந்த அரசியல் மாற்றத்தை நோக்கிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதில் முஸ்லிம் புத்திஜீவிகள், நடுநிலை சிந்தனையாளர்கள் மற்றும், கற்றறிந்த இளைய தலைமுறையினரின் மிக அவசியமான ஒன்றாகும்.
அஹமட் இர்ஷாட்.
02-10-2026.
අනන්යතා දේශපාලනය, ජාතික සමගිය? සුළුතර ප්රජාවන්ගේ ප්රජාතන්ත්රවාදී ගමනේ නව පරිණාමයක්. அடையாள அரசியலா, தேசிய ஒருமைப்பாடா? சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயகப் பயணத்தில் புதிய பரிணாமம்.
මුස්ලිම් ප්රජාව ඇතුළු සියලුම සුළුතර ප්රජාවන්ගේ ආරක්ෂාව පුද්ගලයන්ගේ පොරොන්දු මත රැඳී නොසිටිය යුතුය; ඒ වෙනුවට, අධිකරණයේ ස්වාධීනත්වය, නීතියේ ආධිපත්යය, ශක්තිමත් රාජ්ය ආයතන, සමානාත්මතාවය, වගවීම සහ ප්රජාතන්ත්රවාදයේ සුරක්ෂිත දේශපාලන ක්රමයක මගපෙන්වීම තුළින් එය සම්පුර්ණයෙන්ම තහවුරු කළ යුතුය.
ඓතිහාසික වශයෙන් නැඟෙනහිර පළාතේ දෙමළ සහ මුස්ලිම් ප්රජාවන් අතර යම් දේශපාලන හා සමාජීය වෙනස්කම් ඇති වී තිබේ. නමුත් මැතිවරණ කාලවලදී මෙවැනි සංවේදී අතීත ප්රශ්න නැවත කරළියට ගෙන ඒමෙන් විසඳුමක් ලැබෙන්නේ නැහැ.
මුස්ලිම් බුද්ධිමතුන් සහ තරුණ තරුණියන් භීතිකා දේශපාලනය අතහැර සමාජයේ සැබෑ සංවර්ධනය ඉලක්ක කරගත් නව දේශපාලන සංස්කෘතියක් ඇති කිරීමට පෙරට පැමිණිය යුතුය.
"අපව ආරක්ෂා කිරීමට අපේ පක්ෂය අවශ්යයි" යන පටු බිය පදනම් කරගත් ආරක්ෂක ඉල්ලීම් වලින්,
අතීතයේ ජාතිවාදී අදහස් (විශේෂයෙන් 80 දශකයේ අග භාගයේ) එනම්,
තොරතුරු තාක්ෂණය සහ සන්නිවේදන මෙවලම් දියුණු නොවූ යුගයක චිත්තවේගීය තලය මත සුළුතර ප්රජාවන්ගේ ආරක්ෂාව සහ පුද්ගලවාදයේ දේශපාලනය පිළිබඳ සිතුවිලිවලට ප්රමුඛත්වය හිමි විය.
ප්රාදේශීය සහ පුද්ගලවාදී අනන්යතා ප්රජාවේ ක්ෂනික අවශ්යතාවයක් ලෙස සැලකුවද, දිගුකාලීනව ඒවා ප්රධාන ජාතික දේශපාලන ප්රවාහයෙන් ප්රජාව යම් දුරකට ඈත් කරන බවටද තර්කයක් මතු විය. දේශපාලන ව්යාපාර පිටුපස සමාජයේ ඇති ස්වභාවික බිය සහ ආරක්ෂක අවශ්යතා ප්රධාන සාධක වී ඇතත්, වර්තමාන වෙනස් වන දේශපාලන පරිසරය තුළ මිනිසුන් නව දේශපාලන ප්රවේශයන් සහ ජාතික ඒකාග්රතාවය කරා ගමන් කරමින් සිටී.
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ (NPP) ප්රතිපත්ති සහ අරමුණු ඉතා පැහැදිලි ව්යුහයක් ඇත. පුද්ගලවාදී ප්රවේශයන්ගෙන් ඔබ්බට රටේ දේශපාලන ක්රමය සහ නීති රාමුව හරහා මුස්ලිම් ප්රජාව ඇතුළු සියලූ ජන කොටස්වල අයිතිවාසිකම් තහවුරු කළ යුතු බව රජයේ මූලික අරමුණයි. මෙම දේශපාලන ප්රවේශයේ අරමුණ වන්නේ නීතියේ ආධිපත්යය තුළින් පමණක් සියලු පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් සහ සමාන ආරක්ෂාව සැලසිය හැකි බවට විශ්වාසය ගොඩනැගීමයි.
2024 දී රටේ ඇති වූ දේශපාලන සංක්රාන්තියත් සමඟ ජනතාව පුළුල් ජාතික දේශපාලනයකට ගමන් කිරීමට පටන් ගත්හ. නමුත් තවමත් ඉතිරි වී ඇති සාම්ප්රදායික දේශපාලන ආකල්ප ඇති ඇතැම් පාර්ශ්ව තවමත් පැරණි හැඟීම්බර තත්ත්වයන් ඉදිරිපත් කිරීමට උත්සාහ කරයි. සමාජ අවශ්යතා සහ අනන්යතා දේශපාලනය කෙරෙහි අවධානය යොමු කරමින් ඔවුන් නැවත ජනතාව සමඟ සම්බන්ධ කර ගැනීමට අපේක්ෂා කළත්, අද ජනතාව ප්රගතිශීලී සහ ප්රතිපත්තිගරුක දේශපාලනයට කැමැත්තක් දක්වයි.
විශේෂයෙන්ම, නැගෙනහිර පළාතේ සුවිශේෂී සමාජ හැඟීම් සහ උත්සුකයන් කේන්ද්ර කර ගනිමින් සාම්ප්රදායික දේශපාලන ව්යාපාර ඉදිරියට ගෙන යාමට ඇතැම් පාර්ශ්ව විසින් පියවර ගනිමින් සිටී. නමුත් වර්තමාන තරුණ පරම්පරාව එවැනි සංවේදී ප්රවේශයන්ගෙන් ඔබ්බට ගොස් පැහැදිලි චින්තනයක් සහ ප්රගතිශීලී බවක් පෙන්නුම් කරයි.
ඔවුන්ගේ තිරය පිටුපස සැලැස්ම වන්නේ හැඟීම් අවුළුවා තම අනාගත දේශපාලන පැවැත්ම වෙනුවෙන් ඔවුන්ව ඇවිලවීම වුවත්, තාක්ෂණය සහ මාධ්ය උපරිමයෙන් සිටින මේ යුගයේ මෙවැනි අවස්ථාවාදී දේශපාලන වෙළෙඳුන්ට වත්මන් නූතන තරුණ සමාජය තුළ තවදුරටත් ව්යාකූලත්වයක් ඇති කළ නොහැකි බව ඔවුන් වැනි ඇතැම් අය සිතන්නේ නැත.
කවදා මාට්ටු වෙයිද යන බියෙන් කාලය ගත කරන අතීත දූෂිතයන් මැද වත්මන් ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ නීතියේ ආධිපත්යය හා සමානාත්මතාවය ස්ථාපිත වෙමින් පවතී. වාර්ගික නොවන සාමකාමී පාලන පරිසරයක් තුළ නීතියේ සහ අධිකරණයේ ස්වාධීන ක්රියාකාරිත්වය දේශීය හා ජාත්යන්තර වශයෙන් රටේ අධිකරණයේ විශ්වාසය සහ විශ්වසනීයත්වය සැලකිය යුතු ලෙස ඉහළ නංවා ඇත.
මෙම පසුබිම යටතේ, අධිකරණවල ගොඩගැසී ඇති නඩු සහ විනිසුරුවරුන්ගේ සහ අධිකරණවල හිඟය විසඳීම සඳහා පුළුල් අධිකරණ ප්රතිසංස්කරණයක කොටසක් ලෙස 22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනය ප්රමුඛතම සමකාලීන උදාහරණයකි. එය 2026 සැප්තැම්බර් 25 වැනි දින පාර්ලිමේන්තුවේදී ඡන්ද 158 ට ඡන්ද 63 කින් සම්මත විය.
මෙම ප්රතිසංස්කරණය නීතියේ ආධිපත්යය තවදුරටත් ශක්තිමත් කිරීමට අපේක්ෂා කරන අතර ජනතාව බෙදීමට අවශ්ය අවස්ථාවාදී නායකයින් දැඩි බියට පත් කරවන කරුණකි.
ඔවුන් අතර ප්රධාන,
01- පවතින අපරාධ චෝදනා, දූෂණ සහ අක්රමිකතා පිළිබඳ විමර්ශන කඩිනම් කිරීම,
රජයේ ඉඩම් අයථා ලෙස පරිහරණය කිරීම හෝ අයථා පරිහරණය කිරීම සහ අයථා ලෙස දේපළ රැස් කිරීම සහ ඒවා බෙනාමිවරුන්ගේ නම්වලට පැවරීම.
02- බලය අයුතු ලෙස භාවිතා කිරීම, රජයේ රැකියා මුදලට හුවමාරු කිරීම සහ මැදපෙරදිග රටවල ආධාර ගසාකමින් මුදල් කිඹුලන් බවට පත්වීම.
03- පසුගිය කාලයේ දේශපාලන පැවැත්ම සඳහා රටේ සාමය කඩකර ආගමික අදහස් පතුරවා එයින් බලය රඳවා ගැනීමට උත්සාහ කළහ.
04- දේශපාලන බලය සම්බන්ධ දූෂණ, රජයේ වත්කම් අවභාවිතය, රජයේ ඉඩම් තම සහ තම ඥාතීන්ගේ නමට පැවරීම, රජයේ කොන්ත්රාත්තු අක්රමිකතා, අල්ලස් ගැනීම, නීති විරෝධී ලෙස දේපළ පැවරීම, රාජ්ය නිලධාරීන්ගේ රාජකාරියට බාධා කිරීම, නිසි හේතු නොමැතිව බලපෑම් මගින් රාජ්ය නිලධාරීන් මාරු කිරීම.
මෙවැනි චෝදනා, පරීක්ෂණ, විභාග වෙමින් පවතින නඩු කෙටි කාලයකින් එළියට පැමිණීමට හැකිවීම සාම්ප්රදායික දූෂිතයන් සහ දේශපාලකයන් අද බඩේ ඇඹුල් තියල් දියකර හරින, බියට පත් කරන මාතෘකාවක් බවට පත් කර ඇත.
අද ජාතික ජනබල රජය යටතේ කුල ආගම් භේදයෙන් එහා ගිය යහපාලනයක් උදා වී ඇත. හැඟීම්බර දේශපාලනයේ කාලය ගෙවී ගොස් ඇත. නීතියේ ආධිපත්යයට සහ ජාතික සමගියට මුල්තැන දෙන නව දේශපාලන සංස්කෘතියක් බිහිවී ඇත. මෙම සන්දර්භය තුළ ජනතාව ආත්මාර්ථකාමීත්වය හඳුනාගෙන රට ඉදිරියට ගෙන යාමට ජාතික ජන බලයේ පිරිසිදු දේශපාලනය සමඟ අත්වැල් බැඳගෙන සිටිති.
එසේ නම් අනාගත මුස්ලිම් දේශපාලනයේ කේන්ද්රීය ප්රශ්නය වන්නේ “අපිව ආරක්ෂා කරන්නේ කුමන පුද්ගලවාදී පක්ෂයද?” යන්නයි. යන පටු සීමාවන්ට පටු නොවිය යුතුය.
පරිණත ප්රජාතන්ත්රවාදයේ ලක්ෂණය වන්නේ දේශපාලනයේ ඉන්ධන ලෙස ජනතා බිය භාවිත කරන යුගයක සිට නීතියේ ආධිපත්යය පිළිබඳ ජනතා විශ්වාසය ගොඩනඟන යුගයකට ගමන් කිරීමයි. මුස්ලිම් ප්රජාව ඇතුළු සියලුම කුඩා ප්රජාවන්ගේ ආරක්ෂාව පුද්ගලයන්ගේ පොරොන්දු මත රැඳී නොසිටිය යුතුය. ඒ වෙනුවට අධිකරණයේ ස්වාධීනත්වය, නීතියේ රාමුව, ශක්තිමත් රාජ්ය ආයතන, සමානාත්මතාවය, වගවීම සහ ප්රජාතන්ත්රවාදයේ සුරක්ෂිත ව්යවස්ථාපිත මාර්ගෝපදේශ හරහා එය සම්පුර්ණයෙන්ම සහතික කළ යුතුය.
කෙටි කාලීන දේශපාලන අරමුණු වෙනුවෙන් ජනතාවගේ ඡන්දය භාවිත කරන දේශපාලන සංස්කෘතියෙන් මුස්ලිම් සමාජය ගොඩ ඒමට කාලයයි මේ. මිනිසුන්ගේ දෛනික ජීවිතයේ සහ ජීවනෝපායවල ධනාත්මක වෙනස්කම් ඇති නොකරන බලය දේශපාලන සාර්ථකත්වයේ මිනුමක් විය නොහැක. මහජන නියෝජිතයකු දරන තනතුරුවලට වඩා ඔහුගේ රාජ්ය සේවයේ සැබෑ මිනුම වන්නේ ඔහු තම සමාජයේ දිගු කාලීන ගැටලුවලට කෙතරම් ස්ථාවර සහ නීතිමය විසඳුම් ගෙනවිත් තිබේද යන්නයි.
එසේම, ඓතිහාසික වශයෙන් නැගෙනහිර පළාතේ දෙමළ සහ මුස්ලිම් ප්රජාවන් අතර යම් දේශපාලන හා සමාජීය වෙනස්කම් ඇති බව සඳහන් කිරීම වටී. කෙසේ වෙතත් මැතිවරණ කාලවලදී අතීතයේ සිදුවූ මෙවැනි සංවේදී කරුණු නැවත ගෙන ඒමෙන් විසඳුමක් ලැබෙන්නේ නැත. ඒ වෙනුවට අන්යෝන්ය අවබෝධය සහ සංවාද මගින් ප්රජාවන් දෙක අතර සබඳතාව ශක්තිමත් කළ හැකිය.
ඉඩම්, පාලනය, ස්වභාවික සම්පත් සහ ජනතා අයිතීන් සම්බන්ධ ගැටළු සඳහා විනිවිද පෙනෙන, නෛතික සහ සාධාරණ ක්රියා පටිපාටි නිර්මාණය කිරීමට ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජනතා සක් ශක්ති රජය කැපවී සිටී. පැහැදිලි සහ ස්ථාවර ප්රතිපත්ති සැලසුම් කිරීමකින් සහ මෘදු සමාජ සංවේදීතාවකින් සැමට ප්රවේශ වීම රජයේ මාර්ගෝපදේශක මූලධර්මයයි.
දෙමළ සහ මුස්ලිම් ජනතාවගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම අන්යෝන්ය වශයෙන් වෙනස් නොවේ. ඒවා පරස්පර ලෙස පෙන්විය යුතු නැහැ. තිරසාර විසඳුමක පදනම වන්නේ යුක්තිය සහ නීතිය සමාජයන් දෙකටම එකසේ යෙදීමයි. එක්සත් ශ්රී ලංකාවක් තුළ සියලුම ප්රජාවන් සමානාත්මතාවයෙන් සහ අන්යෝන්ය විශ්වාසයෙන් සාමයෙන් ජීවත් වනු ඇත.
එබැවින් "මුස්ලිම් දේශපාලනය" ම අද නව නිර්වචනයක් අවශ්ය වේ. නිකාය හෝ වාර්ගික හැඟීම් අවුස්සමින්, පුද්ගලවාදය අවධාරණය කරමින් මුස්ලිම් ජනතාව ජාතික දේශපාලන ප්රවාහයෙන් වෙන් කරන කිසිදු දේශපාලන ප්රවේශයක් දීර්ඝ කාලීනව මුස්ලිම් ප්රජාවගේ අනාගතය ශක්තිමත් නොකරන බවට යථාර්ථය මුස්ලිම් ප්රජාව අවබෝධ කර ගැනීමට පටන් ගෙන තිබේ.
මුස්ලිම්වරුන්ගේ ආගමික, සංස්කෘතික හා සමාජීය අනන්යතාවය රැක ගැනීම අත්යාවශ්ය කරුණකි. එහෙත් එම අනන්යතාවය රැකගැනීම සඳහා ශ්රී ලාංකීය ජාතික අනන්යතාවයෙන් ඉවත්වීම කිසිවිටෙක දේශපාලන විමුක්තියක් බවට පත්වන්නේ නැත. ඊට පටහැනිව, තම පෞද්ගලිකත්වය ආරක්ෂා කර ගනිමින් සමාන අයිතිවාසිකම් ඇති ශ්රී ලාංකිකයන් ලෙස ජාතික දේශපාලනයට සහ රටේ සමස්ත සංවර්ධනයට සහභාගී වීම රටේ පුරවැසියෙකු ලෙස යුගයේ අවශ්යතාවය සහ මූලික වගකීමයි.
වර්තමාන ඩිජිටල් යුගයේ ජීවත් වන මුස්ලිම් බුද්ධිමතුන්, මධ්යස්ථ චින්තකයින් සහ වෙනසක් ඇති කරන දූරදර්ශී තරුණයින් මෙම වෙනස පිළිබඳව සෞඛ්ය සම්පන්න සහ බුද්ධිමත් විවාදවලට නායකත්වය දිය යුතුය. සුළු ජාතික ප්රජාව රැකගැනීමේ නාමයෙන් ජනතාව සදාකාලික භීතියක රඳවා තබන දේශපාලන ප්රවේශයන් සහ ජනතාවගේ සැබෑ ප්රශ්න විසඳන වගකිවයුතු දේශපාලනය අතර වෙනස සමාජයට පැහැදිලි කළ යුතුව ඇත.
දේශපාලන වේදිකාවල ශුද්ධ වූ කුර්ආන් වාක්ය යොදා ගනිමින් මිනිසුන්ගේ හැඟීම් ඇවිස්සීමට, හැඟුම්බර ආධ්යාත්මික ගීත වාදනය කිරීම, දෙවියන්ගේ සහ ඔහුගේ දූතයාගේ නම් දේශපාලන සටන් පාඨ ලෙස යොදා ගැනීම දේශපාලන උපක්රම වන නමුත් ඒවා මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන අභිලාෂයන් මුදුන් පමුණුවා හෝ ජාතියේ දේශපාලනයේ ප්රමිතිය ඉහළ නැංවීමට හේතු නොවේ.
ආගම යනු පුද්ගලයාගේ සහ සමාජයේ අධ්යාත්මික හා සදාචාරාත්මක ආචාර ධර්ම සඳහා ජීවිතයේ දාර්ශනික මාර්ගෝපදේශයයි. දේශපාලනය යනු ජනතාවගේ ලෞකික අවශ්යතා සහ අයිතිවාසිකම් වගකීමෙන් කළමනාකරණය කිරීමේ ප්රජාතන්ත්රවාදී ක්රමයයි.
පුරුෂ සාරධර්මවලට සහ ප්රජාතන්ත්රවාදී දේශපාලනයට තමන්ගේම පරිශුද්ධභාවයෙන් හා වගකීමෙන් ප්රවේශ වීමේ අවශ්යතාව වර්තමාන තරුණ පරම්පරාව හොඳින් දනී. මෙම බුද්ධිමය පැහැදිළිභාවය සමාජයේ සෑම ජන කොටසකටම ගෙන ඒම සහ ප්රතිපත්ති කේන්ද්ර කරගත් සෞඛ්ය සම්පන්න දේශපාලන පරිසරයක් නිර්මාණය කිරීම ඔවුන්ගේ මූලික වගකීමයි.
හුදු හැඟීම්බර ප්රවේශයන් වෙනුවට ජනතාවගේ දැනුම, ප්රවේශය සහ අනාගත අපේක්ෂා හෝ සිහිනවලට ගරු කරන දේශපාලන ක්රියාවලියක් අනුගමනය කළ යුතුය. ඡන්දය යනු බලයේ පුද්ගලික තෑග්ගක් නොවේ. ජනතා නියෝජිතයින්ට ඔවුන්ගේ අපේක්ෂාවන් සහ අයිතිවාසිකම් ඉටු කිරීම භාර දී ඇති විශ්වාසය හෝ වගකීමයි.
එසේ නම් "දේශපාලකයන් ජනතාව වෙනුවෙන් ලබා දුන් තනතුර කුමක්ද?" මෙහි ඇති මූලික ප්රශ්නය නොවේ; "මූලික ප්රශ්නය විය යුත්තේ: මිනිසුන්ගේ ජීවනෝපාය සහ අනාගතය වැඩිදියුණු කිරීම සඳහා කුමන තිරසාර වැඩසටහන් ක්රියාත්මක කළේද? ඔවුන් කළේ කුමක්ද?" මින් ඉදිරියට ජනතාවගේ දේශපාලන ප්රශ්නය එය විය යුතුය.
“ශ්රී ලංකා දේශපාලනයේ මෙතෙක් තිබුණේ අශීලාචාර දේශපාලන ගමනක් නම් ආණ්ඩුවේ මූලික අරමුණ එම අශීලාචාර පාලන සංස්කෘතියට තිත තබා විනිවිදභාවයෙන් හා වගවීමෙන් නව දේශපාලන ශිෂ්ටාචාරයක් ඇති කිරීම බව” ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා පසුගියදා ප්රකාශ කළේය.
එබැවින් ජනතාවට වගවීම, සාධාරණත්වය, නීතියේ ආධිපත්යය සහ ප්රජාතන්ත්රවාදී වටිනාකම් මත පදනම් වූ නව දේශපාලන සංස්කෘතියක් තුළ දේශපාලන බලය පුද්ගලයන්ට හෝ නිශ්චිත කණ්ඩායම්වලට පැවරෙන්නේ නැත. එය ජනතාව විසින් ප්රජාතන්ත්රවාදීව තේරී පත් වූ පුද්ගලයන්ට පැවරෙන තාවකාලික වගකීමක් ලෙස සැලකේ. එය ජනතා විමුක්ති පෙරමුණේ (ජවිපෙ) දිගුකාලීන දේශපාලන ප්රතිපත්ති ගමනේ ස්ථාවර පදනම ද වේ.
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජන බලවේගයේ අවසාන අරමුණ එම වගකීම ගෞරවාන්විතව ඉටුකර රජයේ පරිපාලනය පිළිබඳ ජනතා විශ්වාසය මුළුමනින්ම යථා තත්ත්වයට පත් කිරීමයි.
ඒ ආකාරයට මුස්ලිම් ප්රජාවගේ දේශපාලන සංවාද “අපව ආරක්ෂා කිරීමට අපේ පක්ෂය අවශ්යයි” යන පටු බිය මුල් කරගත් ආරක්ෂක ඉල්ලීම්වලින් ඉවත් වී “රටේ නීතියෙන් අයිතිවාසිකම් සහ ආරක්ෂාව සහතික කළ යුතුය” යන ප්රජාතන්ත්රවාදී විශ්වාසය පදනම් වූ වේදිකාවකට යා යුතුය. මෙවැනි බුද්ධිමය දේශපාලන වෙනසක් සඳහා සමාජය දැනුවත් කිරීම සඳහා මුස්ලිම් බුද්ධිමතුන්, මධ්යස්ථ චින්තකයින් සහ උගත් තරුණ පරම්පරාව අත්යවශ්ය වේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
02-10-2026
සිංහල පරිවර්තනය සමග) அடையாள அரசியலா, தேசிய ஒருமைப்பாடா.? சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயகப் பயணத்தில் புதிய பரிணாமம்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 02, 2026
Rating:



கருத்துகள் இல்லை: