Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கும் புதிய இலங்கை! ஊழலற்ற ஆட்சி, மனிதநேயம், பொருளாதார வளர்ச்சி!


සිංහල පරිවර්තනය සමග) சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கும் புதிய இலங்கை! ஊழலற்ற ஆட்சி, மனிதநேயம், பொருளாதார வளர்ச்சி!


ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அரங்குகளில் இலங்கை தனது உள்நாட்டு மறுசீரமைப்புமுயற்சிகள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைககள் மற்றும் மனிநேயக் கட்டுபாடுகள் குறித்து வெளிப்படையாக விளக்குவது, நாட்டின் நிலைப்பாடுகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கான ஒரு வழியாகும்.


மனிதநேயத்தைப் பாதுகாப்பதும், திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதும் வலுவான தேசத்தின் அடையாளமாகும். அரசியல் தலையீடுகளற்ற சட்ட அமுலாக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. மனித நேயமும் நீதியும் காக்கப்படும் போதே, இறைமையும் ஜனநாயகமும் உண்மையான வலிமையைப் பெறுகின்றன.


நமது எதிர்காலம்: "ஊழலற்ற தேசம், மனிதநேயம் காக்கும் இறையாண்மை" என்ற தேசிய மக்கள் சக்தியின் இலக்கு, இன்று இலங்கையின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ​


இந்த நேர்மையான ஆட்சி முறையும் மற்றும் சர்வதேசக் கொள்கைகள் இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசு கையாளும் விதமும் இலங்கையின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியிலும், வெளிநாட்டு முதலீடுகளிலும் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பொருளாதார நிபுணர்களின் பார்வையாக உள்ளது.


சர்வதேச அரங்கில் இலங்கையின் புதிய அரசியல் அணுகுமுறையானது! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழலுக்கு எதிரான மேற்கொள்ளும் சட்ட அமுலாக்கம், அரசியல் தலையீடுகளற்ற விசாரணைகள், திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மனித நேயத்தைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களில் வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடு, இலங்கையின் ஆட்சிமுறை மாற்றத்தையும், வெளியுறவுக் கொள்கையின் புதிய அணுகு முறையையும் சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்டும் விடயமாக மாறியுள்ளது.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஊழலுக்கு எதிரான சட்டங்கள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், விசாரணைகளும், வழக்குத் தொடரும் நடவடிக்கைகளும் அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுக்கப் படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார். 



அத்துடன், மனித உயிர்களின் புனிதத்தன்மையையும், மனிதநேய விழுமியங்களையும் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


இந்த அறிவிப்பினை வெறுமனே ஒரு இராஜதந்திர உரையின் பகுதியாக  கருதிவிட முடியாது. ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் கட்டுப்படுத்தி, அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் முன்வைக்கும் முக்கியமான செய்தியாகவும் இருந்தது.


சட்டத்தின் முன் ஒருவர் வகிக்கும் பதவி, அரசியல் செல்வாக்கு அல்லது சமூக அந்தஸ்து என்பன தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கக்கூடாது என்பதே இத்தகைய அணுகுமுறையின் அடிப்படையாகும்.


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதும், சட்ட நடவடிக்கைகள் உரிய நடைமுறைகளின் அடிப்படையில் தொடரப்படுவதும் ஜனநாயக ஆட்சியின் நம்பகத்தன்மைக்கு அவசியமானவை. 


இதன் மூலம், இலங்கையில் சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாகச் செயற்பட வேண்டும் என்ற கொள்கையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் எல்லை கடந்த கடத்தல்களையும் கட்டுப்படுத்துவது தேசிய பாதுகாப்பின் முக்கியமான பகுதியாகும்.


திட்டமிட்ட குற்றச்செயல்களையும் எல்லை கடந்த கடத்தல்களையும் எதிர் கொள்வதற்காகப் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளமை, இந்தச் சவால்களைச் சட்டரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் கையாள்வதற்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றது.


மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றியானது தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு துரிதமாகவும் நேர்மையாகவும் நிறைவேற்றி வருகிறது என்பதற்கான சாட்சிகளின் வெளிப்படைத்தன்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. 


இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களை வெளிப்படையானதாகவும் சர்வதேச நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் கையாள்வதை தற்போதைய அரசு நிரூபித்துக் காட்டி வருகிறது.


நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், இறையாண்மையையும் எத்தகைய சமரசங்களுக்கும் இடமின்றிப் பாதுகாப்பதில் பாதுகாப்புத் துறையும், நீதித்துறையும் இணைந்து கொண்டுள்ள துணிச்சலான நடவடிக்கைகள் எந்தளவு பாராட்டத்தக்கவையோ!  அந்தளவு, உலக நாடுகளின் மத்தியில் இலங்கையின் மீதுள்ள நம்பகத்தன்மையை மீளக்கட்டியெழுப்பி, கறைபடியாத ஒரு தூய நாடாக இலங்கையை மாற்றுவதற்கான வெளிவிவகார அமைச்சின் இஸ்திரமான மற்றும் சாதகமான அணுகுமுறையை இது உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.


அந்த வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் செயற்பாடுகள் நாட்டின் எல்லைகளையும் கடந்து விரிவடையக்கூடிய நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு உள்நாட்டுச் சட்ட அமுலாக்கத்துடன் சர்வதேச ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.


இத்தகைய சட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது, அவை அரசியலமைப்புக்கும் மனித உரிமைகளுக்கும் உட்பட்டு அமுல்படுத்தப்படுவதும், விசாரணைகள் ஆதாரங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதும் முக்கியமானதாகும். 


மேலும், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், சட்டத்தின் ஆட்சியையும் குடிமக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே நிலையான பாதுகாப்பிற்கான அடித்தளமாகும்.


இதனூடாக, நாட்டின் இறைமை என்பது வெறுமனே எல்லைகளைப் பாதுகாப்பதுடன் முடிவடைவதில்லை என்பதும் தெளிவாகின்றது. ஊழல் வலையமைப்புகள், போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத வலையமைப்புகளுக்கு எதிராகச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் ஆற்றலும் ஒரு நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


உலக நாடுகளுடனான உறவுகளைப் பேணும்போது இலங்கையின் தேசிய நலன்கள், இறைமை, சுயாதீனத்தை தீர்மானிக்கும் உரிமை மற்றும் பிராந்திய அமைதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியமாகும்.


அதேபோன்று, சர்வதேச சமூகத்துடன் உரையாடுவதிலும் ஒத்துழைப்பதிலும் மனிதநேயம், சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை முன்னிறுத்துவது இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைக்கு வலுச் சேர்க்கக்கூடியதாகும்.


ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அரங்குகளில் இலங்கை தனது உள்நாட்டு மறுசீரமைப்பு முயற்சிகள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனிதநேயக் கடப்பாடுகள் குறித்து வெளிப்படையாக விளக்குவது, நாட்டின் நிலைப்பாடுகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கான ஒரு வழியாகும். அதேவேளை, சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் உறுதிமொழிகள் உள்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் செயல்களாலும், அளவிடக்கூடிய முன்னேற்றங்களாலும் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.


இதுவே இராஜதந்திர அறிக்கைகளுக்கும் நடைமுறை ஆட்சிக்கும் இடையிலான முக்கியமான தொடர்பாகும்.
புதிய அரசியல் கலாச்சாரத்தின் உண்மையான அளவுகோல் என்பதும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, அரச நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் மனிதநேயப் பாதுகாப்பு ஆகிய கொள்கைகள், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடர்புடையவை. 


இதனால் பொருளாதார ரீதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்போதுமே தங்களது முதலீடுகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சூழலையே விரும்புவார்கள். 


ஊழல் ஒழிக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்படும் போது, முதலீட்டாளர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இலங்கையில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.


அரசியல் தலையீடற்ற சுயாதீனமான நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகியவை நிதி மோசடிகளைத் தடுத்து, அரசுத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இது நாட்டின் பொருளாதாரத்தை இஸ்திரமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.


மனித நேயத்தைப் பாதுகாப்பதிலும், எல்லை தாண்டிய திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு காட்டும் தீவிரமானது உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ள விடயங்களாக மாறியுள்ளன. 


இதன் மூலம் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பையும், உதவிகளையும் எளிதில் பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


புதிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் பெருமளவில் அதிகரிக்கின்ற பொழுது நாட்டின் பல துறைகள் வளர்ச்சியடைந்து ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலைமை ஏற்படும். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் உயர்த்தவும், வறுமையைக் குறைக்கவும் வழிவகுக்கும். 


ஆனால், இத்தகைய மாற்றத்தின் வெற்றியானது அறிவிப்புகளால் மட்டும் தீர்மானிக்கப்படாது. விசாரணைகளின் சுயாதீனம், நீதிமன்றங்களின் சுதந்திரம், சட்ட அமுலாக்கத்தின் பாரபட்சமின்மை மற்றும் அனைத்து மக்களினதும் உரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதன் அடிப்படையிலேயே அது மதிப்பிடப்பட வேண்டும்.


அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கும் ஒரே சட்டமாகவே இருக்க வேண்டும். அரசியல் செல்வாக்கு விசாரணைகளின் திசையைத் தீர்மானிக்கும் கருவியாக இருக்க கூடாது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது நீதிமன்ற நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும். 


நிரபராதித்தன்மைக்கான முன்கணிப்பும், நியாயமான விசாரணைக்கான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். 


இவை அனைத்தும் வலுவான ஜனநாயகத்திற்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரச நிர்வாகத்திற்கு அவசியமானவையாகும்.


இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் இஸ்தீரத்தன்மையையும் மனித நேயத்தையும் முன்னிறுத்துவதோடு, உள்நாட்டில் ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. 


அது நாட்டின் சர்வதேச நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பெரும் பங்கினை வகிக்கும். இறுதியில், ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் அதிகாரத்தில் மட்டும் இல்லை; அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது. 


அதனடிப்படையில், சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதும், மனித உயிர் மதிக்கப்படுவதும், அரசியல் செல்வாக்கின்றி நீதி நிலை நாட்டப்படுவதும், உறுதிப்படுத்தப்படுவதும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி முன்னேறும் எதிர்கால இலங்கையை பற்றிய கனவில் தங்கியுள்ளது என்ற நம்பிக்கை மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மேலும் வலுப்பெற்று வருகின்றது.


அஹமட் இர்ஷாட்.
05-10-2026.

ජාත්‍යන්තර තලයේ නව ශ්‍රී ලංකාවක්! දූෂණයෙන් තොර පාලනයක්, මනුෂ්‍යත්වය, ආර්ථික සංවර්ධනය! சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கும் புதிய இலங்கை! ஊழலற்ற ஆட்சி, மனிதநேயம், பொருளாதார வளர்ச்சி!

එක්සත් ජාතීන්ගේ සංවිධානය වැනි ජාත්‍යන්තර වේදිකාවල ශ්‍රී ලංකාව සිය දේශීය ප්‍රතිව්‍යුහගත ප්‍රයත්න, දූෂණ විරෝධී පියවර සහ මානුෂීය සම්බාධක ප්‍රසිද්ධියේ ඉදිරිපත් කිරීම රටේ ස්ථාවරයන් ලෝකයට සන්නිවේදනය කිරීමේ මාර්ගයකි.

මනුෂ්‍යත්වය ආරක්ෂා කිරීම සහ සංවිධානාත්මක අපරාධවලට එරෙහිව නීතිය ආරක්ෂා කිරීම ශක්තිමත් ජාතියක ලක්ෂණ වේ. දේශපාලන මැදිහත්වීම්වලින් තොර නීතිය ක්‍රියාත්මක කිරීම ජාතික ආරක්ෂාව තහවුරු කරයි.
නීතිය ඉදිරියේ සමානාත්මතාවයේ මූලධර්මය ප්‍රජාතන්ත්‍රවාදය කෙරෙහි ජනතාවගේ විශ්වාසය ශක්තිමත් කරයි. මනුෂ්‍යත්වය සහ යුක්තිය ආරක්ෂා වූ විට පරමාධිපත්‍යය සහ ප්‍රජාතන්ත්‍රවාදය සැබෑ ශක්තියක් ලබයි.
++++++++++++++++

අපේ අනාගතය: "දූෂණයෙන් තොර ජාතියක්, මනුෂ්‍යත්වය සුරකින පරමාධිපත්‍යයක්" යන ජාතික ජන බලවේගයේ මෙහෙවරට අද ශ්‍රී ලංකාවේ දේශසීමාවෙන් ඔබ්බට විශ්වීය පිළිගැනීමක් ඇත. මෙම අවංක පාලන ක්‍රමය සහ ශ්‍රී ලංකා රජය ජාත්‍යන්තර ප්‍රතිපත්ති රාජ්‍ය තාන්ත්‍රිකව හසුරුවන ආකාරය ශ්‍රී ලංකාවේ අනාගත ආර්ථික සංවර්ධනයට සහ විදේශ ආයෝජන කෙරෙහි විශාල ධනාත්මක බලපෑමක් ඇති කරනු ඇති බව ආර්ථික විශේෂඥයින්ගේ අදහසයි.

ජාත්‍යන්තරය තුළ ශ්‍රී ලංකාවේ නව දේශපාලන ප්‍රවේශය! අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලය රජය ශ්‍රී ලංකාවේ පාලන තන්ත්‍ර වෙනස සහ විදේශ ප්‍රතිපත්තිය පිළිබඳ නව ප්‍රවේශයක් ජාත්‍යන්තරය තුළ ආදර්ශයක් බවට පත්ව ඇත.

එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ 81 වැනි සැසිවාරය අමතමින් විදේශ කටයුතු අමාත්‍ය විජිත හේරත් ප්‍රකාශ කළේ දූෂණ විරෝධී නීති නොබියව හා අපක්ෂපාතීව ක්‍රියාත්මක කරන බcවත්, දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව පරීක්ෂණ සහ නඩු පැවරීම් සිදුකරන බවත්ය.

ඊට අමතරව, ජාත්‍යන්තර ප්‍රජාව ඉදිරියේ මානව ජීවිතවල පරිශුද්ධභාවය සහ මානව වටිනාකම් ආරක්ෂා කිරීමට ශ්‍රී ලංකාවේ කැපවීම ඔහු ප්‍රකාශ කර ඇත.

මෙම ප්‍රකාශය හුදෙක් රාජ්‍ය තාන්ත්‍රික කතාවක කොටසක් ලෙස සැලකිය නොහැකිය. දූෂණය සහ බලය අයුතු ලෙස භාවිතා කිරීම මැඩලීමට සහ රාජ්‍ය ආයතන කෙරෙහි ජනතා විශ්වාසය යළි ගොඩනැගීමට රජයේ ප්‍රතිපත්තිමය ස්ථාවරය ජාත්‍යන්තරය හමුවේ ඉදිරිපත් කිරීම වැදගත් පණිවිඩයක් ද විය.

එවැනි ප්‍රවේශයක පදනම වන්නේ නීතිය ඉදිරියේ කෙනෙකුගේ ස්ථාවරය, දේශපාලන බලපෑම හෝ සමාජ තත්ත්වය තීරණය කරන සාධක නොවිය යුතු බවයි.
ප්‍රජාතන්ත්‍රවාදී පාලනයේ විශ්වසනීයත්වය සඳහා දූෂණ චෝදනා සම්බන්ධයෙන් ස්වාධීන පරීක්ෂණ සහ නියමිත ක්‍රියාවලිය අත්‍යවශ්‍ය වේ. 

මේ හරහා ශ්‍රී ලංකාවේ නීතිය සහ යුක්තිය සැමට එක හා සමානව ක්‍රියාත්මක විය යුතුය යන මූලධර්මය ශක්තිමත් කිරීමේ රජයේ අභිප්‍රාය ජාත්‍යන්තර ප්‍රජාවට පැහැදිලි වී තිබේ.
මේ අතර, දූෂණ විරෝධී ක්‍රියාමාර්ග සමඟ සංවිධානාත්මක අපරාධ සහ දේශසීමා හරහා සිදුවන ජාවාරම් මැඩලීම ජාතික ආරක්ෂාවේ වැදගත් අංගයකි.

සංවිධානාත්මක අපරාධ සහ දේශසීමා හරහා සිදුවන ජාවාරම් මැඩලීම සඳහා නව නීතියක් හඳුන්වා දෙන බවට නියෝජ්‍ය ආරක්ෂක අමාත්‍ය අරුන් ජයසේකර මහතා කළ ප්‍රකාශය මෙම අභියෝගවලට නීත්‍යානුකූලව සහ ආයතනිකව මුහුණ දීමේ ප්‍රයත්නයන් ඉස්මතු කරයි.

එසේම ජාතික ජන බලවේගයේ (NPP) ආණ්ඩුවේ විදේශ ප්‍රතිපත්තියේ සාර්ථකත්වය, මැතිවරණ පොරොන්දු කඩිනමින් සහ අවංකව ඉටු කරමින් සිටින ආකාරය පිළිබඳ විනිවිදභාවය පිළිබඳ සාක්ෂියකි. ශ්‍රී ලංකාවේ අභ්‍යන්තර කටයුතු විනිවිදභාවයෙන් හා ජාත්‍යන්තර ප්‍රමිතීන්ට අනුකූලව සිදු කරන බව වත්මන් රජය පෙන්නුම් කර ඇත.

රටේ ජාතික ආරක්‍ෂාව සහ ස්වෛරීභාවය කිසිදු සම්මුතියකින් තොරව ආරක්‍ෂා කිරීමට ආරක්‍ෂක දෙපාර්තමේන්තුව සහ අධිකරණ දෙපාර්තමේන්තුව ගන්නා නිර්භීත ක්‍රියාමාර්ග කෙතරම් ප්‍රශංසනීයද!  එය කෙතරම්ද යත්, ලෝකය අතර ශ්‍රී ලංකාවේ විශ්වසනීයත්වය යළි ගොඩනැංවීමට සහ ශ්‍රී ලංකාව පිරිසිදු හා අපිරිසිදු රටක් බවට පත් කිරීමට විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ස්ථාවර සහ ධනාත්මක ප්‍රවේශය ලොවට ප්‍රකාශ කර ඇත.

ඒ ආකාරයට රටේ දේශසීමාවෙන් ඔබ්බට ව්‍යාප්ත විය හැකි සංවිධානාත්මක අපරාධ කණ්ඩායම්වල ක්‍රියාකාරකම් වැළැක්වීම සඳහා දේශීය නීතිය ක්‍රියාත්මක කිරීම සමඟ ජාත්‍යන්තර සහයෝගීතාව අවශ්‍ය වේ. එවැනි නීතිමය ක්‍රියාමාර්ග ක්‍රියාත්මක වන විට ඒවා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට හා මානව හිමිකම්වලට අනුකූලව ක්‍රියාත්මක වීමත්, සාක්ෂි මත පරීක්ෂණ පැවැත්වීමත් වැදගත් වේ. 

තවද, ජාතික ආරක්ෂාව සුරක්ෂිත කිරීම සහ නීතියේ ආධිපත්‍යය සහ පුරවැසියන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කිරීම තිරසාර ආරක්ෂාවේ පදනම වේ.
මේ හරහා රටේ ස්වෛරීභාවය සීමා මායිම් ආරක්ෂා කිරීමෙන් පමණක් අවසන් නොවන බවද පැහැදිලිය. දූෂණ, මත්ද්‍රව්‍ය ජාවාරම්, සංවිධානාත්මක අපරාධ සහ නීතිවිරෝධී ජාලවලට එරෙහිව නීතිමය ක්‍රියාමාර්ග ගැනීමට ඇති හැකියාවද රටක ස්වෛරීභාවය ආරක්‍ෂා කිරීමේදී වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි.

ලෝකයේ රටවල් සමඟ සබඳතා පවත්වමින් ශ්‍රී ලංකාවේ ජාතික අවශ්‍යතා, ස්වෛරීභාවය, ස්වයං නිර්ණ අයිතිය සහ කලාපීය සාමය සඳහා වැදගත්කමක් ලබා දීම අවශ්‍ය වේ.
එසේම ජාත්‍යන්තර ප්‍රජාව සමඟ සංවාදයේ සහ සහයෝගීතාවයෙන් මනුෂ්‍යත්වය, සාමය, අන්‍යෝන්‍ය ගෞරවය සහ වගකීම ප්‍රවර්ධනය කිරීම ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය තාන්ත්‍රික ප්‍රවේශය ශක්තිමත් කළ හැකිය.

එක්සත් ජාතීන්ගේ සංවිධානය වැනි ජාත්‍යන්තර වේදිකාවල ශ්‍රී ලංකාව සිය දේශීය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ ප්‍රයත්න, දූෂණ විරෝධී පියවර සහ මානුෂීය කැපවීම් ප්‍රසිද්ධියේ ඉදිරිපත් කිරීම රටේ ස්ථාවරයන් ලෝකයට සන්නිවේදනය කිරීමේ මාර්ගයකි. ඒ අතරම, ජාත්‍යන්තර තලයේ කරන ලද කැපවීම් ක්‍රියාවෙන් සහ ගෘහස්ථව මැනිය හැකි ප්‍රගතියෙන් පිටුබලය විය යුතුය.

රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රකාශ සහ ප්‍රායෝගික පාලනය අතර ඇති තීරණාත්මක සම්බන්ධකය මෙයයි.
නව දේශපාලන සංස්කෘතියේ සැබෑ මිනුම!
ජාතික ජන බලය රජය විසින් ප්‍රකාශ කරන ලද දූෂණයෙන් තොර පාලනය, නීතියේ ආධිපත්‍යය, රාජ්‍ය ආයතනවල ස්වාධීනත්වය සහ මානව ආරක්‍ෂාව යන මූලධර්ම ශ්‍රී ලංකාවේ දේශපාලන සංස්කෘතිය පරිවර්තනය කිරීමේ අරමුණ සමඟ සම්බන්ධ වේ. 

මේ අනුව ආර්ථික වශයෙන් විදේශීය ආයෝජකයින්ට සෑම විටම තම ආයෝජන සඳහා ආරක්ෂිත සහ විනිවිද පෙනෙන පරිසරයක් අවශ්‍ය වේ. දූෂණය නැති කර නීතියේ ආධිපත්‍යය ශක්තිමත් කළ විට ආයෝජකයින් ශ්‍රී ලංකාවේ ආයෝජනය කිරීමට පසුබට නොවනු ඇත.

දේශපාලන මැදිහත්වීම්වලින් තොර ස්වාධීන අධිකරණයක් සහ නීතිය ක්‍රියාත්මක කිරීම මූල්‍ය වංචා වැළැක්වීම සහ රජයේ යෝජනා ක්‍රමවල විනිවිදභාවය සහතික කරනු ඇත. එමගින් රටේ ආර්ථිකය ස්ථාවර වර්ධන මාවතකට ගෙන යනු ඇත.

මනුෂ්‍යත්වය ආරක්ෂා කිරීමට සහ සංවිධානාත්මක දේශසීමා අපරාධ මැඩලීමට රාජ්‍යයේ කැපවීම ජාත්‍යන්තර පිළිගැනීමට ලක් වූ දෙයක් බවට පත්ව ඇත. මේ හරහා ජාත්‍යන්තර මූල්‍ය ආයතන සහ මිත්‍ර රටවලින් ආර්ථික සහයෝගීතාව සහ ආධාර පහසුවෙන් ලබාගැනීමට අවස්ථාව උදාවී ඇත.

නව විදේශීය හා දේශීය ආයෝජන විශාල වශයෙන් වැඩි වූ විට රටේ බොහෝ ක්ෂේත්‍ර දියුණු වී නව රැකියා දහස් ගණනක් බිහිවනු ඇත. මෙය රටේ සමස්ත ආර්ථිකය නංවාලීමට සහ දිළිඳුකම අවම කිරීමට හේතු වේ. 

එහෙත් එවැනි වෙනසක සාර්ථකත්වය නිවේදනවලින් පමණක් තීරණය වන්නේ නැත. එය විනිශ්චය කළ යුත්තේ විමර්ශනවල ස්වාධීනත්වය, අධිකරණයේ ස්වාධීනත්වය, නීතිය ක්‍රියාත්මක කිරීමේ අපක්ෂපාතීත්වය සහ ප්‍රායෝගිකව සියලු මිනිසුන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා වන්නේද යන්න මතය.

බලයේ සිටින අයට සහ බලයෙන් බැහැර අයට එක නීතියක් තිබිය යුතුයි. විමර්ශනවල දිශානතිය තීරණය කිරීමේදී දේශපාලන බලපෑම් ඉවහල් නොවිය යුතුය. චෝදනා එල්ල වන විට අධිකරණ ක්‍රියා පටිපාටිවලට ගරු කළ යුතුයි. නිර්දෝෂීභාවය පිළිබඳ පූර්ව නිගමනය සහ සාධාරණ නඩු විභාගයකට ඇති අයිතිය ආරක්ෂා කළ යුතුය. 

ශක්තිමත් ප්‍රජාතන්ත්‍රවාදයක් සහ ජනතාවගේ විශ්වාසය භුක්ති විඳින පාලනයක් සඳහා මේ සියල්ල අත්‍යවශ්‍ය වේ.
ශ්‍රී ලංකාව සිය විදේශ ප්‍රතිපත්තිය තුළ අඛණ්ඩතාව සහ මනුෂ්‍යත්වය ප්‍රවර්ධනය කිරීමේ නව මාවතකට අවතීර්ණ වී ඇත. 

එය රටේ ජාත්‍යන්තර විශ්වසනීයත්වය ශක්තිමත් කිරීම සහ ජාතික ආරක්ෂාව ඉහළ නැංවීම සඳහා විශාල කාර්යභාරයක් ඉටු කරනු ඇත. අවසාන වශයෙන්, රටක සැබෑ ශක්තිය පවතින්නේ එහි බලය තුළ පමණක් නොවේ; ඒ බලය ක්‍රියාත්මක වන ආකාරය ගැනයි.

ඒ මත දේශපාලන බලපෑම්වලින් තොරව නීතිය සැමට එකසේ ක්‍රියා කරයි, මනුෂ්‍ය ජීවිතයට ගරු කරයි, යුක්තිය තහවුරු වේ, සාධාරණය ඉටුවේය යන විශ්වාසය අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය ප්‍රමුඛ නව දේශපාලන සංස්කෘතියක් කරා ගමන් කරන අනාගත ශ්‍රී ලංකාව පිළිබඳ සිහිනය මත ජනතාව සහ ජාත්‍යන්තරය තුළ ශක්තිමත් වෙමින් පවතී.

අහමඩ් ඉර්ෂාඩ්
දිනකරන් සඟරාව සඳහා,
05-10-2026.
සිංහල පරිවර්තනය සමග) சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கும் புதிய இலங்கை! ஊழலற்ற ஆட்சி, மனிதநேயம், பொருளாதார வளர்ச்சி! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.