Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறையில் உள்ள அனோஜனை நேரில் சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அஜ்வாத்!


-தூதரக, சட்ட உதவிகளைத் தொடர நடவடிக்கை
-மேன்முறையீடு செய்ய இலங்கைத் தூதரகம் உதவி

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், ரியாதிலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலையிலுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்குக் நேற்றுமுன்தினம் (08) நேரில் விஜயம் செய்து, அங்குள்ள அனோஜன் சிவராசாவைச் சந்தித்து அவரது நலன் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அனோஜனுடன் விரிவாகக் கலந்துரையாடிய தூதுவர், அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்ததுடன், இலங்கை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேவையான அனைத்துத் தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குவதாக மறுஉறுதியளித்தார். அத்துடன், நேரடித் தொடர்புகளை வசதிப்படுத்துவதற்காகத் தனது தொடர்பு விபரங்களையும் அவர் அனோஜனுடன் பகிர்ந்துகொண்டார்.

சுகாதார நிலை
அனோஜன் சிவராசா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறைச்சாலை அதிகாரிகள் அவரது நலனில் போதிய கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கு நன்றி
தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை மருத்துவ அதிகாரியையும் சந்தித்த தூதுவர், தனது விஜயத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும், அனோஜன் சிவராசாவின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் காட்டி வரும் அக்கறைக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேன்முறையீட்டு உதவி
அனோஜன் சிவராசா சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

#SaudiArabia #SriLankaEmbassyRiyadh #AmeerAjwad #AnojanSivarasa #DammamCentralPrison #MinistryOfForeignAffairs #LKA #Thinakaran #SriLankaNews #SL #DhammamPrison #Riyadh
சிறையில் உள்ள அனோஜனை நேரில் சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அஜ்வாத்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.