Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது: எம்மிடம் முடிவுகளை எதிர்பாரக்க வேண்டாம்! ஜனாதிபதி திட்டவட்டம்

“நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பில் சரியான முடிவு என நாம் நம்புகின்றோம். உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது, அந்த முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு பதுளையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நிலையே இருக்க வேண்டும். இது விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.

சட்டம் தம்மை நோக்கி வராது என கருதியவர்களும், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியவர்களுமே சட்டம் அமுலாவதற்கு எதிராக கூக்குரல் எழுப்புகின்றனர்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது: எம்மிடம் முடிவுகளை எதிர்பாரக்க வேண்டாம்! ஜனாதிபதி திட்டவட்டம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.