Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளரின் பங்கேற்பில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய மட்ட நியமனங்கள் வழங்கி வைப்பு!


கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளரின் பங்கேற்பில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய மட்ட நியமனங்கள் வழங்கி வைப்பு!


மட்டக்களப்பு உளசமூக ஆதரவு மையத்தின் 26 ஆண்டுகால சேவையின் மைல்கல் நிகழ்வாக, தேசிய மட்டத்திலான பல்வேறு பொறுப்புகளுக்கான நியமனங்களும் தொண்டர்களுக்கான நியமனங்களும் இன்று (25.10.2026) வழங்கி வைக்கப்பட்டன.


கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ உமர் கத்தாப் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, தேசிய மட்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.


சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு மையத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், மட்டக்களப்பிலுள்ள உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தேசிய இணைப்பாளர், தேசிய உளசமூக சேவை ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக விழிப்புணர்வு மற்றும் தொண்டர் ஒருங்கிணைப்பாளர்,, தேசிய தொண்டர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


சிறப்பு அதிதிகளாக MIU பல்கலைக்கழகத்தின் கல்விக்கான இலங்கைப் பொறுப்பாளர் தேசபந்து கௌரவ கலாநிதி ABM. மர்வான், பல்கலைக்கழகத்தின் சமய, சமூக மற்றும் கலாசார செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரதிநிதி தேசபந்து கௌரவ கலாநிதி பாஹிர், உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் E. கங்காதரன், டெஸ்மியோ நிறுவனத்தின் பணிப்பாளர் T. சிற்றம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


பிரதம அதிதி உரை

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ உமர் கதாப் அப்துல்லா, உளசமூக ஆதரவு மையம் நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் மனமகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் குடும்பமாக இணைந்து செயற்பட்டு வருவதைத் தாம் அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இவ்வமைப்பின் சேவையை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்குத் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், அமைப்பின் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




உளவியல் ரீதியான பாதிப்புகளால் சிலர் தவறான முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் சமூகத்தில் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலைமைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.


இவ்வாறான சம்பவங்களை நேரில் பார்த்தும், அறிந்தும், கேட்டும் வருவது தமக்கு மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அவர், புதிதாக நியமனம் பெற்ற தேசிய இணைப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


அவர்கள் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் உளசமூகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வின் மூலம் உளசமூக ஆதரவு சேவைகளை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கான புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் உளநல மேம்பாடு, சமூக நல்லிணக்கம், விழிப்புணர்வு மற்றும் தொண்டர் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளரின் பங்கேற்பில் உளசமூக ஆதரவு மையத்தின் தேசிய மட்ட நியமனங்கள் வழங்கி வைப்பு! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.