සිංහල පරිවර්තනය සමග) பேரினவாத முகமூடியும்; இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்திற்கான அவசியமும்!
இன, மத வேறுபாடுகளற்ற புதிய அரசியல் கலாச்சாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில், பழைய மேட்டுக்குடி அரசியலை மீண்டும் கொண்டுவர சிலர் முயல்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் வழிவந்த சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியானது தேர்தல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தாராளவாத முகமூடியைப் போர்த்திக்கொண்டு தொடர்ச்சியாகப் பேரினவாதக் கொள்கைகளைக் கையாண்டு வருகின்றன.
பௌத்த மத பீடங்களின் ஆதரவைப் பெறுதல், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தல் போன்ற சஜித் பிரேமதாசவின் சமகால அரசியல் நகர்வுகள் சிங்கள-பௌத்த வாக்குகளை இலக்கு வைக்கும் தந்திரோபாயங்களாக அமைந்துள்ளன.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தாராளவாத மற்றும் தேசியக் கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டபோதிலும், தனது அரசியல் அதிகாரத்தையும், தேர்தல் வெற்றியையும் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆரம்பம் முதலே பேரினவாதத்தையும், பிரித்தாளும் தந்திரங்களையும் கையாண்டே வந்துள்ளது.
சுதந்திர இலங்கையின் விடியலிலேயே, மலையகத் தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து அவர்களின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியதும், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களைச் செய்து புவியியல் அமைப்பையே மாற்றியமைத்ததும் இக்கட்சியின் பிரித்தாளும் தந்திரோபாய சுயநல அரசியலின் தொடக்கம் என சிரேஷ்ட்ட அரசியல் அவதானிகளுடைய கருத்துக்கள் அமைந்துள்ளன.
1956 பொதுத் தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 'சிங்களம் மட்டும்' முழக்கத்திற்குப் பேரினவாத மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைப்பதைக் கண்டு, 1956 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தனது இருமொழிக் கொள்கையைக் கைவிட்டு 'சிங்களம் மட்டும்' என்ற பேரினவாத முழக்கத்திற்கு அடிபணிந்தமை, தமிழ் மக்களின் நம்பிக்கையை முற்றாகச் சிதைத்தது.
அதன் தொடர்ச்சியாக, 1978 அரசியலமைப்பில் பௌத்த மதவாதத்தை அரசமைப்பில் நிலை நிறுத்தியதும், 1983 'கருப்பு ஜூலை' இனப்படுகொலையின் போது அரசாங்கம் மௌனம் காத்து வன்முறையைத் தூண்டிவிட்டு, ஒரு கொடூரமான உள்நாட்டுப் போருக்கு வித்திட்டதும் ஐக்கிய தேசியக் கட்சி செய்த மறக்க முடியாத திரைக்கு பின்னால் உள்ள இனவாத அரசியலாகவும் வரலாற்றுத் துரோகங்களாகவும் கூறப்படுகின்றது.
சமகால அரசியலிலும் கூட, இக்கட்சி சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் தற்காலிகக் கூட்டணிகளை அமைத்துக் கொள்கின்றது. ஆனால்,தேர்தல் முடிந்ததும் அவர்களின் அடிப்படை உரிமைகளான அதிகாரப் பகிர்வு மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வையும் வழங்காமல் வழக்கம்போல கைகழுவிடும் நடத்தையையே மக்கள் இன்றும் கண்டும் வருகின்றனர்.
"தாராளவாதம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, வரலாற்று ரீதியாகச் சிறுபான்மைச் சமூகங்களின் முதுகில் குத்தி, பெரும்பான்மைவாத அரசியலுக்குத் தீனி போட்டதன் மூலம் இத்தேசத்தின் பிளவுகளை மேலும் ஆழப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான சுயரூபம் என்பதை, அண்மைக்கால தேர்தல் முடிவுகளில் அக்கட்சிக்கு கிடைத்த செல்வாக்கு தெளிவுபடுத்தியிருந்தது."
இவ்வாறான ஐக்கிய தேசியக் கட்சியின் பாசறையில் வளர்க்கப்பட்ட சஜித் பிரேமதாச, இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) பிரிந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொள்கை நிலைப்பாடுகளும் சமகால நடவடிக்கைகளும், தேர்தல் அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன என்பதோடு; பேரினவாதக் கொள்கைகளைக் கையாளுவதுடன், சிறுபான்மையினரை அரவணைப்பது போன்ற பிம்பத்தை மக்கள் மயப்படுத்தித் தந்திரோபாய அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளமையும் வெளிப்படையானதும், தெளிவானதுமான விடயமாக மாறியுள்ளது.
சஜித் பிரேமதாச அண்மைக்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கைகளுக்குள் சிக்குண்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பின்னால் சில முக்கிய அரசியல் காரணிகள் இருக்கின்ற அதே சமயத்தில், அரசியல் ஆய்வாளர்களாலும், பொதுமக்களாலும் அதிகமாக உற்று நோக்கப்படும் விவகாரமாகவும் மாறியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பிரதான தேர்தல்களில் ஒட்டுமொத்த பெரும்பான்மை பௌத்த வாக்குகளைப் பெறாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்ற யதார்த்த நிலை உள்ளது. இதனால், சஜித் பிரேமதாச பௌத்த மத பீடங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் பௌத்த மரபுகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனம் வெளிப்படையாகவே தலை தூக்கியுள்ளது.
சஜித் பிரேமதாசவின் பேரினவாத மற்றும் மதவாத பிரித்தாளும் கொள்கை ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் சிந்தனைகள் மேலும் வெளிப்படும் விடயங்களாக மாறி உள்ளதுடன், இலங்கையின் அரசியலமைப்பின் 9ஆம் உறுப்புரையின் படி பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான இடத்தை தான் முழுமையாகப் பாதுகாப்பேன் என சஜித் பிரேமதாச தொடர்ச்சியாகவும், உணர்வு பூர்வமாகவும் தெரிவித்தும் வருகின்றார்.
அத்துடன், அண்மைக்காலமாக பௌத்த மதகுருமார்கள் மற்றும் பௌத்த சின்னங்கள் மீதான அவமதிப்புகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவர் தீவிரமாகப் பேசி வருகிறார். நாட்டின் பௌத்த பீடங்களின் (மகாநாயக்க தேரர்கள்) ஆசீர்வாதங்களைப் பெறுவதிலும், விகாரைகளை மையப்படுத்திய ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுப்பதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அவர் சிங்கள-பௌத்த வாக்குகளை இலக்கு வைக்கிறார் என்ற பார்வை வலுப்பெறுகின்றது.
மேலும், "பிக்குகள் சொல்வதை வாயை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று தனது தந்தை கூறியதாக" சஜித் பிரேமதாச அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் தெரிவித்த கருத்து, ஞானசார தேரர் போன்றவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கும், பேரினவாதப் போக்கிற்குத் துணைபோவதற்குமான அவரது வெளிப்படையான முயற்சி என்பதும் தெளிவாக அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியையும் இன, மத வேறுபாடுகளைக் கடந்த சமத்துவத்தையும் வலியுறுத்தி வரும் நிலையில், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களும், அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கும் கருத்துக்களும் புதிய அரசியல் விவாதங்களை நாட்டில் தோற்றுவித்துள்ளன.
இலங்கை அரசியலில் "காவி உடை, இன உணர்வு, மதச் சார்பு" ஆகிய சொற்கள் மீண்டும் ஒரு முறை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சக்திமிக்க துரும்புச் சீட்டுகளாக மாற்றுவதற்கான முயற்சிகளும் இடம் பெறுகின்றது என்ற கருத்துக்கள் தலை தூக்கியுள்ள இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற பிரதான கட்சிகள் காட்டும் அதீத ஆர்வமும், சஜித் பிரேமதாசவின் திடீர் அறிக்கைகளும் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல உள்ளிட்ட குழுவினர் கண்டி மகாசங்கத்தினரைச் சந்தித்து, தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அங்கு மூக்குடைந்து திரும்பிய சம்பவம் சஜித் பிரேமதாசவினதும் அவரது கட்சியினதும் உண்மையான முகத்தினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விடயங்களாக மக்கள் மத்தியில் பேசப்படும் முக்கிய விவாதங்களாகவும் மாறியுள்ளது.
அந்த வகையில் எமது தாய் நாட்டில் இனவாதம் இன்னும் ஒழியாமல், சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதற்குக் காரணம், கொள்கையற்ற இது போன்ற தலைவர்களும், அவர்களின் பின்னால் சுயமரியாதையை இழந்து நிற்கும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுமே என்பது, இன்று புதிஜீவிகள் மத்தியிலும், இளைஞர் சமூகத்தின் மத்தியிலும் அதிகமாக விவாதிக்கப்படும் விடயமாக உள்ளது.
அரசியல் கூட்டணிகளைப் பாதுகாப்பதைவிட சமூகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே முக்கியம். அதிகாரத்தைப் பெறுவதை விட இன நல்லிணக்கத்தைப் பேணுவதே உயர்ந்த அரசியல். மௌனமாக இருப்பதை விடவும் நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே உண்மையான தலைமைத்துவமாக பார்க்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியானது அரசியல் அதிகாரத்தின் பிடியில் இல்லாமல் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நிலையான கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். சகல இனங்களும் சகோதரத்துவதுடன் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதும், ஊழலற்ற புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான இலக்காகவும் உள்ளது.
அதனை உடைத்து மீண்டும் இந்த நாட்டில் மேட்டுக்குடி அரசியல் கலாச்சாரத்தினை கொண்டு வருவதற்கு சஜித் பிரேமதாசவை போன்ற ஐக்கிய தேசியக் கட்சியினால் பயிற்றுவிக்கப்பட்ட பேரினவாத சிந்தனையுள்ள தலைமைத்துவத்தின் கீழ் சுகபோக, சுயநல அரசியல் அதிகாரத்திற்கான ஆசையில் மூழ்கிக் கிடக்கும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களையும் சேர்த்துக்கொண்டு சகல சமூகத்தினரையும் இலகுவில் ஏமாற்றி விடலாம் என்ற கனவு தற்போதைய டிஜிட்டல் உலகில் செல்லாக் காசாகி வருகின்ற விடயமானது பாமர மக்கள் மத்தியிலும் பரவலாக ஊடுருவத் தொடங்கியுள்ளது.
மேலும், இனவாதம், மதவாதம் மற்றும் மேட்டுக்குடி அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றைக் கடந்து, இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, இன,மத, மொழி எனும் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இன மக்களும் சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.
சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனம், அரச நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, அதிகாரம், பதவி, இனம், மதம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை நடை முறையில் நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பல தசாப்தங்களாக மேட்டுக்குடி அரசியலின் நலன்களுக்காகப் பேணப்பட்ட அதிகார ஆதிக்கத்தையும், மக்களை இன, மத அடிப்படையில் பிரித்து அரசியல் இலாபம் தேடும் கலாச்சாரத்தையும் மாற்றியமைப்பது இலகுவான பணியல்ல. எனினும், மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஊழலற்ற நிர்வாகத்தையும், நீதியான சமூகத்தையும் உருவாக்குவதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்திவரும் அரசியல் உறுதியானது, புதிய இலங்கைக்கான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
எனினும், இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் சக்திகள், தமது பழைய அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் மீண்டும் நிலை நாட்டுவதற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்களா.? என்ற கேள்வியை மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தி மக்களைப் பிரித்த சக்திகள், இன்று ஜனநாயகம், மத உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு என்ற பெயர்களில் மீண்டும் அதே அரசியலுக்குப் புத்துயிர் கொடுக்க முயன்றால், அதனைத் தெளிவாக அடையாளம் காண்பது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.
குறிப்பாக, டிஜிட்டல் உலகில் கருத்துகளை உருவாக்கி, சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வை வழி நடத்தும் இளைய தலைமுறையும், இன, மத எல்லைகளைக் கடந்து சிந்திக்கும் புத்திஜீவிகளும், நடுநிலையான மக்களும் இத்தகைய பிரிவினைவாத அரசியலுக்கு பின்னால் உள்ளவர்களை இனம் காணும் விடயத்தில் முன்னின்று செயற்படுவது இந்த நாட்டின் எதிர்கால சந்ததிகளுக்கு செய்கின்ற பெரும் கைங்கரியமாகும்.
இலங்கையின் எதிர்காலம் மீண்டும் பழைய அரசியல் ஆதிக்கத்தின் கைகளுக்குச் செல்வதிலோ, இனவாத மோதல்களின் நிழலில் சிக்குவதிலோ இல்லை; மாறாக, சட்டத்தின் முன் சமத்துவம், நீதியின் சுயாதீனம், மனித நேயம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாச்சாரத்திலேயே தங்கியுள்ளது.
அந்த மாற்றத்தை முன்னெடுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் வழங்கும் ஜனநாயக ஆதரவும் விழிப்புணர்வும், வளமானதும் நீதியானதுமான இலங்கையை உருவாக்குவதற்கான மிக முக்கியமான பலமாக கட்டியெழுப்வதும், அதற்கு பின்னால் நின்று செயற்படுவது இந்த நாட்டினுடைய குடிமகன் என்ற வகையில் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகை,
23-10-2026
ස්වෝත්තමවාදයේ වෙස් මුහුණ; ශ්රී ලංකාවේ නව දේශපාලන වෙනසක අවශ්යතාවය!
ජාතික ජන බලවේගය රජය වාර්ගික ආගම් භේදයකින් තොරව නව දේශපාලන සංස්කෘතියක් සහ නීතියේ ආධිපත්යයක් ඇති කරද්දී ඇතැමුන් උත්සාහ කරන්නේ පැරණි මෙට්ටුකුඩි දේශපාලනය යළි ගෙන ඒමටය.
එක්සත් ජාතික පක්ෂය සහ එහි අනුප්රාප්තිකයා වන සජිත් ප්රේමදාසගේ එක්සත් ජනතා ශක්ති පක්ෂය මැතිවරණ බලය අල්ලා ගැනීම සඳහා ලිබරල්වාදයේ මුවාවෙන් ස්වෝත්තමවාදී ප්රතිපත්තිවලට නිරන්තරයෙන් යොමු වී ඇත.
සජිත් ප්රේමදාසගේ සමකාලීන දේශපාලන ක්රියාදාමයන් වන බෞද්ධ පීඨවල සහාය ලබා ගැනීම, බුද්ධාගමට ප්රමුඛත්වය දීම වැනි දේ සිංහල බෞද්ධ ඡන්ද ඉලක්ක කර ගත් උපක්රම විය.
+++++++++++++++++
එක්සත් ජාතික පක්ෂය (එජාප) ශ්රී ලාංකීය දේශපාලන ඉතිහාසය පුරා ලිබරල් සහ ජාතිකවාදී පක්ෂයක් ලෙස තමන්ව හඳුනාගෙන ඇතත්, එය ආරම්භයේ සිටම ස්වෝත්තමවාදී සහ බෙදුම්වාදී උපක්රම භාවිතා කළේ තම දේශපාලන බලය සහ මැතිවරණ ජයග්රහණය පවත්වා ගැනීම සඳහා ය.
නිදහස් ශ්රී ලංකාව උදාවන විට උඩරට දෙමළ ජනයාගේ පුරවැසිභාවයත් ඡන්ද අයිතියත් ඔවුන්ගේ ජීවිතත් ප්රශ්න කරන විටත්, දෙමළ ජනයාගේ පාරම්පරික ඉඩම්වල සැලසුම් සහගත ජනාවාස ඇති කරද්දීත්, භූගෝලීය ව්යුහය වෙනස් කරද්දීත්, මේ පක්ෂය දෙකඩ වීම උපායශීලී ආත්මාර්ථකාමී දේශපාලනයේ ආරම්භය බව හොඳම දේශපාලන නිරීක්ෂකයන්ගේ මතයයි.
1956 මහ මැතිවරණයේදී බණ්ඩාරනායකගේ ‘සිංහල පමණයි’ සටන් පාඨයට ස්වෝත්තමවාදීන් අතර විශාල සහයෝගයක් ලැබෙන බව දුටු එස්.ඩබ්ලිව්.ආර්.ඩී., 1956 දී බලය ලබා ගැනීමේ ද්විභාෂා ප්රතිපත්තිය අත්හැර ‘සිංහල පමණක් දෙමළ ජනතාව කෙරෙහි විශ්වාසය තැබූ ස්වෝත්තමවාදී සටන් පාඨයට යටත් විය.
එහි ප්රතිඵලයක් ලෙස එජාපයේ අමතක නොවන තිරය පිටුපස ජාතිවාදී දේශපාලනය සහ 1978 ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ ඓතිහාසික පාවාදීම්, බුද්ධාගම ව්යවස්ථාවට ඇතුළත් කරද්දීත්, 1983 ‘කළු ජූලිය’ ජන සංහාරයේදී ආණ්ඩුවේ නිහඬතාවයත් ප්රචණ්ඩත්වය අවුළුවා කුරිරු සිවිල් යුද්ධයක් ඇවිලවීමට හේතු විය.
සමකාලීන දේශපාලනයේ පවා මේ පක්ෂය දෙමළ හා මුස්ලිම් පක්ෂ සමඟ තාවකාලික සන්ධානගත වන්නේ මැතිවරණ සමයේදී පමණක් සුළු ජාතික ඡන්ද ලබාගැනීම සඳහාය. එහෙත් මැතිවරණයෙන් පසු ස්ථීර විසඳුමක් නොමැතිව බලය බෙදාගැනීම, ඉඩම් ප්රශ්න වැනි මූලික අයිතිවාසිකම් අත්හැරීමේ හැසිරීම අදටත් ජනතාව දකිනවා.
"එක්සත් ජාතික පක්ෂයේ සැබෑ අනන්යතාව ලිබරල්වාදයේ මුවාවෙන් ඓතිහාසික වශයෙන් සුළුතර ප්රජාවන්ට පිටුපසට පිහියෙන් ඇනීම සහ බහුතර දේශපාලනය අවුස්සමින් ජාතියේ බෙදීම් ගැඹුරු කිරීම බව මෑත මැතිවරණ ප්රතිඵලවලින් පැහැදිලි වී තිබේ."
ශ්රී ලංකා දේශපාලනයේ එක්සත් ජාතික පක්ෂයෙන් (එජාප) කැඩී ගිය එක්සත් ජනතා බලවේගයේ ප්රතිපත්ති සහ සමකාලීන ක්රියාකාරකම් මැතිවරණ දේශපාලනයේ බලය අල්ලා ගැනීමට සූදානම් වන බව මේ ආකාරයේ එක්සත් ජාතික පක්ෂයෙන් හැදී වැඩුණු සජිත් ප්රේමදාස මහතා පැවසීය. ස්වෝත්තමවාදී ප්රතිපත්ති සමඟ කටයුතු කරනවාට අමතරව සුළු ජාතීන් වැළඳ ගැනීමේ ප්රතිරූපය මෝහනය කර උපායශීලී දේශපාලන අවියක් ලෙස යොදාගෙන ඇති බව පැහැදිලි සහ පැහැදිලිව පෙනෙන්නට තිබේ.
සජිත් ප්රේමදාස මහතා මෑත කාලයේ සිංහල බෞද්ධ ස්වෝත්තමවාදී ප්රතිපත්තිවලට හසුවී ඇතැයි යන විවේචනය පිටුපස ප්රධාන දේශපාලන කරුණු කිහිපයක් තිබෙන අතරම එය දේශපාලන විශ්ලේෂකයන්ගේ සහ මහජනතාවගේ දැඩි අවධානයට ලක්විය යුතු කරුණක් ද වී තිබේ.
යථාර්ථය නම්, ජනාධිපතිවරණය ඇතුළු ශ්රී ලංකාවේ ප්රධාන මැතිවරණවලදී සමස්ත බහුතර බෞද්ධ ඡන්ද නොමැතිව ආණ්ඩුවක් පිහිටුවිය නොහැකි බවයි. මේ අනුව සජිත් ප්රේමදාස මහතා බෞද්ධ ප්රේමවලට ප්රමුඛත්වය දෙමින් බෞද්ධ සම්ප්රදායන් සක්රීයව අනුගමනය කරන පෙනුමක් ලබා දෙන බවට එල්ල වන විවේචනය පැහැදිලිවම හිස ඔසවා ඇත.
ස්වෝත්තමවාදී සහ ආගම්වාදී බෙදුම්වාදී ප්රතිපත්තිය හරහා බලය ලබා ගැනීමේ සජිත් ප්රේමදාසගේ සිතුවිලි දිනෙන් දින මතුවන ප්රශ්න බවට පත්වී ඇති අතර, සජිත් ප්රේමදාස ශ්රී ලංකා ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 9 වැනි වගන්තිය අනුව බුදුදහමට ලබා දී ඇති ප්රමුඛ ස්ථානය සම්පූර්ණයෙන්ම ආරක්ෂා කරන බව සජිත් ප්රේමදාස දිගින් දිගටම සහ දැනුවත්ව ප්රකාශ කළේය.
ඒ වගේම පසුගිය කාලයේ එතුමා පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතත් බෞද්ධ පූජ්ය පක්ෂයට සහ බෞද්ධ සංකේතවලට කරන අපහාසවලට එරෙහිව ක්රියාකාරීව කතා කළා. ඔහු මෙරට බෞද්ධ ප්රේක්ෂකයන්ගේ (මහානායක හිමිවරුන්ගේ) ආශිර්වාදය පතා විහාර කේන්ද්ර කරගත් අධ්යාත්මික හා සමාජීය වැඩකටයුතු ප්රවර්ධනය කිරීමට ක්රියාකාරීව යෙදී සිටින නිසා ඔහු ඉලක්ක කරන්නේ සිංහල බෞද්ධ ඡන්ද යැයි යන මතය ශක්තිමත් වේ.
එසේම සජිත් ප්රේමදාස මහතා අස්ක්රිය මහානායක හිමියන්ට “ඔහුගේ පියා කිව්වේ කට වහගෙන හාමුදුරුවන්ට ඇහුම්කන් දෙන්න” යැයි කීම ඥානසාර හිමි වැනි අය දඩුවමෙන් ගලවා ගැනීමටත් ස්වෝත්තමවාදී ප්රවණතාවයට සහය දීමටත් ගත් පැහැදිළි උත්සාහයකි.
අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය වාර්ගික ආගම් භේදයකින් තොරව නීතියේ ආධිපත්යය සහ සමානාත්මතාවය අවධාරණය කරද්දී ඥානසාර හිමි නිදහස් කිරීමට විරෝධය පළ කිරීම සහ විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා ඉදිරිපත් කළ අදහස් රට තුළ නව දේශපාලන සංවාදයක් ඇති කර තිබේ.
"කුංකුම ඇඳුම, වාර්ගික හැඟීම් සහ ආගමික නැඹුරුව" නැවත වරක් බලය අල්ලා ගැනීම සඳහා ප්රබල තුරුම්පු බවට පත් කර ගැනීමේ උත්සාහයන් පිළිබඳව ශ්රී ලාංකීය දේශපාලනය වඩ වඩාත් අවධානයට ලක්ව ඇති අවස්ථාවක, විපක්ෂ නායක සජිත් ප්රේමදාසගේ එක්සත් ජනතා ශක්ති (SJB) වැනි ප්රධාන ධාරාවේ පක්ෂ සහ ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ සහ සජිත් ප්රේමදාස ප්රජාව අතර හදිසි ප්රකාශය (SLPPP) එය මහත් කම්පනයක් සහ ගැඹුරු ප්රශ්න මතු කර ඇත.
එක්සත් ජනතා ශක්ති ලක්ෂ්මන් ක්රියාල්ල මහතා ඇතුළු පිරිසක් මහනුවර මහා සංඝරත්නය හමුවී වත්මන් රජය බෞද්ධ ප්රඥප්තියට එරෙහිව කටයුතු කරන බවට චෝදනා කර ආපසු හැරීමේ සිද්ධිය සජිත් ප්රේමදාසවින් ඇතුළු පිරිසගේ සැබෑ මුහුණුවර ජනතාව අතර ප්රබල සංවාදයක් බවට පත්ව තිබේ.
ඒ ආකාරයට අපේ මාතෘභූමිය තුළ තවමත් ජාතිවාදය තුරන් නොවීමටත් සුළු ජාතීන්ගේ අයිතීන් යටපත් වීමටත් හේතුව මෙවැනි ප්රතිපත්ති විරහිත නායකයන් සහ ඔවුන් පිටුපසින් ආත්මාභිමානය අහිමි වූ සුළු පක්ෂ නායකයන් නිසා බව අද තරුණ තරුණියන් සහ තරුණ ප්රජාව අතර වැඩි වශයෙන් කතාබහට ලක්වන කරුණකි.
දේශපාලන සන්ධාන ආරක්ෂා කරනවාට වඩා සමාජයේ ගෞරවය ආරක්ෂා කිරීම වැදගත්. ජනවාර්ගික සංහිඳියාව පවත්වාගෙන යාම බලය ලබාගැනීමට වඩා උසස් දේශපාලනයකි. සැබෑ නායකත්වය නිශ්ශබ්දව සිටිනවාට වඩා යුක්තිය පැත්තේ ස්ථිරව සිටීම ලෙස සලකනු ලැබේ.
මේ රටේ නීතියේ ආධිපත්යය දේශපාලන බලයේ ග්රහණයෙන් තොරව ස්වාධීනව ක්රියාත්මක විය යුතු බවට අනුරකුමාර් දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය ස්ථාවර ප්රතිපත්තියක සිට කටයුතු කරමින් සිටී. සියලු ජාතීන් සමානාත්මතාවයෙන් යුතුව එක්සත් ශ්රී ලංකාවක් තුළ එකට ජීවත්වීම සහතික කිරීම සහ දූෂණයෙන් තොර නව දේශපාලන සංස්කෘතියක් ස්ථාපිත කිරීම රජයේ ප්රධාන අරමුණයි.
එය බිඳ දමා මේ රටේ මෙට්ටුකුඩි දේශපාලන සංස්කෘතිය යළි ගෙන ඒම සඳහා සජිත් ප්රේමදාසවායි වැනි එක්සත් ජාතික පක්ෂය විසින් පුහුණු කරන ලද ස්වෝත්තමවාදී නායකත්වය යටතේ ආත්මාර්ථකාමී දේශපාලන බල තෘෂ්ණාවේ ගිලී සිටින සුළු පක්ෂ නායකයන් ඇතුළු සමස්ත ප්රජාවම ලෙහෙසියෙන් රවටා ගැනීමේ සිහිනය ගිහි ජනතාව අතර පුළුල් ලෙස පැතිරෙන්නට පටන් ගෙන තිබේ.
එපමණක් නොව ජාතිවාදය, ආගම්වාදය, ඉහළ පැලැන්තියේ දේශපාලන ආධිපත්යය පිටුදැකිය හැකි නව දේශපාලන සංස්කෘතියක් ශ්රී ලංකාව තුළ ඇති කර ජාති, ආගම්, භාෂා භේදයෙන් තොරව සමානාත්මතාවයෙන් හා අභිමානයෙන් ජීවත් විය හැකි රටක් ගොඩනැගීම අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ ප්රධානත්වයෙන් යුත් ජාතික ජනබල ආණ්ඩුවේ මූලික අරමුණයි.
නීතියේ ආධිපත්යය, අධිකරණයේ ස්වාධීනත්වය සහ රාජ්ය ආයතනවල වගවීම තහවුරු කිරීමටත්, බලය, නිලය, ජාති, ආගම් භේදයකින් තොරව නීතිය ඉදිරියේ සියලු දෙනාම එක හා සමානය යන ප්රජාතන්ත්රවාදී මූලධර්මය තහවුරු කිරීමට මේ රජය උත්සාහ දරමින් සිටී.
නීතියේ ආධිපත්යය, අධිකරණයේ ස්වාධීනත්වය සහ රාජ්ය ආයතනවල වගවීම තහවුරු කිරීමටත්, බලය, නිලය, ජාති, ආගම් භේදයකින් තොරව නීතිය ඉදිරියේ සියලු දෙනාම එක හා සමානය යන ප්රජාතන්ත්රවාදී මූලධර්මය තහවුරු කිරීමට මේ රජය උත්සාහ දරමින් සිටී.
මෙට්ටුකුඩි දේශපාලනයේ අවශ්යතා සහ ජාතීන් ආගම් වශයෙන් මිනිසුන් බෙදා දේශපාලන වාසි ලබාගැනීමේ සංස්කෘතිය වෙනුවෙන් දශක ගණනාවක් තිස්සේ පවත්වාගෙන ගිය බල ආධිපත්යය වෙනස් කිරීම පහසු කාර්යයක් නොවේ. කෙසේ වෙතත්, දූෂණයෙන් තොර පාලනයක් සහ ජනතා විශ්වාසය මත සාධාරණ සමාජයක් ගොඩනැගීමට අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ දේශපාලන අධිෂ්ඨානය නව ශ්රී ලංකාවක් පිළිබඳ බලාපොරොත්තුව ශක්තිමත් කරයි.
කෙසේ වෙතත් මේ වෙනස පිළිගත නොහැකි දේශපාලන බලවේග තම පැරණි බලය සහ දේශපාලන බලපෑම යළි ඇති කර ගැනීම සඳහා ජාතිවාදය, ආගම්වාදය ඇවිස්සීමේ උත්සාහයක නියැළෙමින් සිටිනවා. යන ප්රශ්නය ගැන ගැඹුරින් සිතන්නට මිනිසුන්ට බලකෙරෙන යුගයක අප සිටින්නේ.
එදා ජනවාර්ගික හා ආගමික හැඟීම් දේශපාලන අවි කර ගනිමින් ජනතාව බෙදීමට කටයුතු කළ බලවේග අද ප්රජාතන්ත්රවාදය, ආගමික අයිතිවාසිකම්, සමාජ සුරක්ෂිතතාව යන නාමයෙන් එම දේශපාලනයම යළි පණ ගැන්වීමට උත්සාහ දරන බව පැහැදිලිව හඳුනා ගැනීම සෑම පුරවැසියෙකුගේම වගකීමකි.
විශේෂයෙන්ම ඩිජිටල් ලෝකයේ මතවාද මවන, සමාජයේ දේශපාලන දැනුවත්භාවය මෙහෙයවන තරුණ පරපුර, ජාති ආගම් සීමා මායිම්වලින් ඔබ්බට සිතන බුද්ධිමතුන්, මධ්යස්ථ ජනතාව මෙවැනි බෙදුම්වාදී දේශපාලනය පිටුපස සිටින අය හඳුනා ගැනීමට පෙරමුණ ගැනීම මේ රටේ අනාගත පරපුරට මහඟු දායකත්වයක්.
ශ්රී ලංකාවේ අනාගතය පවතින්නේ පැරණි දේශපාලන ආධිපත්යයේ අතට හෝ වාර්ගික ගැටුමේ සෙවනැල්ලට නැවත පැමිණීම තුළ නොවේ; ඒ වෙනුවට එය රැඳී ඇත්තේ නීතිය ඉදිරියේ සමානාත්මතාවය, යුක්තියේ ස්වාධීනත්වය, මනුෂ්යත්වය සහ ජාතික සමගිය මත පදනම් වූ නව දේශපාලන සංස්කෘතියක් මත ය.
සමෘද්ධිමත් සාධාරණ ශ්රී ලංකාවක් ගොඩනැගීමට අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජන බල ආණ්ඩුවේ වෑයමට ජනතාවගේ ප්රජාතන්ත්රවාදී සහයෝගය හා දැනුවත්භාවය ගොඩනගා ඒ පිටුපස සිට ක්රියා කිරීම මේ රටේ පුරවැසියන් ලෙස සැමගේ යුතුකමයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත,
23-10-2026.
සිංහල පරිවර්තනය සමග) பேரினவாத முகமூடியும்; இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்திற்கான அவசியமும்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 23, 2026
Rating:


கருத்துகள் இல்லை: