கவலையும்- ஆறுதலும்!
கவலையும்- ஆறுதலும்!!
அண்மைய நாட்களாக நாட்டில் வலிந்து உருவாக்கப்பட்டு வரும் அரசியல் ஆர்ப்பாட்டங்கள்- அமளிதுமளிகள் மிகவும் கவலை தருகின்றன; மீண்டும் ஒரு இனவாத-மதவாத முரண்பாடுகள் - மோதல்களுக்குள் இந்த நாடு தள்ளப்பட்டு விடுமோ என்ற பெரும் அச்சம் ஏற்படுகிறது.
எல்லோரையும் சமமாக நடத்துகின்ற- சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட - எல்லோருக்குமான சுபீட்சமான ஒரு புதிய இலங்கையை கட்டி எழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் ஜனாதிபதி அனுர குமார அவர்களின் நேர்மையும் அர்ப்பணமும் கடந்த கால ஜனாதிபதிகளோடு ஒப்பிடும்போது சிறப்பாக இருக்கிறது.
"நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தாலும் எனது வார்த்தைகள் சட்டமாக முடியாது; நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றி அமைக்கின்ற எந்த ஒரு விடயத்தையும் செய்ய மாட்டோம்" என்ற ஜனாதிபதி அவர்களின் பகிரங்க அறிவிப்புகள் மிகுந்த நம்பிக்கையினையும் ஆறுதலையும் தருகின்றன.
இப்படியான சவால் மிக்க தருணத்திலும் கூட, தடுமாற்றம் இன்றி சந்தர்ப்பவாத அரசியல் இலாபங்கள் தேடாது, சட்டத்தினையும் மக்கள் வழங்கிய ஆணையினையும் மதித்து நடக்கின்ற முன்மாதிரியான உறுதியான வார்த்தைகளையும் நிலைப்பாடுகளையும் கடந்த கால ஜனாதிபதிகளிடத்தில் காணக் கிடைக்கவில்லை.
அதேவேளை ஜனாதிபதி அவர்களின் முயற்சிகளை முன்னெடுப்புகளை மழுங்கடிக்க செய்வதற்கான தீய சக்திகளின் முனைப்புகளும் கடும் வேகமாக மேலோங்கி வருகின்றன.
நம் மக்கள் மீதும் நம் தேசத்தின் மீதும் உண்மைக்கு உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் இந்த சவால் மிக்க கால கட்டத்தில் ஜனாதிபதி அவர்களின் தேசத்துக்கான நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் மிக மிக அவசியமாகும்.
Eng.Abdur Rahman.
கவலையும்- ஆறுதலும்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2026
Rating:

கருத்துகள் இல்லை: