மட்டக்களப்பு மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையம் பெருமைக்குரிய அடைவு!
சமூகத்திற்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் Facebook மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சுகாதாரத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்காக, மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையம் – மட்டக்களப்பு (DCC-Batticaloa) 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த சாதனையானது DCC – மட்டக்களப்பு குழுவினரின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் சிறந்த குழுப்பணியின் பிரதிபலிப்பாகும்.
சமூகத்தின் சுகாதார அறிவை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அனைத்து DCC பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
எமது மதிப்பிற்குரிய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.
R.முரளீஸ்வரன் (Sir) அவர்கள் DCC– மட்டக்களப்பு பணியாளர்களை பாராட்டி, விருதையும் வழங்கி கௌரவித்தார்.
மேலும், சமூக சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக ஊடகத் தளங்கள் ஊடாக தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் பல மக்களை சென்றடையுமாறு எம்மை ஊக்குவித்தார்.
எமது பணிகளுக்கு தொடர்ந்து வழிகாட்டலும் ஊக்கமும் வழங்கி வரும் மதிப்பிற்குரிய RDHS– மட்டக்களப்பு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
ஒற்றுமையுடன் செயல்பட்டு, சுகாதார விழிப்புணர்வை பரப்பி, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!
DCC– மட்டக்களப்பு குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Proud Achievement for DCC-Batticaloa!
We are delighted to share that District Chest Clinic – Batticaloa (DCC-Batticaloa) has secured 3rd Place for our efforts in providing health awareness and education to the community through Facebook and social media platforms.
This achievement reflects the dedication, creativity, and teamwork of the DCC-Batticaloa staff, who continuously work to share important health information and create greater awareness among the community through social media.
Our Respected RDHS – Batticaloa, Dr. R. Muraleeswaran (Sir), presented the award and expressed his appreciation for the commitment and teamwork of the entire DCC-Batticaloa team.
He also encouraged us to continue and further strengthen our health awareness activities through social media platforms, reaching more people and promoting a healthier community.
We sincerely thank our respected RDHS Sir for his valuable encouragement, guidance, and recognition.
Together, we will continue to spread health awareness, empower our community, and contribute towards a healthier Batticaloa!
Congratulations to the entire DCC-Batticaloa team!
மட்டக்களப்பு மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையம் பெருமைக்குரிய அடைவு!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2026
Rating:



கருத்துகள் இல்லை: