நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் பங்கேற்பு
300 மில்லியன் ரூபாய் செலவில் நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பன நிகழ்வு (24-09-2018 திங்கள்) இடம் பெற்றது.நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.
இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி போதை அற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு இன நல்லிணக்கத்தை இளம் தலைமுறையினரிடம் விதைக்கின்ற களமாகவும் இன்று ஏறாவூர் ஹிஜ்ரா நகரில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நவீன ஆடைத் தொழிச்சாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நடும் நிகழ்வு முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்த வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் IA.வாசித் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான SMASM.சரூஜ், SM.ஜெமில், MS.றியால் ST. பிரபா மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச உறுப்பினர்களான MSM.ஜஃபர், SM.கமால்தீன், MM.சாஜித் ஆகியோரும், அரபு தேசத்தின் தனவந்தர் அவர்களின் பிரதி நிதியாக கலந்து கொண்ட MB AS.றிழ்வான் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்MB. இஸ்மாயில் JP லூத்தா கைத்தொழிற்பேட்டையின் இலங்கைக்கான பணிப்பாளர் முகமட் பிரோஸ், மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ,இளைஞர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதோடு புன்னக்குடா வீதியினுடாக முதலமைச்சரையும் மற்றும் அதிதிகளை பொதுமக்கள் கௌரவித்து ஊர்வலமாக ஹிஜ்ரா நகரை நோக்கி அழைத்து சென்றனர்.
..
முன்னாள் முதலமைச்சர் உரையாற்றுகையில்...........
தனது ஆட்சிக்காலத்தில் கிழக்குமாகாண மூவின மக்களையும் ஒன்றினைத்தே எமது ஆட்சி அமைந்தது.
மேலும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளை கட்டியெழுப்ப இவ்வாறான தொழிற்பேட்டைகள் உறுதுனையாக இருக்கும்இனமதம் இன்றி வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரமும்,ஊரின் அபிவிருத்தியும்,போதையற்ற சமுதாயத்தையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் இலக்கு என்று சுட்டிக்காட்டினார்
மேலும் தனது ஆட்சிக்காலத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் 3தொழிற்சாலைகளை அமைத்து பல யுவதிகளுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கப்பட்டள்ளது. எனது ஆட்சி முடிவடையும் காலத்தில் மூதூர் (சீதனவெளி) ,மற்றும் சம்மாந்துறை போன்றவற்றில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளை திறந்துகொடுக்க முடியாத ஓர் அரசியல் கலாச்சாரம் இப்போது நடந்து கொண்டுள்ளது. எமது நாட்டின் முதுகெலும்பு எதிர்கால இளைஞர்களே
இவர்களின் திறமைகளும், முயற்சிகளும் போதிய வருமாணம் இன்றி வெளிநாடுகளில் அடகு வைக்கப்படுகின்றது. போதிய வருமாணம் இன்றி குடும்பத்தை வறுமையின் தாக்கத்தில் இருந்து மீட்க முடியாமல் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்
தகுந்த தொழில் இன்றி போதைவஸ்த்துக்கு அடிமையாகி வாழ்கையை கேள்விக்குறிக்குள் தள்ளிவிடுகின்றார்கள்இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளியாக இன்ஷா அல்லாஹ் இத்திட்டம் அமையும்.
மேலும் எதிர்காலத்தில்இன்னும் பல வேலைத்திட்டங்களை உருவாக்க உள்ளோம்
அனைத்து வழங்களையும் அடக்கிய தனியார்வைத்தியசாலை தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்து சுயதொழில்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு (மேசன், தச்சு,பிளம்பர்,இலக்ரிசன்,) அனைத்து உபகர்ணங்களையும் வழங்க உள்ளோம்
எமது ஊரில் எதிர்வரும் காலங்களில் தேவைப்பாட்டுக்கு உள்வாங்கப்படும் நவீன வசதிகள் அடங்கிய கலாச்சார மண்டபத்தை உருவாக்குவோம்
ஏறாவூர் நகரசபைக்கு அருகாமையில் முதற்கட்ட வேலைகளுடன் நிறுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தை மிகவிரைவில் உருவாக்குதல் போன்ற எதிர்கால திட்டங்களை முன்வைத்து தனது உரையில் தெளிவு படுத்தினார்.
நவாஸ்டீன்
நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் பங்கேற்பு
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 27, 2018
Rating:

கருத்துகள் இல்லை: