தென்றல் அலைவரிசையின் சிறுவர் தின நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தென்றல் அலைவரிசையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு 01ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் கலந்து சிறப்பித்தார். தலைநகரின் முன்னணி பாடசாலைகள் பலவற்றில் மாணவர்கள் மற்றும் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றிவரும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் சிதி பாறூக் மற்றும் பணிப்பாளர் ஏராந்த ஹெட்டி ஆராய்ச்சி, ஜனாதிபதி உரைபெயர்ப்பாளர் ராகுலன் , உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீட், சிரேஷ்ட அறிவிப்பாளர், வானொலி மாமா மயில்வாகனம் சர்வானந்தா, சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, அறிவிப்பாளர் செய்யது ரஸ்மி மௌலானா ஆகியோருடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்கள், ஊழியர்கள், பெ ற்றோர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தென்றல் அலைவரிசையின் சிறுவர் தின நிகழ்வு
Reviewed by We Are Anonymous
on
அக்டோபர் 03, 2018
Rating:

கருத்துகள் இல்லை: