மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர பிரதேசத்திலுள்ள 10 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகக் கற்கையைத் தெரிவு செய்துள்ள, உயர்தரத்தில் கற்கும் சுமார் 200 மாணவர்கள் இதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் வியாழக்கிழமை (04.10.2018) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமது எதிர்காலத்தைத் தெரிவு செய்யும்போது ஊடகவியல் பற்றிய அறிவையும் தம்வசம் கொண்டிருக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு
Reviewed by We Are Anonymous
on
அக்டோபர் 03, 2018
Rating:
கருத்துகள் இல்லை: