Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்தி, மஞ்சந்தொடுவாயில் புதிய தாய் சேய் பராமரிப்பு நிலையம் மற்றும் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலக்கான புதிய வைத்தியப்பிரிவு மற்றும் மின் பிறப்பாக்கி கையளிப்பு.



ஊடகப்பிரிவு

இன்று (30.08.2019) கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க ஆரையம்பதி வைத்தியசாலைக்கும் மற்றும் மச்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 



இவ்விஜயத்தின்போது வைத்தியசாலைகளின் குறைபாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை தரம் உயர்த்துவதுபற்றியும் ஆராயப்பட்டது. 

மேலும் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலையில் விடுதியில் தங்காது நாளாந்த சிகிச்சையினை பெறும்விதமான நாளாந்த சிகிச்சைப்பிரிவும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.



மேலும் இவ்வைத்தியசாலைக்கு மிக நீண்டநாள் தேவையாகயிருந்துவரும் மின்பிறப்பாக்கி (Generator) ஒன்றும் கையளிக்கப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் தாய்சேய் பராமரிப்பு நிலையம் ஒன்றும் அமைப்பது சம்பந்தமாக முன்மொழிவொன்றினை ஏற்கனவே முன்வைத்திருந்ததற்கமைவாக அதற்கு மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள காணியையும் இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார். 



இன்நிகள்வில் பிரதம அதிதியாக கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மட்டக்களப்பு தொகுதி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் பொறியியலாளருமான M. ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளருமான ULMN. முபீன் அவர்களும் யூனானி வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஜலால்டீன், முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் மர்சூக் அஹமட்லெப்பை, நகர சபை உறுப்பினர் TL.ஜவ்பர்கான், முன்னாள் காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் MI ஆதம்லெப்பை மௌலவி, காத்தான்குடி முதியோர் இல்லத் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் KMA அஸீஸ் மற்றும் முக்கிய ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்தி, மஞ்சந்தொடுவாயில் புதிய தாய் சேய் பராமரிப்பு நிலையம் மற்றும் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலக்கான புதிய வைத்தியப்பிரிவு மற்றும் மின் பிறப்பாக்கி கையளிப்பு. Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 30, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.