நாடுமுழுவதும் மதுபான, இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும்
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட வைபவத்துக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இன்று (04) சுதந்திர சதுர்க்கத்தில் நடைபெறவுள்ள இந்த வைபவம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை தயார் படுத்தப்படும் நிலையங்கள் முதலானவை மூடப்படுடவுள்ளன.
இதேபோன்று அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் இன்றைய தினம் மூடிவிடுமாறு அரச நிர்வாகம் உள்நாட்ட அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் மதுபான, இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 04, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 04, 2020
Rating:

கருத்துகள் இல்லை: