இலங்கை ஹஜ் குழுவின் தலைவரை காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இலங்கை அரசாங்கத்தினால் இவ்வருடம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள ஹஜ் நடைமுறைகள் சம்பந்தமாக தெளிவு பெற்றுக்கொள்ளுமுகமாக இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் அல்ஹாஜ். மர்ஜான் பழீல் அவர்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இதன்போது கடந்த 35 வருடகாலமாக சம்மேளனம் பொதுமக்களுக்கு ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாகவும், குறிப்பாக கடந்த 18 வருடங்களாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஹஜ் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹஜ் நடைமுறைகள் சம்பந்தமான அனுபவங்களையும் ஹஜ் குழுவின் தலைவர் அல்ஹாஜ். மர்ஜான் பழீல் அவர்களுடன் சம்மேளனம் பகிர்ந்து கொண்டது. ஹஜ் குழுவின் தலைவர் அவர்கள் சம்மேளன விடயங்களை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல் அவர்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்படும் ஹஜ் நடவடிக்கைகளை பாராட்டியதுடன், இவ்வாறான பொது நிறுவனங்கள் மூலம் ஹஜ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் இலங்கையில் ஹஜ் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது என தெரிவித்தார். சம்மேளன ஹஜ் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் எதிர்காலத்தில் கண்டிப்பாக வழங்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஹஜ் குழுவின் தலைவர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ள ஹஜ் நடைமுறைகள் சம்பந்தமாக சம்மேளன பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
இச்சந்திப்பில் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் MCMA. சத்தார் அதிபர், சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ALM. ஸபீல் நளீமி BA, சம்மேளன ஹஜ்குழுவின் ஹஜ் குழு தலைவர் அல்ஹாஜ் MTM. காலித் JP செயலாளர் ALZ. பஹ்மி, அல்ஹாஜ் MIM. சுபைர் CC, அல்ஹாஜ். மர்சூக் அஹமட் லெப்பை, அல்ஹாஜ் MLA. நாஸர் ஹாபிழ், மௌலவி ARM. மன்சூர் (பலாஹி) ஜனாப். AJ. அனீஸ் அஹமட் மற்றும் ஜனாப். MM. ஹலீம் அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை ஹஜ் குழுவின் தலைவரை காத்தான்குடி சம்மேளன பிரதிநிதிகள் சந்தித்தனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 12, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 12, 2020
Rating:





கருத்துகள் இல்லை: