ஜனாதிபதி - முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளதுடன், ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலதிகமான நேரம் அவர்கள் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அடுத்த பொதுத்தேர்தல் தொடர்பாக மற்றும் தேர்தலை இலக்காக கொண்டு உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களுக்குமிடையில் கருத்து பரிமாற்றல் இடம்பெற்றுள்ளது. விசேடமாக பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலசுகவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் ஸ்ரீலசுக எம்பிக்களுக்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தலைவர்கள் இருவரும் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலசுகவை பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர ஆகிய எம்பிக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.lnw
ஜனாதிபதி - முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 21, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 21, 2020
Rating:
கருத்துகள் இல்லை: