ஸ்ரீலசுக ரத்ன தேரருடன் இணைகிறது !
பொதுஜன பெரமுனவில் இருந்து நீங்கி ஸ்ரீலசுக சுதந்திர கட்சியாக பொதுத்தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த குழு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரருடன் இணைந்து அபே ஜன பல கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது
பொதுஜன பெரமுனவில் எதிர்பார்த்த வேட்புமனுக்கள் கிடைக்காததால் ஸ்ரீலசுக சுதந்திர கட்சி 23 மாவட்டங்களில் கை சின்னத்தில் தனியாக பொது தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்த போதிலும் ஸ்ரீலசுக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணியாக இருப்பதால் தற்போது அதன் தீர்மானத்திற்கு சட்டம் தலையிடுவதால் அவர்கள் ரத்ன தேரருடன் இணைய முடிவு செய்துள்ளனர்.
இதற்கமைய ஸ்ரீலசுக குழு அபே ஜன பல கட்சியில் வேட்புமனுக்காக கையெழுத்திடுவது ஆரம்பமாகியுள்ளது. ஸ்ரீலசுக முன்னாள் மேல் மாகாணசபை அமைச்சர் காமினி திலகசிறி அந்த வேட்புமனுக்காக கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கிடையில் பொது பல அமைப்பானது ரத்ன தேரருடன் இணைந்துள்ளதுடன் அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இந்த குழு அனைவரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்தனர், ஆனால் இப்போது எழுந்த நெருக்கடி நிலைமை காரணமாக தனி தனியாக பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.lnw

கருத்துகள் இல்லை: