சிறப்பாக இடம்பெற்ற"பெரிய ஹஸ்ரத்" நூல் வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும்..
முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன் மத்ரஸா, பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களின் நினைவு கவிதைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் உள்ளடங்கிய "பெரிய ஹஸ்ரத்" என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கவிதை எழுதிய மாணவர்கள் , மாணவிகள் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு வலையமைப்பின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஊடகவியலாளர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் அஷ்ஷேய்க் பாஸில் பாறூக் (இஸ்லாமி) தலைவர் கல்வி விவகாரப் பிரிவு குல்லியத்துல் அய்ன் அரபுக் கல்லூரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஜம் இய்யதுல் உலமா சபை மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மெளலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி) , ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மெளலவி எம்.ஏ.எம்.றஹ்மதுல்லாஹ் (பலாஹி) ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன்
மூத்த உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள், ஷைகுல் பலாஹ் அவர்களை நேசிக்கும் நல்லூள்ளங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நுாலையும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம்பெற்ற"பெரிய ஹஸ்ரத்" நூல் வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும்..
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2020
Rating:

கருத்துகள் இல்லை: