தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு!
“ஆறாம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும். ”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
“ தரம் ஒன்று மற்றும் ஆறிக்குரிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பமாகி இருந்தாலும் தரம் 6 ஆங்கில பாட திட்டம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் சிலர் இதனை அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தவறான கருத்துகளை விதைக்கின்றனர். இதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்படும். நம்பிக்கையுடன்தான் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்.
அதனால்தான் கால அவகாசம் வழங்கும் நோக்கில் தரம் ஆறிற்குரிய கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.
எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்.” – என்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 13, 2026
Rating:

கருத்துகள் இல்லை: