திட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மறுசீரமைப்புப் பணிகள் இந்திய அரசின் நிதி உதவியடன் ஆரம்பம்

அண்மையில் இடம்பெற்ற திட்வா சூராவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த இடங்களை மறுசீரமைக்கும் பணிகள் நேற்று (11) மஹவ சந்தி பிரதான புகையிரத நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் பலரின் பங்புபற்றலுடன் ஆரம்பமானது.
இந்த ரயில் பாதையின் மறுசீரமைப்பு பணிகள், 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டன, 370 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதையின் தற்போதைய குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் வேகம் மணிக்கு 100 கி.மீ ஆக அதிகரித்தல், காட்டு யானைகள் செல்வதற்கான நவீன சமிக்ஞை அமைப்புகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாக இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளது.
இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 5 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு மேலதிகமாக, இந்திய போக்குவரத்து சேவைகள், நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களுடன், வடக்கு ரயில் பாதை மற்றும் தலைமன்னார் ரயில் பாதையின் மறுசீரமைப்பு பணிகளை நேற்று (11) ஆரம்பமாகியது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 12, 2026
Rating:
கருத்துகள் இல்லை: