பெரிய ஹஸ்ரத் கவிதை தொகுப்பு வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும்..
காத்தான்குடி முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன் மத்ரஸா, பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களின் நினைவு கவிதைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் உள்ளடங்கிய "பெரிய ஹஸ்ரத்" என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீடும் கவிதை எழுதிய மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வும் (06.03.2020 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பி.ப. 3:30 க்கு இடம்பெறவுள்ளது.
பெரிய ஹஸ்ரத் என்று மரியாதையோடு அழைக்கப்படும் மத்ரஸத்துல் பலாஹ் அரபு கலாசாலையில் நீண்டகாலம் அதிபராக கடமையாற்றி பல நூறு உலமாக்களை உருவாக்கியவர் மரியாதைக்குரிய ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்கள். அது மாத்திரம் இல்லாமல் எமது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல தரப்பட்ட இன்னல்களின் போதும் சமூகத்திற்காக அல்லாஹ்வின் உதவியோடு நெஞ்சை நிமிர்த்து தைரியமாக நின்று களப்பணி செய்தவர்.
இவ்வாறு சமூகத்தில் கல்வி,ஆன்மீகம், சமூகப்பணி என சிறந்து வாழ்ந்த முன்மாதிரிமிக்க பெரியார்களை நினைவு படுத்தி எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்லும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதற்கு சான்றாகவே முஹாசபா வலையமைப்பு இப் பணியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தகது..
இந்நிகழ்வில் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், மாணவர்கள், ஷைகுல் பலாஹ் அவர்களை நேசிக்கும் நல்லூள்ளங்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் முஹாசபா வலையமைப்பு குழுமத்தினர்.
பெரிய ஹஸ்ரத் கவிதை தொகுப்பு வெளியீடும் கெளரவிப்பு நிகழ்வும்..
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 03, 2020
Rating:

கருத்துகள் இல்லை: