அரச அதிகாரிகளை கேலிக்கு உள்ளாக்கும் வீடியோக்களை விசாரிக்க விசேட பொலிஸ் குழுக்கள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளை கேலிக்கு உள்ளாக்கும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது மற்றும் அவற்றை பகிரும் நபர்கள் குறித்து விசாரணை செய்யவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மூன்று வீடியோக்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.lnw
அரச அதிகாரிகளை கேலிக்கு உள்ளாக்கும் வீடியோக்களை விசாரிக்க விசேட பொலிஸ் குழுக்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2020
Rating:

கருத்துகள் இல்லை: