திட்டமிட்டபடி ஜூன் 20ல் பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!
நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆக வேண்டும். தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால், அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் தடைவிதிக்காவிடின் திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
,இலங்கையில் கொரோனா வைரஸின்தாக்கத்தையடுத்து நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்தது.தேர்தலை ஒத்திவைக்கும் போது ஜூன் மாதம் 20ஆம் திகதிதேர்தல் இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆக வேண்டும். அதற்குரிய சகல அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.கொரோனா வைரஸ் தாக்கத்தையோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரும் யோசனையையோ அல்லது அரசமைப்பைக் காரணம் காட்டி வர்த்தமானி அறிவித்தல் விடயத்தையோ அல்லது வேட்புமனுத் தாக்கல் விவகாரத்தையோ காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.sor/nl
திட்டமிட்டபடி ஜூன் 20ல் பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 03, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 03, 2020
Rating:


கருத்துகள் இல்லை: