சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் OL. அமீர் அஜ்வத் மற்றும் காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர் இடையிலான சினேக பூர்வ சந்திப்பு
புனித உம்ரா கடமையினை நிறைவேற்ற குடும்பதுடன் சவூதி அரேபியா சென்றுள்ள நகர முதல்வர் SHM அஸ்பர் (20/01/2026) இன்று சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் OL. அமீர் அஜ்வத் அவர்களை அவர்களது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலின் போது
1.காத்தான்குடியில் சுற்றுலாத்துறையினை ஷரீஆ அடிப்படையில் கட்டி எழுப்புதல்.
2. சவுதி அரேபியாவில் உள்ள பல்கலை கழகங்களில் எமது ஊர் மாணவர்களை புலமைப் பரிசில் மூலமாக இணைத்துக் கொள்ளுதல்.
3.எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல்.
4.எமது பிரதேச வர்த்தகர்களை முதலீட்டாளர்களாக மாற்றி சவூதி அரேபியாவில் முதலீடுகளை மேற்கொண்டு தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலமாக எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குதல் போன்ற பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் எமது பிரதேசத்தில் உள்ள முக்கிய தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு எதிர்காலத்தில் காத்தான்குடி நகரசபை ரியாத் ஆளுநருடன் நட்புறவை ஏற்படுத்தி காத்தான்குடி நகரசபையின் திண்மக்கழிவகற்றல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும்.
தொடர்ச்சியாக சவுதி அரசாங்கத்துடன் இணைந்து காத்தான்குடி நகரசபைக்கு தேவையான அபிவிருத்தி பணிகள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் கலந்துரையாடி மிக விரைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் OL. அமீர் அஜ்வத் மற்றும் காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர் இடையிலான சினேக பூர்வ சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 20, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 20, 2026
Rating:




கருத்துகள் இல்லை: